ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருவதை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஜி20 உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில், ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த மாநாட்டில் பங்கேற்பதை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ், ஜெர்மனி பிரதமர் ஓலஃப் ஸ்கால்ஃப், இங்கிலாந்து பிரதமர் ரிஷி … Read more

சேகர் பாபுவின் அமைச்சர் பதவிக்கு பக்கா ஸ்கெட்ச்: பெரிய திட்டத்தோடு களமிறங்கும் அண்ணாமலை

தமுஎகச நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை டெங்கு, மலேரியா மற்றும் கொரோனாவுடன் ஒப்பிட்டுப் பேசினார். அத்துடன், சனாதனம் எதிர்க்கப்பட வேண்டியது அல்ல, ஒழிக்கப்பட வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தார். சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு தேசிய அளவில் விவாதப் பொருளாக மாற அவருக்கு எதிராக அமித்ஷா, ஜெ.பி.நட்டா என பாஜகவின் முன்னணி தலைவர்களே வரிந்துகட்டிக்கொண்டு கருத்து தெரிவித்தனர். இந்துக்களின் உணர்வை புண்படுத்திவிட்டதாக உதயநிதிக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டு … Read more

ஜெயிலர் வெற்றிக்கு காரணம் கமல் ஃபார்முலா: ரஜினிக்கு வேற லெவலில் ஒர்க்அவுட் ஆகிடுச்சு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவான ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகி வசூலில் புதுப்புது சாதனைகள் படைத்துள்ளது. இந்தியாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படமாக இருக்கிறது ஜெயிலர். டைகர் முத்துவேல் பாண்டியனை பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு இன்னும் சென்று கொண்டிருக்கிறார்கள். அதனால் படம் ரிலீஸான நான்காவது ஞாயிற்றுக்கிழமையான நேற்று கூட ரூ. 3 கோடி வசூல் செய்துள்ளது. அடங்குற ஆளா ஜெயிலர்!, 4வது ஞாயிற்றுக்கிழமையில் கூட மாஸ் வசூல்: எத்தனை கோடினு … Read more

சூர்யாவின் வாடிவாசல் பணிகளை தொடங்கிய வெற்றிமாறன்

சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அதேபோல் விடுதலை படத்தை அடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். இவர்கள் இருவரும் இணையும் வாடிவாசல் படத்தின் அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்ட நிலையில் இருவரும் அடுத்தடுத்து பிஸியாக இருப்பதால் இதன் படப்பிடிப்பு தொடங்காமல் உள்ளது. இந்நிலையில் வாடிவாசல் படத்தின் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் பணிகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதற்காக அடிக்கடி லண்டன் சென்று விட்டு வருகிறார் வெற்றிமாறன். விடுதலை-2 படத்தை அடுத்து வாடிவாசல் … Read more

லிப் லாக்.. படுக்கையறை காட்சி.. சகலமும் இருக்கும் குஷி படத்தில் சமந்தாவை பார்த்து கதறும் பேன்ஸ்!

சென்னை: குஷி படத்தில் வரும் படுக்கை அறை காட்சியில் சமந்தாவை பார்த்துவிட்டு ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர். நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் தியேட்டரில் வெளியானத் திரைப்படம் குஷி. இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், லக்‌ஷ்மி, ரோஹினி, வெண்ணிலா கிஷோர் என பலர் நடித்துள்ளனர். குஷி: மைத்ரி மூவி

'உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி' – வீடியோ வெளியிட்டு பகீர் கிளப்பிய அயோத்தி சாமியாரால் பரபரப்பு

அயோத்தி, அண்மையில் சென்னையில் நடைபெற்ற சனாதனம் ஒழிப்பு மாநாடு நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதனம் என்பது எதிர்க்கப்பட வேண்டியது அல்ல. அவை டெங்கு, கொரோனா போல ஒழிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இவரது பேச்சுக்கு கடும் கண்டங்களை பாஜக உள்ளிட்ட பாஜக ஆதரவு அமைப்புகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் , உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா என்பவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், சனாதன கொள்கைக்கு எதிராக பேசிய … Read more

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு 231 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நேபாளம்

பல்லகெலெ, ஆசிய கோப்பை தொடரில் பல்லகெலெவில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் இந்தியா – நேபாளம் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் முக்கியமான ஆட்டமாகும். இதில் வெற்றி பெறும் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து நேபாளம் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பாக விளையாடிய குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் … Read more

பாகிஸ்தானில் பயிற்சியின் போது ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 3 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான குவாடரில் சீ கிங் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் மீண்டும் தரைக்கு திரும்பும் போது தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. அதில் 2 பேர் அதிகாரிகள் எனவும் ஒருவர் பணியாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், முன்னாள் … Read more

காவிரி மேலாண்மை வாரியம் கடமையை நிறைவேற்ற தவறிவிட்டது: தமிழக அரசு

சென்னை: நடப்பாண்டில் தமிழகத்துக்கு கிடைக்கப் பெற வேண்டிய ஜூன் 1 முதல் ஆக.27 வரையிலான குறைபாட்டு நீரான 8.988 டிஎம்சியை, கர்நாடகா அளிக்க எந்த நடவடிக்கையும் காவிரி மேலாண்மை வாரியம் எடுக்காமலிருப்பது, அது தனது கடமையை நிறைவேற்றத் தவறிவிட்ட செயலாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2023-2024 பாசன ஆண்டில் கர்நாடகாவிடம் இருந்து உரிய நீர் பங்கைப் பெற காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு … Read more

செப்.14 வரை மட்டுமே ஆன்லைனில் ஆதார் அப்டேட் இலவசம்: நெருங்கும் கெடு தேதி!

சென்னை: வரும் 14-ம் தேதி வரையில் மட்டுமே ஆன்லைன் வழியே பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை ஆதார் அட்டை பயனர்கள் இலவசமாக புதுப்பிக்க முடியும். அதன்பிறகு அந்த சேவைக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிப்பது அவசியம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தது. அரசின் டேட்டாபேஸில் துல்லியத் தரவுகள் … Read more