தமிழகத்தில் வாரம் முழுவதும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு உஷார் அறிவிப்பு?

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் என ஒன்பது மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளைய தினம் (செப்டம்பர் 5) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி என மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேற்குறிப்பிட்ட இடங்களில் மட்டுமல்லாமல் இன்றும் … Read more

அதெப்படி விஜய் பற்றிய பேச்சை கட் பண்ணலாம்.?: வெடித்த சர்ச்சை.. சன் பிக்சர்ஸ் பரபரப்பு விளக்கம்.!

அட்லீயின் முதல் படமாக ‘ஜவான்’ உருவாகியுள்ளது. அவரது இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள இந்தப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. பான் இந்திய அளவில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இந்நிகழ்ச்சி டிவியில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டுள்ளதில் தற்போது சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. விஜய்க்கும், அவரது ரசிகர்களுக்கும் பேவரைட்டான இயக்குனர் என அட்லீயை சொல்லலாம். ராஜா ராணி படம் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்த அட்லீ, … Read more

புதுகார் வாங்கி அசத்திய மோனிஷா

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு, குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மோனிஷா. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையோடு சின்னத்திரை வந்தவருக்கு அந்த கனவும் நனவாகி மாவீரன் படத்திலும் நடிகையாக அறிமுகமாகிவிட்டார். அதுமட்டுமில்லாமல் தனது கல்லூரி படிப்பிலும் கோல்டு மெடல் வாங்கி அண்மையில் பாராட்டுகளை பெற்றார். இந்நிலையில், மோனிஷா உழைந்து சம்பாதித்த தனது சொந்த பணத்தில் புதிதாக கார் ஒன்றை வாங்கி அசத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள … Read more

Surya: லோகேஷின் கனவு திரைப்படம்.. பிரம்மாண்டமாக திட்டமிடப்படும் இரும்புக்கை மாயாவி!

சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதத்தில் படத்தின் சூட்டிங் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கங்குவா படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா படம், வெற்றிமாறன் படம் என சூர்யாவின் லைன் அப் சிறப்பாக உள்ளது. இதனிடையே லோகேஷ் இயக்கத்தில் முன்னதாக அறிவிக்கப்பட்ட இரும்புக்கை மாயாவி படமும் இந்த லைன் அப்பில்

பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம்.. தேசிய மாநாட்டு கட்சி தலைவர் மன்னிப்பு கேட்கவேண்டும்- மத்திய அரசு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, முதன்மை மனுதாரரரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கிய தலைவருமான அக்பர் லோன், கடந்த 2018ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பாகிஸ்தான் வாழ்க என முழக்கம் எழுப்பியதாகவும், அதற்காக இப்போது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்; நம்பர் 1 மற்றும் நடப்பு சாம்பியன் இகா ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி…!!

நியூயார்க், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் மற்றும் நம்பர் 1 வீராங்கனையான போலந்து நாட்டை சேர்ந்த இகா ஸ்வியாடெக் லாட்விய நாட்டை சேர்ந்த ஜெலினா ஓஸ்டபென்கோ உடன் மோதினார். இதில் முதல் செட்டை கைப்பற்றிய ஸ்வியாடெக் அடுத்த இரு செட்களில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 1 மணி நேரம் 48 நிமிடங்கள் நடந்த … Read more

காபோனில் ஆட்சி கவிழ்ப்பு.. இடைக்கால அதிபராக ஜெனரல் பிரைஸ் நிகுமா பதவியேற்கிறார்

மத்திய ஆப்பிரிக்க நாடான காபோன் நாட்டில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அலி போங்கோ ஒண்டிம்பா வெற்றி பெற்றார். இதன் மூலம் 3வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த தேர்தலில் அலி போங்கோ வெற்றி பெற்றது செல்லாது என்று போர்க்கொடி தூக்கிய ராணுவம் திடீரென கிளர்ச்சியில் ஈடுபட்டு கடந்த மாதம் 30ம் தேதி ஆட்சியை கவிழ்த்ததுடன், அதிகாரத்தை கைப்பற்றியது. அதிபர் அலி போங்கோ வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். இதன்மூலம் 55 ஆண்டுகால குடும்ப ஆட்சி … Read more

வாழ்த்துங்களேன்…

பிறந்த நாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம்… இவை போன்று இன்னும் பல்வேறு இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள்! வாழ்த்துங்களேன் அன்பார்ந்த வாசகர்களே! உங்கள் சக்தி விகடன் 20-ம் ஆண்டில் வெற்றிநடை போடும் இந்த இனிய தருணத்தில், உங்களுக்குப் பிடித்தமான வாழ்த்துங்களேன் பகுதி புதிய வடிவம் பெறுகிறது. பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் முதலான இனிய தருணங்களை முன்னிட்டு, உங்களுக்காக அல்லது உங்களின் உற்றார்-உறவினர் மற்றும் நண்பர்களுக்கான பிரார்த்தனைகளை, … Read more

"திரும்பத் திரும்ப அதையே சொல்வேன்" – சனாதன சர்ச்சை குறித்து உதயநிதி ஸ்டாலின்

தூத்துக்குடி: சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. இதனிடையே, தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது, “நேற்று முன்தினம் சனாதன தர்ம விழாவில் நான் எதைச் பேசினேனோ திரும்பத் திரும்பச் அதையே சொல்வேன். சனாதன விவகாரத்தில் நான் இந்துக்களை மட்டுமல்ல, எல்லா மதத்தினரையும் சேர்த்துதான் கூறினேன். சாதி வேறுபாடுகளைக் கண்டித்து அப்படி பேசினேன் அவ்வளவுதான்.” என்று விளக்கமளித்துள்ளார். முன்னதாக … Read more

"ஜூனியர் என்பதால் உதயநிதிக்கு இது தெரியவில்லை" – சனாதன சர்ச்சை குறித்து மம்தா பானர்ஜி கருத்து

கொல்கத்தா: உதயநிதி ஜூனியர் என்பதால் அவருக்கு இது குறித்து தெரியவில்லை என நினைக்கிறன் என்று சனாதன சர்ச்சை குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், “உதயநிதி ஸ்டாலினின் கருத்துகளைப் பொறுத்தவரையில், அவர் ஒரு ஜூனியர். அவர் எதற்காக, எந்த அடிப்படையில் கருத்து வெளியிட்டார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒவ்வொரு மதமும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மக்களை நான் மதிக்கிறேன். ஆனால் ஒவ்வொரு மதத்துக்கும் … Read more