Udhayanidhi: “இந்து மதத்தைக் கடைபிடிப்பவர்கள் சமூகநீதிக்கு எதிரானவர்களா?" – ஆர்.பி.உதயகுமார் கேள்வி

“ஒழித்துக் கட்டுவேன் என்கின்ற அந்த சொல், இந்து மதத்தின்மீதும், பண்பாட்டின்மீதும் நம்பிக்கை வைத்திருக்கிற மக்களுக்கு வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது” என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டித்திருக்கிறார். ஆர்.பி.உதயகுமார் சென்னையில் த.மு.எ.க.ச நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகள் சர்ச்சையாகியிருக்கின்றன. உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள், உதயநிதியின் பேச்சைக் கண்டித்து வருகிறார்கள். டெல்லி காவல் நிலையத்தில் உதயநிதி மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் … Read more

குலசை தசரா விழாவில் சினிமா பாடல், நடனங்களுக்கு தடை: கடந்த ஆண்டு உத்தரவை பின்பற்ற ஐகோர்ட் அறிவுரை

மதுரை: குலசேகரபட்டினம் தசரா விழா கலை நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம், பாடல்களுக்கு தடை விதித்து கடந்தாண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இந்தாண்டும் பின்பற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்: “குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா 12 நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். தசரா விழாவில் விரதம் இருக்கும் பக்தர்கள் கையில் காப்பு வேடுவர், ஆதிவாசி, பெண், காளி, சிவன், … Read more

இண்டியா கூட்டணியின் அடுத்த ஆலோசனை கூட்டம் போபாலில் நடைபெற வாய்ப்பு

புதுடெல்லி: இண்டியா கூட்டணியின் அடுத்த ஆலோசனை கூட்டம் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை பிடிஐ செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தலை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கின. இதன் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இரண்டாவது கூட்டம் பெங்களூரில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. மூன்றாவது கூட்டம் மும்பையில் அண்மையில் நிறைவடைந்தது. இந்நிலையில், இண்டியா … Read more

குஷ்பு நெகிழ்ச்சி.. நான் ஒரு முஸ்லீம்.. ஆனால் எனக்கு கோயில் கட்டினார்களே.. அதுதான் சனாதனம்!

சென்னை: சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்து இந்தியா முழுவதும் சர்ச்சையாகி வரும் நிலையில், பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். டெங்கு, மலேரியாவுடன் சனாதனத்தை ஒப்பிட்டு அதனை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசியிருப்பது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பாஜக தலைவர்கள் மட்டுமல்லாமல் இந்து அமைப்புகளும், சாமியார்களும் கூட எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். உதயநிதியின் தலையை கொண்டு வருபவர்களுக்கு … Read more

சாமி தரிசனத்திற்கு ரெடியா? இதோ ஆன்லைன் புக்கிங்… கர்நாடகா கோயில்களில் தரமான ஏற்பாடு!

கர்நாடகாவில் உள்ள கோயில்களை அம்மாநில இந்து சமய அறநிலையத்துறை (Muzrai) பராமரித்து வருகிறது. தற்போது அங்குள்ள பெரிய கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் பெண் பக்தர்களின் கூட்டம். இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஆளும் காங்கிரஸ் அரசின் சக்தி (Shakti) திட்டம். இதன்மூலம் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். பெண்களுக்கு இலவச பயணம் நாளுக்கு நாள் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. … Read more

Leo: அதைமட்டும் செய்தால் லியோ ஆயிரம் கோடி வசூலை தொடுமாம்..நல்ல ஐடியாவா இருக்கே..!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தை தான் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர். விஜய்யின் நடிப்பில் வெளியான கடைசி இரண்டு படங்களான பீஸ்ட் மற்றும் வாரிசு ஆகிய படங்கள் என்னதான் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனவே லியோ படத்தின் மூலம் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற விஜய் முடிவெடுத்துள்ளார். அதன் காரணமாகவே இப்படத்தை முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலிலேயே எடுக்க சம்மதித்துள்ளார் விஜய் என கூறப்படுகின்றது. இந்நிலையில் … Read more

'இவர்கள் ராவணன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்' உதயநிதிக்கு எதிராக புகார்..! விரைவில் விசாரணை

Udhayanidhi Stalin Vs Sanatana Dharma: சனாதன தர்மம் சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது எனக்கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது டெல்லி, பீகார் உட்பட பல இடங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்… அனிருத்துக்கு போர்ஷே கார் பரிசளித்த கலாநிதி மாறன்…

விக்ரம், பொன்னியின் செல்வன் ஏற்படுத்திய வசூல் சாதனையை முறியடித்து 600 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது ரஜினியின் ஜெயிலர் திரைப்படம். இந்தப் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்தை ஊக்கப்படுத்தும் விதமாக பெரிய தொகைக்கு செக் ஒன்றும் பி.எம்.டபுள்யூ காரையும் பரிசளித்தார் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். அதேபோல் இயக்குனர் நெல்சனுக்கும் ஊக்கத்தொகையும் போர்ஷே கார் ஒன்றையும் பரிசளித்தார். இந்த நிலையில் இந்தப் படத்தின் வெற்றிக்கு மற்றொரு காரணமாக இருந்த இசையமைப்பாளர் அனிருத்துக்கு போர்ஷே கார் … Read more

அமலாக்கத்துறை சோதனை : ரூ.2.32 கோடி பறிமுதல் | Enforcement Directorate raid: Rs 2.32 crore seized

புதுடில்லி :ராஜஸ்தானில், ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை செயல்படுத்துவதில் நடந்த முறைகேடு தொடர்பாக, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைகளில், 2.32 கோடி ரூபாய் ரொக்கம், தங்கக் கட்டிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. நம் நாட்டில் உள்ள கிராமங்களில், அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்பு வழங்கி, குடிநீர் வினியோகிக்கும் வகையில், மத்திய அரசின் நீர்வளத் துறை, ஜல் ஜீவன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. முதல்வர் அசோக் கெலாட் தலைமையில், காங்., ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில், இந்தத் … Read more

கோலாகலமாக நடந்த நாஞ்சில் விஜயன் திருமணம்

சின்னத்திரை நகைச்சுவை நடிகரான நாஞ்சில் விஜயனுக்கு கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், நாஞ்சில் விஜயன் யாரை திருமணம் செய்கிறார்? எப்போது திருமணம் செய்யப் போகிறார்? என்ற தகவல் எதையும் அவர் வெளியிடவில்லை. இந்நிலையில், நேற்றைய தினம் நாஞ்சில் விஜயனின் திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்து முடிந்துள்ளது. நாஞ்சில் விஜயனின் மனைவியின் பெயர் மரியா. இவர் விஜயனின் நண்பர்கள் மூலம் … Read more