இந்து முன்னணி நிர்வாகியின் ஆட்டோவில் மலம் வீசப்பட்ட விவகாரம்; அகில பாரத இந்து மகா சபை நிர்வாகி கைது!
திருநெல்வேலி டவுன், பகத்சிங் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரின் மகன் பெயர் மாயாண்டி. இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர், இந்து முன்னணியின் நெல்லை வடக்கு நகரத் தலைவராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில், இவருக்குச் சொந்தமான ஆட்டோவை வெள்ளிக்கிழமை இரவு (01.09.23) திருநெல்வேலி டவுன் காட்சி மண்டபம் அருகே நிறுத்தி வைத்திருந்திருக்கிறார் மாயாண்டி. மறுநாள் 02.09.23 அன்று காலையில் ஆட்டோவை எடுக்கச் சென்று பார்த்தபோது, ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியில் மர்ம நபர்கள் மனிதக்கழிவை வீசியிருந்ததைக் … Read more