இன்னொரு அம்பத்தி ராயுடுவாக மாறிப்போன சஞ்சு சாம்சன்! இப்படி நடந்துருச்சே

இந்தியாவில் விரைவில் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கான இந்திய அணியை இன்னும் ஓரிரு நாட்களில் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்க இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பே வெளியான தகவல்களில் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆகியோருக்கு வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இதில் திலக் வர்மா உலக கோப்பைக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்பு தான் கேள்விக்குறியாக மாறியுள்ளது.  அவருக்கு இந்திய அணியில் … Read more

iQOO Z7 Pro: 128ஜிபி ஸ்மார்ட்போனில் இத்தனை அம்சங்களா? விலை கேட்டால் ஆச்சரியப்படுவீங்க

iQOO புதிய ஸ்மார்ட்போன் புதிய iQOO Z7 Pro விற்பனை செப்டம்பர் 5 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு Amazon.in மற்றும் iQOO.com-ல் தொடங்கும். 21,999 விலையில் 128ஜிபி சேமிப்பகத்துடன் இரண்டு வகைகளில் இந்த போன் வெளியிடப்பட உள்ளது.  இந்த வேரியண்ட் 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது. இதன் விலை ரூ.22,999. சலுகைகளைப் பொறுத்தவரை, புதிய iQOO Z7 Pro ஆனது SBI கார்டு மற்றும் HDFC வங்கி அட்டை வைத்திருப்பவர்களுக்கு உடனடி தள்ளுபடி ரூ.2,000 … Read more

செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கலாம்! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அமைச்சர்  செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை குறித்து,  சிறப்பு நீதிமன்றம் மற்றும்  சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்  விசாரிக்க மறுத்த நிலையில்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, தலைமை … Read more

நான் சனாதன தர்மத்தை மதிக்கிறேன்.. யார் மனதையும் புண்படுத்தக் கூடாது: மம்தா பானர்ஜி பரபர பேச்சு

கொல்கத்தா: வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு என சனாதனம் தொடர்பான அமைச்சர் உதயநிதியின் கருத்துகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சிலவற்றை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். Source Link

காஷ்மீர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை| Kashmir: Terrorist Killed

ஸ்ரீநகர்: காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சாசான மாவட்டம் ரீசாய் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புபடையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்புபடையினர், மற்றும் ராணுவத்தினர் கூட்டாக தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது இரண்டு பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதை உறுதி செய்துஅப்பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது நடந்த என்கவுன்டரில் ஒருபயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டானர். ஒரு ஜவான் காயமடைந்தார்.தொடர்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடக்கிறது. ஸ்ரீநகர்: காஷ்மீர் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் … Read more

சிறுமிகளை நாசம் செய்யும் சைக்கோவை அழிக்கும் 'இறைவன்'

வாமணன், என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கிய அஹமத் இயக்கி உள்ள படம் 'இறைவன்'. இதில் 'தனி ஒருவன்' படத்திற்கு பிறகு ஜெயம் ரவியும், நயன்தாராவும் இணைந்து நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் வில்லனாக நடித்துள்ளார். ஹரி கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். படம் வருகிற செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் கதை இதுதான் : ஜெயம்ரவி ஒரு … Read more

மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே மூன்றாவது திருமணம்| Harish Salves third marriage in London

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வே,68, திரினா என்ற பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. லண்டனில் நடந்த இத்திருமண நிகழ்ச்சியில் முன்னணி தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். மூத்த வழக்கறிஞரான ஹரீஷ் சால்வே,68,கடந்த 1999 ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தார். பல்வேறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஆஜராகியுள்ளார். தற்போது பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் … Read more

Keerthy Suresh And Vijay – விஜய்யிடமிருந்து சத்தியமாக நான் அதை எதிர்பார்க்கவில்லை.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்

சென்னை: Keerthy Suresh And Vijay (கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய்) விஜய் அப்படி செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என கீர்த்தி சுரேஷ் கூறிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான் கீர்த்தி சுரேஷுக்கு ரஜினிமுருகன் திரைப்படம் பெரும் அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அழகும், திறமையும்

Swaraj Tractors – 40 முதல் 50 hp பிரிவில் 5 டிராக்டர்களை வெளியிட்ட ஸ்வராஜ் டிராக்டர்ஸ

உலகின் முன்னணி மஹிந்திரா டிராக்ட்ர் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ஸ்வராஜ் டிராக்ட்ர்ஸ் நிறுவனம் 40 முதல் 50 hp பிரிவில் 843 XM, 744 FE, 855 FE, 744 XT மற்றும் 742 XT என 5 மாடல்களை விற்பனைக்கு ரூ.6.95 லட்சம் முதல் ரூ.9.95 லட்சம் விலையில் அறிமுகம் செய்துள்ளது. 40-50 ஹெச்பி வகையிலான புதிய டிராக்டர் மாடல்களை தயாரிக்க இந்நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மாறுபட்ட புவியியல் மற்றும் … Read more

தம்பியைத் தொடர்ந்து மகன், மருமகனின் கட்சி பொறுப்புகள் பறிப்பு! – அமைச்சர் மஸ்தானுக்கு சிக்கலா?

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரான செஞ்சி மஸ்தான், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளராகவும் இருந்து வருகிறார். இவருடைய மகன் மொக்தியார் அலி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளராகவும்; மருமகன் ரிஸ்வான் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தனர். இந்த நிலையில், கட்சிப் பொறுப்புகள் நியமனம் தொடர்பாகவும், உள்ளாட்சி மற்றும் நகரமன்றத் தேர்தலில் தொண்டர்களுக்கு சீட் வழங்கியது தொடர்பாகவும் அமைச்சர் மஸ்தான் மீது கட்சியின் நிர்வாகிகளிடையே சர்ச்சை கருத்துக்கள் எழுந்தன. வாரிசு அரசியலுக்கு … Read more