பல்லடத்தில் கொல்லப்பட்ட 4 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: பல்லடம் அருகே மது அருந்தியதை தட்டிக் கேட்டதற்காக வெட்டிக் கொலை செய்யப்பட்ட 4 பேரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், மாதப்பூர் கிராமம், மஜரா கள்ளக்கிணறு அருகில் குரைதோட்டம் என்ற இடத்தில் நேற்று (செப்.3) இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மது அருந்திவிட்டு புஷ்பவதி (69) … Read more

உதயநிதியின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது: கரண் சிங்

புதுடெல்லி: சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசிய இருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி கூறியிருப்பது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தேசத்தின் கோடிக்கணக்கான மக்கள் சனாதன தர்மத்தின் கொள்கைகளை குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ பின்பற்றி வருகிறார்கள். அதுமட்டுமின்றி, உலகின் மிகப் பெரிய சனாதன தர்மக் கோயில்கள் … Read more

உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி – வாளோடு வரும் சாமியார் – காப்பு மாட்டுமா காவல் துறை?

சென்னையில் செப்டம்பர் 2ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசிய உதயநிதி, “சனாதனம் சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரானது. டெங்கு, மலேரியா, கொரோனா போல சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது” என்று பேசியிருந்தார். சனாதனம் தொடர்பான உதயநிதியின் பேச்சுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவிலும் வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அமித்ஷா, நட்டா என பாஜகவின் முன்னணி தலைவர்களின் உதயநிதியின் பேச்சை … Read more

சனாதன தர்மம்: வாய் திறந்த காங்கிரஸ்… உதயநிதி ஸ்டாலின் பேச்சிற்கு கே.சி.வேணுகோபால் பதில்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். குறிப்பாக தமிழக அரசியல் களத்தில் அண்ணாமலையின் நடைபயணம், அதிமுகவின் அட்டாக் அரசியல் உள்ளிட்டவை ஓரங்கட்டப்பட்டு விட்டன. மெயின் டாபிக்கே உதயநிதி ஸ்டாலின் பேசியது தான். முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இதற்கு பதிலடி கொடுக்கிறோம், கருத்து தெரிவிக்கிறோம் என்று அந்த விஷயத்தை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர். அப்படியென்ன பேசினார் எனக் கேட்கலாம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் … Read more

நயன்தாரா இன்ஸ்டாகிராமில் நுழைய இப்படியொரு காரணமா.?: பலே திட்டம்.!

அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜவான்’ படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தனது முதல் பாலிவுட் படத்திலே ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றி, அதனை சிறப்பாக செய்தும் முடித்துள்ளார் அட்லீ. ஒருப்பக்கம் இந்தப்படத்திற்கான புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வரும் நிலையில், படத்திற்கான டிக்கெட் முன்பதிவு பணிகள் முழு வேகத்தில் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஷாருக்கான் நடிப்பில் தனது முதல் இந்தி படத்தை இயக்கியுள்ளார் அட்லீ. நீண்ட காத்திருப்புக்கு பிறகு இந்தப்படத்தை … Read more

மகளின் கனவில் தோன்றிய வாசு.. ஆபத்தை கடந்து கண் ஆதி – இதயம் அப்டேட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியுள்ள புதிய சீரியல் இதயம். 

சாமியாரா? ரவுடி கூட்ட தலைவனா? உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி சன்மானம் அறிவித்த சாமியார்!

Jagadguru Paramhans Acharya: உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் சன்மானம் அறிவித்த சாமியார் ஒருவர், அவரின் தலையை எடுக்க தனது வாளும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மழை பெய்யுது.. ஆசிய கோப்பையை பாகிஸ்தானுக்கு மாத்துங்க

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இம்முறை பாகிஸ்தான் நடத்துகிறது. ஆனால், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துவிட்டதால் போட்டிகள் அனைத்தும் இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளன. செப்டம்பர் 17 ஆம் தேதி வரை கொழும்புவில் போட்டிகள் அனைத்தும் நடைபெறுகின்றன. ஆனால் அதில் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டியின் இரண்டாவது பாதி மழையால் கைவிடப்பட்டது. இன்னும் ஒரு மாதத்துக்கு கன மழை இருக்கும் என கூறப்பட்டிருப்பதால் போட்டியை வேறு … Read more

AI கேமராவுடன் Realme C51 அறிமுகம் – 28 நிமிடங்களில் சார்ஜ் ஆகும்: விலை இங்கே

Realme பட்ஜெட்-க்கு ஏற்ற ஸ்மார்ட்போன் சந்தையில் அதன் சமீபத்திய சேர்த்தல், Realme C51 ஐ அறிவித்துள்ளது. புதிய C51 ஆனது ரூ.10,000 விலையை இலக்காகக் கொண்ட 4G ஃபோன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் விரைவான சார்ஜிங், டூயல் கேமரா மற்றும் பிற அம்சங்கள் உள்ளன.  Realme C51 ஆனது 17.13cm (6.74”) 90Hz டிஸ்ப்ளேவை 90.3% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 50MP AI கேமரா உள்ளது.  இதில் 50MP பயன்முறை, வீடியோ, நைட் மோட், பனோரமிக் … Read more

தேசிய அளவில் பதக்கம் வென்ற 134 வீரர், வீராங்கணைகளுக்கு ஊக்கத்தொகை! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை:  தேசிய அளவில் பதக்கம் வென்ற 134 வீரர், வீராங்கணைகளுக்கு ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சயில், கேலோ இந்தியா உள்ளிட்ட போட்டிகள் மற்றும் தேசிய அளவில் பதக்கம் வென்ற  தங்கப்பதக்கம் பதக்கம் வென்ற 134 வீரர், வீராங்கணைகளுக்கு ரூ.2.24 கோடி ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.