மதுரையில் டிசம்பர் மாதம் எஸ்டிபிஐ கட்சியின் ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு’

மதுரை: எஸ்டிபிஐ கட்சி சார்பில் வரும் டிசம்பர் மாதம் ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு’ நடத்தப்படும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதங்களில் ஒன்று மதச்சார்பின்மை. ஆனால், தற்போதைய பாஜக ஆட்சியில் மதச்சார்பின்மை மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அரசியலமைப்பு சாசனத்திலிருந்து மதச்சார்பின்மை, சோசலிசம் வார்த்தைகளை நீக்கும் நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு செய்துவருகின்றது. நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும், … Read more

‘பேனர்கள், லஞ்சத்துக்கு அனுமதியில்லை’- மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் புதிய தேர்தல் வியூகம்

புதுடெல்லி: தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் இனி பேனர்கள், போஸ்டர்கள் இடம்பெறாது என்றும் மக்களுக்கு தேநீர் வழங்கப்படமாட்டாது என்றும் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு வாக்களிப்பவர்களும் அவ்வாறே செய்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் வாஷிமில் மூன்று நெடுஞ்சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்த அமைச்சர் நிதின் கட்கரி, நிகழ்ச்சியில் பேசும்போது, “இந்த மக்களவைத் தேர்தலில் எனது பிரச்சாரத்தில் பேனர்கள் வைக்கவோ, போஸ்டர்கள் ஒட்டவோ போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். … Read more

குன்னூரில் விபத்து… 8 பேர் பலி – பள்ளத்தில் விழுந்த சுற்றுலா பேருந்தில் தொடரும் மீட்பு பணி

Nilgris Bus Accident: உதகைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது, குன்னுார் – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மரப்பாலம் பகுதியில் தனியார் பேருந்து விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர். 

‘இது என் கடைசி உலக கோப்பை’ ரவிச்சந்திரன் அஸ்வின் உருக்கம்

உலக கோப்பைக்கான இந்திய அணி உலக கோப்பைக்கான இந்திய அணியில் கடைசிநேரத்தில் அக்சர் படேல் நீக்கப்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டார். முதன்முறையாக உலக கோப்பை அணி தேர்வு குறித்த பேச்சு எழும்போது அஸ்வின் பெயர் பரிசீலனைக்கு கூட எடுத்துக் கொள்ளப்படவில்லை. திடீரென அக்சர் படேல் காயமடைந்ததால் அதிர்ஷ்ட காற்று அஸ்வின் பக்கம் வீசியது. ஆசிய கோப்பை தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கு அவர் அழைக்கப்பட்டார். அதில் அவர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை … Read more

Vodafone Idea இந்த 4 திட்டங்களில் 5GB டேட்டா இலவசம்… ஹாட்ஸ்டாரும் கிடைக்கும்!

Vodafone Idea Free Data Benefits: ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்களுக்கு பின் Vi என்ற வோடபோன் ஐடியா நிறுவனம்தான் இந்திய தொலைத்தொடர்பு துறையில் மூன்றாவது பெரிய நிறுவனமாக உள்ளது. ஜியோ மற்றும் ஏர்டெல் கடுமையான போட்டியாளராக இருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களை ஈர்க்க, வோடஃபோன் நிறுவனம் மேலும் மேலும் பல கவர்ச்சிகரமான சலுகைகளையும் கொண்டு வருகிறது.  நீங்கள் வோடஃபோன்  ஐடியா வாடிக்கையாளராக இருந்தால், இது உங்களுக்கான பதிவுதான். வோடஃபோன் ஐடியாவின் சில சிறப்பு சார்ஜ் திட்டங்களைப் … Read more

விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2வது குழந்தை… உலக கோப்பை தொடருக்கு லீவு போடுவாரா கோலி ?

விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள ஒரு மகப்பேறு கிளினிக்கில் இந்த தம்பதியினர் காணப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியான நிலையில் அனுஷ்கா சர்மா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. 2017ல் திருமணம் செய்துகொண்ட விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதிக்கு 2021 ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அப்போது இந்திய அணியுடன் ஆஸ்திரேலியா பயணம் சென்ற கோலி … Read more

கலையரசனின் 'கொலைச்சேவல்'

ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரிக்கும் படம் 'கொலைச்சேவல்'. வி.ஆர்.துதிவாணன் இயக்குகிறார். இந்த படத்தில் கலையரசன், தீபா பாலு நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பால சரவணன், வெங்கட், கஜராஜ், ஆதவன் உள்பட பலர் நடிக்கிறார்கள். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார், சாந்தன் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் துதிவாணன் கூறும்போது “இது ஒரு மிகவும் அழகான காதல் கதை. அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது. அதே சமயம் சமுதாயத்திற்கு தேவையான மிக முக்கியமான கருத்து ஒன்றையும் இப்படம் … Read more

Thalaivar 170: “ரஜினியின் தலைவர் 170 Squad..” அபிஸியல் அப்டேட் ரெடி… லீட் கொடுத்த லைகா!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் கடந்த மாதம் வெளியாகி இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து லைகா தயாரிக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார். ரஜினியின் தலைவர் 170 படத்தை ‘ஜெய்பீம்’ புகழ் தசெ ஞானவேல் இயக்குகிறார். விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ள தலைவர் 170 அபிஸியல் அப்டேட்ஸ் நாளை (அக்.1) முதல் வெளியாகும் என

`என்னா அடி…' – WWE சண்டையாக மாறிய கிரிக்கெட் போட்டி; பங்களாதேஷ் நடிகர்களிடையே கடும் மோதல்!

உலகக் கோப்பை கிரிக்கெட் ஆரம்பிப்பதையொட்டி கிரிக்கெட் ஆர்வலர்கள் பல்வேறு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்தத் தொடங்கியுள்ளனர். இங்குத் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் முன்பு செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் நடத்தியதுபோல பங்களாதேஷில் சினிமா நட்சத்திரங்களுக்கான கிரிக்கெட் லீக் ஒன்றைத் தற்போது நடத்தி வருகின்றனர். அதில் இன்று பங்களாதேஷ் சினிமா தயாரிப்பாளர்கள் முஸ்தபா கமல் ராஜ் மற்றும் தீபங்கர் தீபன் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. Celebrity Cricket League has turned into WWE Royal Rumble. – … Read more

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.40 லட்சத்தில் இருதய எக்கோ பரிசோதனைக் கருவி

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் சார்பில் ரூ.40 லட்சத்தில் நவீன இருதய எக்கோ பரிசோதனைக் கருவி வழங்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலைய சமுதாய பொறுப்பு நிதியின் கீழ் ரூ.40 லட்சத்தில் நவீன இருதய எக்கோ பரிசோதனைக் கருவி வழங்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் கலந்துகொண்டு நவீன எக்கோ பரிசோதனை அறையை ரிப்பன் வெட்டித் … Read more