Tata nexon bookings – டாடா மோட்டார்சின் புதிய நெக்ஸான் எஸ்யூவிக்கு முன்பதிவு துவங்கியது

இந்தியாவின் பிரசத்தி பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி டாடா நெக்ஸான் காரின் 2023 ஆம் ஆண்டிற்கான மாடலுக்கு முன்பதிவு துவங்கபட்டுள்ளது. முற்றிலும் புதுப்பிக்கப்பட்ட டிசைன் அம்சங்கள் கூடுதல் வசதிகள் மற்றும் 6 ஏர்பேக்குகள் என பல்வேறு பாதுகாப்பு வசதிகளை பெற்றிருக்கின்றது. நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் காரில் தொடர்ந்து 1.2 லிட்டர் டர்போ மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டதாக விற்பனைக்கு செப்டம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. 2023 Tata Nexon bookings open புதிய நெக்ஸானில் … Read more

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி

கடந்த 2ஆம் திகதி இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்று இலங்கையுடன் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியால், 18 ஓவர்கள் முடிவில் 104 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது. பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 13.2 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. அணித்தலைவர் சமரி அத்தபத்து 31 பந்துகளில் 55 ஓட்டங்களையும், ஹர்ஷிதா சமரவிக்ரம … Read more

“பாஜக-வுக்கு முற்றுப் புள்ளி வைக்காவிட்டால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது" – ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஸ்டாலின், அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் லோக் சபா தேர்தலுக்கு இப்போதிலிருந்தே பா.ஜ.க-வை எதிர்த்து பிரசாரம் மேற்கொள்ளும் விதமாக, சமூக வலைதளங்களில் `இந்தியாவுக்காகப் பேசுகிறோம்’ என்ற தலைப்பில் `பாட்காஸ்ட் (Podcast)’ வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இன்று வெளியிடப்பட்ட பாட்காஸ்ட்டில் முதல்வர் ஸ்டாலின், “இந்திய மக்களின் ஒற்றுமை உணர்வைச் சிதைத்து, இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பையே சிதைக்க பா.ஜ.க முயல்கிறது. 2014-ல் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, தேர்தலுக்கு கொடுத்த எந்தவொரு மக்கள் நல வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. கறுப்பு பணத்தை … Read more

"பாஜக எனது கருத்தைத் திரித்து போலி செய்தியைப் பரப்புகிறது" – உதயநிதி ஸ்டாலின் கண்டனம்

சென்னை: சனாதன ஒழிப்பு மாநாட்டில் தான் சனாதானக் கொள்கையை அழிக்க வேண்டும் என்றே பேசியதாகவும் ஆனால் அதனை பாஜக திரித்து போலியான செய்திகளைப் பரப்புவதாகவும் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில் பேசுகையில், “நான் சனாதன தர்மத்தைத் தான் எதிர்த்தேன். அதை ஒழிக்க வேண்டும் என்றுதான் கூறினேன். அதனை நான் இங்கு மீண்டும் வலியுறுத்துகிறேன். எப்போதும் வலியுறுத்துவேன். ஆனால் சிலர் சிறுபிள்ளைத்தனமாக நான் இந்துக்கள் அழிப்பை ஊக்குவித்ததாகப் பேசுகின்றனர். திராவிடம் … Read more

மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி நியமனம்: மியான்மரில் தீவிரவாதிகளை அழிக்க சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியவர்

இம்பால்: மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி நெக்டர் சன்ஜென்பாம் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் மியான்மருக்குள் சென்று நாகா தீவிரவாதிகளை அழிக்கும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியுள்ளார். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைத்தேயி சமுதாயத்தினர் பழங்குடி அந்தஸ்து கோரி வருகின்றனர். இதற்கு குகி மற்றும் நாகா சமுதாய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக கடந்த மே 3-ம் தேதி மணிப்பூரில் மைத்தேயி, குகி சமுதாயத்தினருக்கு இடையே மிகப்பெரிய மோதல் … Read more

இத்தாலியில் நாஜிக்களால் கொல்லப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ.108 கோடி இழப்பீடு வழங்க உத்தரவு

ரோம்: கடந்த 1943-ம் ஆண்டு ஜெர்மனியின் நாஜிப் படையினர், இத்தாலியை ஆக்கிரமித்தனர். அப்போது அவர்கள், ஏராளமான இத்தாலி மக்களை கொன்று குவித்தனர். அந்த சமயத்தில், நாஜிப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டதற்காக, இத்தாலி மக்களுக்கு பொது தண்டனை வழங்க நாஜிப் படை முடிவு செய்தது. இத்தாலி மக்களில் 6 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை பொது இடத்தில் வைத்து நாஜிப் படை தூக்கிலிட்டது. இந்நிகழ்வு நடைபெற்று 80ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்துக்கு இழப்பீடு வழங்க … Read more

10,000 எஞ்சினியரிங் சீட்டா? அண்ணா பல்கலைக்கழகம் சர்ப்ரைஸ்… இதுல இப்படி ஒரு காரணம் இருக்காம்!

TNEA 2023 எனப்படும் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி சேர்க்கை கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கியது. முதலில் 7.5 சதவீத சிறப்பு இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மானவர்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. இதையடுத்து மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோருக்கான கவுன்சிலிங் நடைபெற்றது. ஜூலை 28ஆம் தேதி முதல் பொதுப் பிரிவினருக்கு கவுன்சிலிங் நடந்தது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் சில புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. பொறியியல் படிப்புகள் மீது ஆர்வம்ஆன்லைனில் மூன்று ரவுண்ட் கவுன்சிலிங்கின் … Read more

அடங்குற ஆளா ஜெயிலர்!, 4வது ஞாயிற்றுக்கிழமையில் கூட மாஸ் வசூல்: எத்தனை கோடினு தெரியுமா?

Jailer Blockbuster: ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீஸாகி 4 வாரங்கள் ஆகிவிட்டாலும் வசூல் நல்லபடியாக வந்து கொண்டே இருக்கிறது. ​ஜெயிலர்​நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரிலீஸான ஜெயிலர் படம் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆகஸ்ட் 15ம் தேதி வரை தான் ஜெயிலர் வசூல் நடக்கும் என்றார்கள். ஆனால் நான்காவது வாரத்திலும் ஜெயிலர் படம் தினமும் கோடிகளில் தான் வசூல் செய்து கொண்டிருக்கிறது.பவன் கல்யாண்​ஆந்திராவை அதிர … Read more

இந்திய கிரிக்கெட் அணி இந்த நாட்டுடன் இதுவரை விளையாடியது இல்லை!

Asia Cup 2023: 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு சனிக்கிழமை பல்லேகலேயில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் கைவிடப்பட்டது.  திங்கட்கிழமை இன்று இதே மைதானத்தில் நடைபெற உள்ள இந்தியா-நேபாள போட்டியிலும் இதேபோன்ற மழை அச்சுறுத்தல் உள்ளது, 80% வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பல்லேகலேயில் இன்று நடைபெறும் போட்டியும் கைவிடப்பட்டால், குழு A இலிருந்து சூப்பர் ஃபோர்ஸில் இந்தியா தனது பரம எதிரியான பாகிஸ்தானுடன் சேரும். இருப்பினும் இந்திய … Read more

பலரும் விஜய் ரசிகர்கள்; ஆனால், விஜய் இவருக்கு ரசிகர்! அட, யாருப்பா இந்த டென்சல் வாஷிங்டன்?

செப்டம்பர் மாதத்தின் ஆரம்பமே அமர்க்களமாக உள்ளது. படங்கள் வெளியாவதும், அதற்கு நல்ல விமர்சனங்கள் தெரிவிப்பதும், நிலாவில் மட்டுமா கால் வைப்போம் அடுத்து சூரியனுக்கும் ராக்கெட் விடுவோம் என்று இந்தியா சூரியனுக்கு ராக்கெட் செலுத்தியதும், நயன்தாரா புதிதாக இன்ஸ்டாகிராமிற்கு வந்ததும் என்று பல சுவாரஸ்ய செய்திகள் சமூக ஊடகங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், வெங்கட் பிரபு தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில், பதிவிட்ட ஒரு புகைப்படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகமெங்கும் இருக்கும் தமிழ் திரைப்பட ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை … Read more