லாலு பிரசாத் யாதவிடம் மட்டன் சமைக்க கற்றுக் கொண்ட ராகுல் காந்தி

புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் வீடு டெல்லியில் உள்ளது. அந்த வீட்டுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் சென்றார். அப்போது பிஹாரின் புகழ்பெற்ற சம்பிரான் மட்டன் சமைப்பது குறித்த செய்முறைகளை ராகுல் காந்திக்கு, லாலு பிரசாத் கற்றுக் கொடுத்தார். இதுதொடர்பான 7 நிமிட வீடியோவை காங்கிரஸ் நேற்று முன்தினம் வெளியிட்டது. லாலுவின் அறிவுரைப்படி ராகுல் மட்டன் சமைப்பதும், இருவரும் அரசியல் ரீதியாக உரையாடுவதும் வீடியோவில் இடம்பெற்றிருக்கிறது. மட்டனுக்கும், அரசியலுக்கும் … Read more

சாக்லேட், டூத்பேஸ்ட் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு அதிகரிப்பு: அமெரிக்க நிறுவனங்கள் கவலை

நியூயார்க்: பொருளாதார மந்தநிலையால் அன்றாட செலவை சமாளிக்க, அமெரிக்காவில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் டூத்பேஸ்ட், சாக்லேட், வாஷிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை வாடிக்கையாளர்கள் திருடுவது அதிகரித்து வருவதாக, வால்மார்ட், டார்கெட் உள்ளிட்ட முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. சில வாடிக்கையாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு திருட்டில் ஈடுபடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுபோல சிவிஎஸ் மற்றும் வால்கிரீன்ஸ் உள்ளிட்ட சங்கிலிதொடர் மருந்து விற்பனை நிறுவனங்கள், வீட்டு மேம்பாட்டு நிறுவனமான ஹோம் டெப்போ மற்றும் காலணி விற்பனையாளரான புட் … Read more

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? ஓபிஎஸ் நடத்திய கருத்துக் கணிப்பு – எடப்பாடிக்கு ஷாக்!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வரும் நிலையில் மக்கள் மன்றத்தை நாடி புரட்சிப் பயணத்தை தொடங்கியுள்ளார். காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெற இருந்த முதல்நாள் பொதுக்கூட்டம் மழையால் ஒத்திவைக்கப்பட்ட நிலையிலும் தனது பயணத்தை தொய்வின்றி தொடர்ந்துள்ளார் ஓபிஎஸ். ஓபிஎஸ் அடுத்த பிளான்!அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு தனக்கான அடித்தளத்தை வலுவாக போட்டுள்ள நிலையில் … Read more

iOS 17 அப்டேட் வரப்போகும் ஐபோன் மாடல்களின் பட்டியல்! இந்த மாதமே வெளியாக வாய்ப்பு!

கடந்த ஜீன்‌ மாதத்தில் இருந்து iOS 17 beta நிலையில் இரண்டு வகைகளில் டெவலப்பர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் வெவ்வேறாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மாதம் அதிகாரப்பூர்வ பயன்பாட்டிற்கு iOS 17 வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 12 ஆப்பிள் நிகழ்ச்சி செப்டம்பர் 12ம் தேதி ஆப்பிள் இன்க் நிறுவனம் தனது வருடாந்திர நிகழ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதில், ஐபோன் 15 சீரிஸ் மற்றும் இதர ஆப்பிள் தயாரிப்புகளும் வெளியாக உள்ளன. ஐபோன் 15 கண்டிப்பாக iOS 17 … Read more

ரஜினி ஒரு சித்தர்.. அவருக்கு எல்லாமே தெரியும் – பிரபல நடிகர் பேச்சு!

நடிகர் ரஜினி ஒரு சித்தர். அவர் அரசியலுக்கு வராமல் நிம்மதியாக, சும்மா இருக்கட்டும் என மதுரையில் நடிகர் சரவணன் பேட்டி அளித்துள்ளார்.  

சஞ்சு சாம்சன் தவிர மேலும் 2 வீரர்கள் உலக கோப்பை அணியில் இருந்து நீக்கம்!

இந்திய தேர்வாளர்கள் 2023 ODI உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும், விரைவில் அது பொதுவெளியில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. செப்டம்பர் 2-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம் கைவிடப்பட்ட பிறகு தேர்வு கூட்டம் நடந்ததாக பரபரப்பான செய்திகள் வெளியானது.  பாகிஸ்தான் போட்டியைத் தொடர்ந்து, தேர்வாளர்கள் வீரர்களைத் தேர்ந்தெடுத்தனர். அணியில் பெரிய ஆச்சரியங்கள் எதுவும் இல்லை மற்றும் தேர்வாளர்கள் இலங்கைக்கு பயணித்த குழுவிலிருந்து வீரர்களைத் தேர்ந்தெடுத்தனர். விரைவில் இலங்கைக்கு தரையிறங்கும் கே.எல்.ராகுல் அணியில் தனது … Read more

சனாதன கோட்பாடு ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்… உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்…

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கு எதிரான சனாதனத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்று ஒழிக்க வேண்டும்” என்று பேசினார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு அமித் ஷா, ஜெ.பி. நட்டா உள்ளிட்ட பாஜகவின் முன்னணி தலைவர்களின் கண்டனத்துக்கு உள்ளாகி இருப்பதுடன் உதயநிதிக்கு எதிராக ஒட்டுமொத்த பாஜக-வினரை தூண்டும் விதமாக அமைந்துள்ளது. தவிர, சனாதன தர்மம் என்பது இந்து தர்மத்தை குறிப்பது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் … Read more

ஒடிசாவில் மின்னல் தாக்கி 12 பேர் பலி; 14 பேர் காயம்| 12 killed in lightning strike in Odisha; 14 people were injured

புவனேஸ்வர் ஒடிசாவில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், எட்டு மாவட்டங்களில் மின்னல் தாக்கி, 12 பேர் பலியாகினர்; 14 பேர் படுகாயம் அடைந்தனர். ஒடிசாவில் புவனேஸ்வர், கட்டாக் உட்பட கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. புவனேஸ்வரில் நேற்று முன்தினம் ஒன்றரை மணி நேரத்தில் மட்டும் 12.6 செ.மீ., மழை பதிவானது. இதற்கிடையே குர்தா மாவட்டத்தில் கனமழையின் போது மின்னல் தாக்கியதில் நான்கு பேரும், போலங்கீர் பகுதியில் … Read more

இரண்டு நாளில் 51 கோடி வசூலித்த 'குஷி'

ஷிவா நிர்வானா இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா, சமந்தா மற்றும் பலர் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் 'குஷி'. இப்படம் முதல் நாளில் 30 கோடி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இரண்டாவது நாளில் மேலும் 21 கோடி வசூலித்து தற்போது 51 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். தெலுங்கில் தயாரான இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியானது. தமிழகத்தில் 'ஏ' சென்டர்களில் படத்திற்கு … Read more