‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது சர்வாதிகாரத்துக்கான சதி திட்டம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
சென்னை: அதிபர் முறையை கொண்டுவர வேண்டும் என்பதற்காகவே ‘ஒரேநாடு, ஒரே தேர்தல்’ என்ற முயற்சியில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டுவருகிறது. இது சர்வாதிகாரத்துக்கான சதி திட்டம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: யார் பிரதமராக வர வேண்டும், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது அல்ல; யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் நம் லட்சியமாக, நோக்கமாக இருக்கவேண்டும். ‘இண்டியா’ என்றாலே பலருக்கு பயம் ஆகிவிட்டது. … Read more