'எக்ஸ்' தளத்தில் பயனரின் ஒப்புதலுடன் மட்டுமே 'பயோமெட்ரிக்' தகவல்கள்:எலான் மஸ்க் அறிவிப்பு

வாஷிங்டன், பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் டுவிட்டர் சமூக வலைதளத்தை கடந்த அக்டோபர் மாதம் வாங்கினார். அதில் இருந்து பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். ஜூலை பிற்பகுதியில், டுவிட்டரின் லோகோ மாற்றப்பட்டு ‘எக்ஸ்’ சமூக வலைதளமாக மாறியது. தற்போது எலான் மஸ்க்கின் எக்ஸ் நிறுவனம் கைரேகைகள் உள்பட பயோமெட்ரிக் தகவல்களை சேகரித்து வருகிறது. ஆகஸ்டு மாதம் இறுதிவரை எக்ஸ் சமூக வலைதளம் பயோமெட்ரிக் தகவல்கள் எதையும் கேட்டது இல்லை. தற்போது பயனர்களின் ஒப்புதலின் அடிப்படையில் பாதுகாப்பு, … Read more

அவிநாசி: டயர் வெடித்து விபத்துக்குள்ளான கார்; இசையமைப்பாளர் உள்ளிட்ட இருவர் பலியான சோகம்!

சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் தசி என்கிற சிவகுமார், மூவேந்திரன், தமிழ் அடியான், நாகராஜ். ரியல் எஸ்டேட் செய்துவரும் நாகராஜுடன் தொழில் சம்பந்தமாக கேரளத்துக்கு நண்பர்கள் 4 பேரும் கடந்த சில நாள்களுக்கு முன்பு காரில் சென்றுள்ளனர். அங்கு வேலை முடிந்த பின்னர் கேரளத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். பலியானவர்கள் திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பழங்கரையில் புறவழிச்சாலையில் இன்று மதியம் சென்று கொண்டிருந்தபோது, காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் இருந்த … Read more

20 நாளுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்: எட்டயபுரத்தில் தாகம் தீர்க்க தவிக்கும் மக்கள்

கோவில்பட்டி: எட்டயபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 15 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சீவலப்பேரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தற்போது 20 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் போதுமானதாக இல்லாததால், எட்டயபுரம் பேரூராட்சி பகுதி மக்கள் டேங்கர் மூலம் குடிநீர் விற்பனை செய்யும் வாகனங்களை நம்பியே உள்ளனர். எனவே, எட்டயபுரம் பேரூராட்சிக்கு என தனியாக குடிநீர் … Read more

`ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ஆய்வுசெய்ய ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் குழு

புதுடெல்லி: `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து ஆய்வுசெய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: 1951 முதல் 1967 வரை மக்களவை, சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. பின்னர் இந்த நடைமுறை சீர்குலைந்தது. தற்போது ஒவ்வோர் ஆண்டும் ஏதாவது தேர்தல் நடத்தப்பட்டு வருவதால் செலவு அதிகரிப்பதுடன், அரசு ஊழியர்கள், பாதுகாப்புப் படை … Read more

"பாகிஸ்தானை இந்தியா பகைத்திருக்கக் கூடாது".. சீமான் திடீர் பேச்சு

நீலகிரி: பாகிஸ்தானுடன் இந்தியா பகையாக மாறி இருக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானுக்கு இந்தியா பிரசவம் பார்த்ததாகவும் சீமான் கூறியுள்ளார். நடிகை விஜயலட்சுமி கொடுத்துள்ள புகாரின் பேரில் சீமான் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதனிடையே, நேற்று இரவே அவர் கைது செய்யப்படுவார் எனக் கூறப்பட்டது. ஆனால், சீமான் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில், நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த … Read more

மக்களவை தேர்தல் 2024: பாஜக தீட்டிய மெகா சோஷியல் மீடியா பிளான்… பெருசா இறங்கும் வாரியர்ஸ்!

இந்திய அரசியல் களம் பரபரப்பிற்கு பஞ்சமின்றி சென்று கொண்டிருக்கிறது. 2024 மக்களவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் மும்முரமாக காய் நகர்த்தி வருகின்றன. ஒருபக்கம் தேசிய ஜனநாயக கூட்டணி, மறுபக்கம் இந்தியா கூட்டணி. ஆலோசனை கூட்டங்கள் நடத்துவது, தேர்தலுக்கான களம் அமைப்பது என அனல் பறக்கிறது. இதற்கிடையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. பாஜகவின் சோஷியல் மீடியா வாரியர்ஸ்ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்றி ஒட்டுமொத்த நாட்டையும் கதிகலங்க வைத்து விடுவார்களா? என்ற அச்சம் … Read more

கத்ரீனா கைஃபை முந்திய நயன்தாரா: இன்ஸ்டாகிராமில் புது சாதனை

கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா ஆகஸ்ட் 31ம் தேதி இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கினார். தன் இரட்டை மகன்கள் உயிர், உலகுடன் ஸ்டைலாக நடந்து வந்த வீடியோவை வெளியிட்டு வந்துட்டேனு சொல்லு என போஸ்ட் போட்டார். மகன்களின் முகத்தை முதல் முறையாக காட்டிய நயன்தாரா: விக்னேஷ் சிவனிம் மன்னிப்பு கேட்கும் ரசிகாஸ் நயன்தாரா இன்ஸ்டாகிராமுக்கு வந்ததில் ஒரு சந்தோஷம் என்றால், உயிர், உலகின் முகத்தை முதல் முறையாக பார்த்ததில் தனி சந்தோஷம் என அன்றைய தினம் … Read more

ஓணத்தை முன்னிட்டு 7027 பெண்கள் இணைந்து நடனமாடி உலக சாதனை

திருச்சூர் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 7000க்கும் அதிகமான பெண்கள் இணைந்து நடனமாடி உலக சாதனை புரிந்துள்ளனர். கேரள மாநிலத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று திருவாதிரை நடனம் ஆகும்  இந்த நடனம் ஓணம் பண்டிகையின் அங்கமாக நடைபெறுகிறது.  இந்த நடன விழாவில் திரளான பெண்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடிப் பாடலுடன் ஆடலாய் கவனம் ஈர்ப்பார்கள். பெண்கள் எண்ணிக்கை அதிகமாக கூடுவதைப் பொறுத்து திருவாதிரை நடனத்தின் பிரமாண்டம் அமையும். திருச்சூர் குட்டநெல்லூர் அரசுக்கல்லூரி மைதானத்தில், மாவட்ட அளவிலான ஓணம் … Read more

வசூலில் புதிய சாதனை படைக்கும் 'கடார் 2'

அனில் சர்மா இயக்கத்தில், சன்னி தியோல், அமிஷா பட்டேல் மற்றும் பலர் நடிக்க ஆகஸ்ட் 11ம் தேதி வெளிவந்த படம் 'கடார் 2'. சுமார் 60 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்படும் இந்தப் படம் 600 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. இந்தியாவில் மட்டும் மிகக் குறைந்த நாட்களில், அதாவது 24 நாட்களில் 500 கோடி ரூபாய் வசூலைக் கடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நேற்று வரையிலும் 490 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இன்று … Read more

Jailer: மெகா பிளாக்பஸ்டர்.. இந்த வாரமும் நான்ஸ்டாப் ரன்னிங்.. வசூல் மட்டும் இத்தனை கோடியா?

சென்னை: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான நிலையில், 25வது நாள் கொண்டாட்டத்தையே சன் பிக்சர்ஸ் தற்போது கொண்டாடி உள்ளது. மெகா பிளாக்பஸ்டர் என்றும் தமிழ் சினிமாவில் இதுவரை எந்த சினிமாவும் செய்யாத வசூல் சாதனையை ஜெயிலர் செய்திருப்பதாக ரெக்கார்டு மேக்கர் என்பதை குறிப்பிட்டு ரஜினிகாந்தின் ஃபிளாஷ்பேக் போர்ஷன்