7பி, 22பி, 23சி, 47டி, எல்70 எல்லாம் நல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு… – பேருந்து சேவை குறைப்பால் கொரட்டூர் மக்கள் ஆதங்கம்

சென்னை: சென்னையின் முக்கிய பகுதியான கொரட்டூர் மக்களின் போக்குவரத்து தேவையை மாநகர போக்குவரத்துக் கழகம் நிறைவேற்றி வருகிறது. ஆனால் கொரட்டூர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட பெரும்பாலான பேருந்துகளின் சேவை தற்போது நிறுத்தப் பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த ஜி.நாகராஜன் கூறியதாவது: கொரட்டூரில் இருந்து நல்ல முறையில் இயங்கி வந்த பல பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 7பி, 22பி, 23சி, 47டி, எல்70என 5 நகரப் பேருந்துகளுக்கு மக்களிடம்எப்போதும் வரவேற்பு … Read more

இண்டியா கூட்டணி சனாதன தர்மத்தை இழிவுபடுத்துகிறது – உதயநிதியின் பேச்சை சுட்டிக்காட்டி அமித் ஷா குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள இண்டியா கூட்டணி சனாதன தர்மத்தை இழிவுபடுத்துகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர், “இண்டியா கூட்டணி கடந்த இரண்டு நாட்களாக சனாதன தர்மத்தை இழிவுபடுத்தி வருகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக திமுக தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களும் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் … Read more

நோபல் பரிசு விழாவில் பங்கேற்க ரஷ்யா, ஈரான், பெலாரஸ் நாடுகளுக்கு தடை 

ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில் நடைபெற உள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள ரஷ்யா, பெலாரஸ் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் தூதர்களை அழைக்கப் போவதில்லை என்று நோபல் அறக்கட்டளை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு, உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக, ரஷ்யா மற்றும் அதன் நட்பு நாடான பெலாரஸ் தூதர்களை நோபல் அறக்கட்டளை புறக்கணித்திருந்தது. இந்த நிலையில், கடந்த வியாழன் (ஆக.31) அன்று வெளியிட்ட அறிவிப்பில் கடந்த ஆண்டு புறக்கணிக்கப்பட்ட நாடுகளின் தூதர்கள் இந்த ஆண்டு அழைக்கப்படுவார்கள் … Read more

"சீமான் கைது".. அதிரடியாக கூறிய சவுக்கு சங்கர்.. அப்போ நடந்துரும் போலயே..

சென்னை: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்படலாம் என்று பிரபல யூடியூபரும், சமூக ஆர்வலருமான சவுக்கு சங்கர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுக்கு சங்கர் இதுவரை கூறிய பல விஷயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வரும் நிலையில், சீமானும் கைது செய்யப்படுவாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தன்னை திருமணம் செய்து கொண்டு பின்னர் ஏமாற்றி சென்றுவிட்டதாக சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் … Read more

திருப்பதி தேவஸ்தானத்தின் சூப்பர் அறிவிப்பு… இதை எதிர்பார்க்கலயே… கொண்டாடும் பக்தர்கள்!

திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய முடிவு பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு பிரமோற்சவங்கள்உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 18 ஆம் தேதி தொடங்க உள்ளது. ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் திருப்பதி வெங்கடேச பெருமாளின் பக்தர்களுக்கு பெரும் திருவிழா. இந்நிலையில் இந்த ஆண்டு இரண்டு பிரமோற்சவங்கள் நடைபெற உள்ளது கூடுதல் சிறப்பு.மலையே குலுங்கும்வரும் 18 ஆம் தேதி தொடங்க உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் வரும் 26 ஆம் தேதி நிறைவு … Read more

Leo – Vidaamuyarchi update:லியோ முதல் விடாமுயற்சி வரை..செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ள அப்டேட்ஸ் என்னென்ன தெரியுமா ?

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இம்மாதம் ஒரு கொண்டாட்டமான மாதமாகவே இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த அளவிற்கு இம்மாதம் படங்களும், படங்களின் அறிவிப்புகளும் வெளியாகவுள்ளன. அதெல்லாம் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். தமிழ் மட்டுமல்ல இந்திய திரையுலகம் மொத்தமும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் தான் லியோ. விஜய்யின் நடிப்பில் லோகேஷின் இயக்கத்தில் உருவாகும் லியோ திரைப்படம் அடுத்த மாதம் திரையில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இம்மாதம் இறுதியில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக … Read more

iPhone 14 Pro Max, Samsung Galaxy A14 உள்ளிட்ட உலகில் அதிகம் விற்பனையான 10 ஸ்மார்ட்போன்கள்!

நாளுக்கு நாள் அப்க்ரேட் ஆகி கொண்டே இருக்கும் டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன்கள் மிக முக்கிய பங்கை வகிக்கின்றன. ஸ்மார்ட்போன் என்பது வெறும் எலக்ட்ரானிக் டிவைசாக மட்டுமில்லாமல், நமது எமோஷனோடு கலந்து ஒரு விஷயமாக மாறிவிட்டது. அப்படிப்பட்ட ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது கடைகடையாக ஏறி நல்ல மொபைலாக வாங்குவோம். அப்படி உலகம் முழுவதும் பலரால் விரும்பப்பட்டு அதிகம் வாங்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்களின் பட்டியல் என்று Omdia வெளியிட்டிருக்கும் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம். ​iPhone 14 Pro Maxவழக்கம் போல் முதல் … Read more

தனுஷுடன் மீண்டும் இணையும் நித்யா மேனன்..! எந்த படத்தில் தெரியுமா..?

Nithya Menen Dhanush Movie: நடிகர் தனுஷ் உடன் திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்து நடித்த நித்யா மேனன், மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

மோடியை எதிர்த்து நேரடியாகப் போட்டியிட்டால் திமுகவுக்கு ஆதரவு ; சீமான்

கோயம்புத்தூர் ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டு அவருக்கு எதிராக நேரடியாக திமுக போட்டியிட்டால் தாம் ஆதரிக்க உள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். இன்று கோயம்புத்தூரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒஉர் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார்.  அப்போது சீமான் செய்தியாளர்களிடம், ”கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திமுக போட்டியிடவில்லை.  அதாவது 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, பாஜக போட்டியிட்ட தொகுதிகளை எல்லாம் கூட்டணி கட்சிகளுக்குத்தான் பெரும்பாலும் ஒதுக்கியது. திமுக தூத்துக்குடியில் மட்டுமே எதிர்த்துப் போட்டியிட்டது … Read more

மத்திய அமைச்சர் மகன் மீது ஆயுத சட்டத்தில் வழக்கு பதிவு| A case has been registered against the Union Ministers son under the Arms Act

லக்னோ-பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் கவுசல் கிஷோர், உ.பி., தலைநகர் லக்னோவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில், அவரது மகன் விகாஸ் கிஷோரின் நண்பர் வினய் ஸ்ரீவஸ்தவா என்பவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். இது குறித்து வழக்கு பதிந்த போலீசார், அஜய் ராவத், அன்கித் வர்மா, ஷமிம் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இந்த சம்பவம் நடந்த போது, கவுசல் கிஷோரின் மகன் விகாஸ் … Read more