மீண்டும் அஜித்துடன் இணையும் பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி!

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படத்தில் அவரது காதலியாக நடித்தவர் பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி. அதன் பிறகு அஜித் நடித்த வலிமை படத்தில் நடித்த அவர், மீண்டும் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் விடாமுயற்சி படத்திலும் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. சமீப காலமாக அஜித்குமார் தனது படங்களில் வித்யா பாலன், ஹுமா குரோஷி, மஞ்சு வாரியர் போன்ற 40 வயது நடிகைகளுக்கே சான்ஸ் கொடுத்து வருகிறார். … Read more

சிலியில் ரயில் விபத்து 7 பேர் பரிதாப பலி| Train accident in Chile kills 7 people

சிலியில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மினி பஸ் மீது ரயில் மோதிய விபத்தில், ஏழு பேர் பலியாகினர்; எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். தென் அமெரிக்க நாடான சிலியில், சான் பெட்ரோ டே லா பாஸ் என்ற இடத்தில், நேற்று மினி பஸ் ஒன்று அங்குள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த ரயில், மினி பஸ் மீது மோதி இழுத்துச் சென்றது. இந்த விபத்தில், மினி பஸ்சில் இருந்த ஏழு … Read more

Chandramukhi 2 Trailer Review: என்னடா இது சந்திரமுகிக்கு வந்த சோதனை.. ஒரு சீனும் நல்லா இல்லையே!

சென்னை: ஒரு படம் நல்லா இருக்கோ இல்லையோ அதன் ட்ரெய்லர் கட் பார்த்தாலாவது படத்தை பார்க்க தூண்டும் விதத்தில் இருக்க வேண்டும். ஆனால், சந்திரமுகி 2 ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ள நிலையில், ஒரு கூஸ்பம்ப்ஸ் சீன் கூட இல்லையே என்பது தான் வேதனையாக உள்ளது. ராகவா லாரன்ஸ் நடித்த காஞ்சனா படங்களின் ட்ரெய்லர் எடிட்டை எல்லாம்

வடமாகாண தென்னை முக்கோண வலய அங்குரார்ப்பண நிகழ்வு!

வடக்கு தென்னை முக்கோண வலயத்தை உருவாக்குவதன் அங்குரார்ப்பண நிகழ்வும், சர்வதேச தென்னை விழாவும், தென்னை வளர்ப்பாளர்களை கெளரவிக்கும் நிகழ்வும் நேற்றைய தினம்(02) சிறப்புற இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் கைத்தொழில் அமைச்சர் Dr.ரமேஷ் பத்திரண அவர்களின் தலைமையில், கிளிநொச்சி மாவட்டத்தின் பளை மாதிரி தென்னை தோட்டத்தில் காலை 9.30மணிக்கு இடம்பெற்றது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லொஹான் ரத்வத்த, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் ஆகியோரின் பங்கேற்புடன் இந் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, தென்னை … Read more

தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்த 5 வயது சிறுவன்! என்ன நடந்தது?

சிக்காகோ நகரில் 5 வயது சிறுவன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   

பிறந்து 28 நாள்களேயான குழந்தை மரணம்; `உசிலம்பட்டியில் மீண்டும் பெண் சிசுக்கொலையா?' – போலீஸ் விசாரணை!

உசிலம்பட்டி அருகே பிறந்து 28 நாள்களே ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ‘பெண் சிசுக்கொலையா?’ என்ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குற்றம் 30 ஆண்டுகளுக்கு முன்புவரை பெண் குழந்தைகளைச் சுமை என்று கருதி, கருவிலும், பிறந்த பின்பும் கொல்கிற `கொடூர பழக்கம்’ மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டாரத்தில் தொடர்ந்து கொண்டிருந்தது. சமூகத்தில் பெரும் அச்சத்தை உருவாக்கிக் கொண்டிருந்த இந்தப் பழக்கத்தை ஒழிக்க ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த … Read more

ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பதில் சதித்திட்டம் உள்ளது: முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: “ஒரே நாடு – ஒரே தேர்தல் சட்டம் நிறைவேறினால், திமுக மட்டுமல்ல, எந்த அரசியல் கட்சியும் நாட்டில் செயல்பட முடியாது. எனவே ‘One Man Show’ ஆகிவிடும்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் ந.மனோகரன் இல்லத் திருமண விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த திருமணத்தை நடத்தி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியது: “கழகம்தான் குடும்பம், குடும்பம்தான் கழகம். அதில் எந்த மாற்றமும் … Read more

தேசப் பற்றை வளர்க்கிறார் மோடி – அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

புதுடெல்லி: ‘என் மண் என் தேசம்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அமிர்த கலச யாத்திரை டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று பேசியதாவது: இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. வரும் 2047-ம் ஆண்டில் 100-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவோம். அப்போது வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கும். அந்த லட்சிய பயணத்தில் நாம் அதிவேகமாக முன்னேறி வருகிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த 10 … Read more

'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்' திமுகவை கடுமையாக விமர்சித்த ஜெயக்குமார்!

சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற ஒரு சதி திட்டத்தின் மூலம் அதிபராக இருக்க முயற்சி செய்கிறார்கள் என சாடினார். யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின், இந்தியா கூட்டணியின் 3 கூட்டங்களை பாஜக அரசு பயந்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் ஆளுங்கட்சியாக … Read more

நம்பர் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… சென்னையில் இருந்து கிளம்பிடுச்சு… கேரளாவில் எந்த ரூட் தெரியுமா?

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்ததில் இருந்து, இந்திய ரயில்வே வேற லெவலுக்கு சென்றுவிட்டதாய் பேசி வருகின்றனர். இதற்கு ஊடக வெளிச்சமும், ஒவ்வொரு ரயிலுக்கும் பிரதமர் மோடி நேரடியாக களமிறங்குதும் தான் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தற்போது வரை 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. ​கேரளாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்அதில் பெரிதும் வரவேற்பை பெற்றது கேரளா மாநிலத்தில் அறிமுகம் செய்த காசர்கோடு டூ திருவனந்தபுரம் ரயில் தான். முன்பதிவில் சக்கை போடு … Read more