Salaar: செப்டம்பர் ரிலீஸ் இல்லை; தள்ளிப் போகிறதா பிரபாஸின் `சலார்'? வெளியான அப்டேட்!

`கே.ஜி.எஃப்’ இரண்டு பாகங்களின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கிக்கொண்டிக்கும் படம் `சலார் -1: சீஸ் ஃபையர்’. பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் வெகுத்தீவிரமாக நடைபெற்று வருகிறது. பிருத்விராஜ், ஸ்ருதி ஹாசன், மற்றும் ஜெகபதி பாபு எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் கை கோர்த்துள்ளது. ‘கே.ஜி.எஃப்’யைக் காட்டிலும் மிகப்பெரிய வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்பதே படக்குழுவின் நோக்கமாக இருக்கிறது. இதற்காகக் கடும் உழைப்பைப் போட்டுப் படத்தை உருவாக்கி வருகின்றனர். ரசிகர்களும் … Read more

ஸ்மார்ட்போன் சந்தையை கலக்க வருகிறது நோக்கியாவின் அசத்தலான 5ஜி போன்

நோக்கியா இந்தியாவில் மீண்டும் களமிறங்கியுள்ளது. ஒருபுறம், இந்திய சந்தையில் மிட்-ரேஞ்ச் மற்றும் உயர்நிலை (ஹை எண்ட்) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் ஆகி வருகின்றன. ஆனால், நோக்கிய அனைத்து பயனர்களையும் கவரும் வண்ணம் பட்ஜெட் மற்றும் ஃபீச்சர் போன்களை வழங்கி வருகிறது. மிட்-ரேஞ்சிலும் நோக்கியா போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இப்போது ஒரு புதிய டீஸர் வந்துள்ளது. அதில் செப்டம்பர் 6 ஆம் தேதி நோக்கியா 5G தொலைபேசியை அறிமுகப்படுத்தப் போகிறது என்று கூறப்பட்டுள்ளது. டீசரில் போனின் ஒரு சிறிய முன்னோட்டமும் … Read more

புதிய கட்டிடத்தில் கேள்வி நேரமின்றி நடக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்

டில்லி நாடாளுமன்ற புதிய கட்டிடத்தில் கேள்வி நேரமின்றி சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. வரும் 18 ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு, நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்புக் கூட்டத்தொடர்  நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் என்ன அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்று அவர் தெரிவிக்கவில்லை. இரு அவைகளின் செயலகங்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் செப்டம்பர் 18-ந்தேதி முதல் மக்களவை, மாநிலங்களவை கூட்டத்தொடர்கள் நடைபெறும். 5 அமர்வுகள் கொண்ட இந்த … Read more

சோனியாவுக்கு லேசான காய்ச்சல்| Sonia was admitted to the hospital

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் டில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் தற்போது, டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கிறார். லேசான காய்ச்சல் இருப்தாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் டில்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் தற்போது, டாக்டர்களின் கண்காணிப்பில் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

7 ஆண்டுகளுக்குப் பிறகு 100 மில்லியன் கிளப்பில் 'தர்மதுரை' பாடல்

யூ டியூபில் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல்களாக 50க்கும் கூடுதலான தமிழ் சினிமா பாடல்கள் உள்ளன. இசையமைப்பாளர்களில் அனிருத்தின் அதிகமான பாடல்கள்தான் அந்த கிளப்பில் உள்ளன. அதிகப் பார்வைகளைப் பெற்ற பாடலாக யுவன் ஷங்கர் ராஜாவின் 'ரவுடி பேபி' பாடல் இருந்தாலும் அவர் அதிகமான 100 மில்லியன் பாடல்களில் முதலிடத்தில் இல்லை. இருந்தாலும் தற்போது அவரது 6வது 100 மில்லியன் பாடலாக 'தர்மதுரை' படத்தில் இடம் பெற்ற 'மக்க கலங்குதப்பா' பாடல் இடம் பிடித்துள்ளது. இப்பாடல் … Read more

ஷாருக்கானுக்கு ஒரு நியாயம்.. ஜெயம் ரவிக்கு ஒரு நியாயமா.. நயன்தாராவின் செயலால் ரசிகர்கள் அப்செட்!

சென்னை: இயக்குநர் அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, ராகுல் போஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள இறைவன் படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. பல ஆண்டுகளாக உருவாகி வரும் இந்த படத்தின் மீது இதுவரை ரசிகர்கள் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாத நிலையில், இன்று வெளியான ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை டபுள்

Ather 450s – ஏதெர் 450எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கியது

பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஏதெர் எனெர்ஜி நிறுவனத்தின் புதிய  450S எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரூ.1.30 லட்சம் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 7.0 அங்குல டீப்வியூ டிஸ்பிளே கொண்ட டிஜிட்டல் கிளஸ்ட்டரில் கனெக்ட்டிவிட்டி வசதிகளை கொண்டுள்ளது. 2.9 kWh லித்தியம் அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள 450 எஸ் மாடல் 115 கிலோமீட்டர் வரை சான்றளிக்கப்பட்ட வரம்பை வழங்குகிறது. Ather 450S 115 கிமீ என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நிகழ்நேரத்தில் 80-85 கிமீ வரை ரேன்ஜ் வழங்கலாம். பேட்டரி … Read more

“ `கலவை' இல்லாமல் அரசியலும் சாத்தியமில்லை!" – லாலுவுடன் Champaran Mutton சமைத்த ராகுல் | Video

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவை கடந்த மாதம் பீகார் மாநிலம், பாட்னாவில் சந்தித்து அவர் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழித்திருக்கிறார். ராகுல் காந்தி – லாலு பிரசாத் யாதவ் இந்தச் சந்திப்பின்போது, பீகாரின் சிறப்பு உணவான `Champaran Mutton’-ஐ லாலுவுடன் சேர்ந்து ராகுல் காந்தி சமைத்து, ருசித்தார். இந்த உணவு தயாரிப்பின்போது இரு தலைவர்களும் உணவு மற்றும் அரசியல் குறித்த உரையாடலை மேற்கொண்டிருக்கின்றனர். இந்தச் சந்திப்பு … Read more

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தர்மன் சண்முகரத்னத்துக்கு முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

சென்னை: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முக ரத்னத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: முதல்வர் ஸ்டாலின்: சிங்கப்பூரின் 9-வது அதிபராக தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முக ரத்னத்துக்கு எனது வாழ்த்துகள். அவரது தமிழ் மரபும், அசர வைக்கும் தகுதிகளும் நம்மை பெருமை கொள்ளச் செய்வதோடு, சிங்கப்பூரின் பன்முகத் தன்மையையும் வெளிக்காட்டுகிறது. அவரது பதவிக்காலம் … Read more

சனாதன தர்மம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு – டெல்லி காவல்நிலையத்தில் வழக்கறிஞர் புகார்

புதுடெல்லி: சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் டெல்லி போலிசில் புகார் அளித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். … Read more