சீன கண்ணாடி பொருட்களுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி| Anti-dumping duties on Chinese glass products

புதுடில்லி:வீட்டு உபயோகப் பொருட்களில் பயன்படுத்தப்படும் சீன கண்ணாடிகளின் இறக்குமதிக்கு, 5 ஆண்டுகளுக்கு அதிக பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்க மத்திய வர்த்தக துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. வீட்டு உபயோகப் பொருட்களில் பயன்படுத்தப்படும் சீன கண்ணாடிகள், அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதாக உள்நாட்டு தொழில்துறையினர் புகார் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, வர்த்தக அமைச்சகத்தின் புலனாய்வு பிரிவு மேற்கொண்ட ஆய்வில், 1.8 மி.மீ., முதல் 8 மி.மீ., வரையிலான தடிமன் கொண்ட கண்ணாடிகளை சீனா அதிகளவில் நமது நாட்டிற்கு ஏற்றுமதி … Read more

'ஜெயிலர்' ஓடிடி வெளியீடு அறிவிப்பு

நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், விநாயகம் மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் 10ம் தேதி வெளிவந்த படம் 'ஜெயிலர்'. இப்படம் 600 கோடி வசூலை நோக்கி நான்காவது வாரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. செப்டம்பர் 7ம் தேதி இப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஓடிடியில் வெளியிட உள்ளார்கள். படம் வெளியான ஒரு மாதத்திற்குள்ளாகவே … Read more

கடனை அடைத்து தோழியின் கணவரை வளைத்து போட்ட நடிகை.. கண்ணீரும் கம்பலையுமாக நிற்கும் தோழி!

சென்னை: தோழி என்ற போர்வையில் குடும்பத்திற்குள் நுழைந்து நடிகை, தோழியின் கணவரை வளைத்து போட்டுள்ளார். தற்போது அந்த தோழி கண்ணீரும் கம்பலையுமாக வாழ்ந்து வருகிறார். மைதா மாவு போல தேகம் கொண்ட அந்த நடிகை, குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் அழகான க்யூட்டான சிரிப்பால் இவருக்கு பல படங்களில் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து பஞ்சாபி,

எங்களுக்கும் கிடைக்குமா? – காரைக்காலில் காலை உணவு திட்டத்துக்காக காத்திருக்கும் மாணவர்கள்

காரைக்கால்: புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கல்வித் துறை மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2018-ம் ஆண்டு ‘அட்சய பாத்ரா’ என்ற அறக்கட்டளையுடன் கல்வித் துறை செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், புதுச்சேரியில் மட்டும் அந்த அறக்கட்டளை மதிய உணவை வழங்கி வருகிறது. காரைக்கால் மாவட்டத்தில் கல்வித் துறை மூலமே மாணவர்களுக்கான … Read more

“இந்தியா ஒருபோதும் இந்து தேசமாக இருந்ததே இல்லை” – மோகன் பாகவத்துக்கு சமாஜ்வாதி பதிலடி

லக்னோ: இந்தியா ஒருபோதும் இந்து தேசமாக இருந்ததே இல்லை என்று சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுவாமி பிரசாத் மவுரியா தெரிவித்துள்ளார். இந்து ராஷ்டிரம் பற்றி ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் கூறிய கருத்துக்கு பதிலடி தரும் வகையில் அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் சுவாமி பிரசாத் மவுரியா, “இந்தியா இந்து தேசம் அல்ல. எப்போதுமே இந்தியா இந்து தேசமாக இருந்தது இல்லை. இந்தியா இயல்பிலேயே பன்முகத்தன்மை கொண்ட தேசமாகும். நமது … Read more

தீவிரவாதிகளை தமிழக அரசு விடுவித்தால் பாஜக வேடிக்கை பார்க்காது.. இறங்கி அடித்த அண்ணாமலை

சென்னை: தீவிரவாதிகளை தமிழக அரசு விடுவித்தால் பாஜக அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும், அப்படி விடுவிப்பதற்கு அரசாங்கத்திற்கு உரிமை கிடையாது எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்திய சுதந்திர தினம், பெருந்தலைவர்களின் பிறந்தநாள் ஆகிய தினங்களில் சிறையில் உள்ள கைதிகள் விடுதலை செய்யப்படுவது வழக்கம். நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்கள்; சிறையில் ஒழுக்கமாக நடந்து கொண்டவர்கள் ஆகியோர் அதுபோன்ற தினங்களில் விடுதலை செய்யப்படுவார்கள். அனைத்து மாநிலங்களிலும் இந்த நடைமுறை இருக்கிறது. இந்த சூழலில், கோவை … Read more

ரஜினியை தொடர்ந்து நெல்சனுக்கும் அடித்த ஜாக்பாட் பரிசு: அனிருத்துக்கு எப்போ..?

‘ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்காக ரஜினியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கும் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். கலாநிதி மாறன்’ஜெயிலர்’ படத்தினுடைய பிரம்மாண்ட வெற்றிக்காக பரிசுகளை வாரி வழங்கி வருகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். இதுக்குறித்த பேச்சுக்கள் தான் சோஷியல் மீடியா முழுக்க வலம் வந்து கொண்டிருக்கிறது. ‘ஜெயிலர்’ படம் வேறலெவல் லாபத்தை கொடுத்துள்ளதால் நேற்று காலையிலே ரஜினியை சந்தித்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன், அவருக்கு காசோலை ஒன்றை கொடுத்து கார் ஒன்றையும் பரிசாக … Read more

வண்டுகள் தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் ரூ.2 லட்சம் நிதியுதவி

சென்னை தமிழகத்தில் விஷ வண்டுகள்  தாக்குதலால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு முதல்வர் மு க ஸ்டாலின் ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். கடந்த 31/08/2023 அன்று மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், 80-ராதா நல்லூர் கிராமம், அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்த வீரமணி  என்பவர் திருக்கடையூர் கிராமத்தில் மாங்காய் பறிக்கும் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கதண்டு என்கிற விஷ வண்டுகள் தாக்கி காயமடைந்த வீரமணி திருக்கடையூர் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் முதலுதவி செய்யப்பட்டு மயிலாடுதுறை அரசு … Read more