ஜெயிலர் – ரஜினிக்கு இவ்வளவு வருமானமா ?

சமூக வலைத்தளங்களில் கடந்த இரண்டு நாட்களாக 'ஜெயிலர்' படத்திற்காக ரஜினிகாந்த்திற்கு எவ்வளவு வருமானம் கிடைத்தது என்பது பற்றித்தான் சினிமா ரசிகர்கள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படத்திற்காக அவருக்கு 120 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாம். அதோடு படத்தின் லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதமும் சேர்த்து பேசியதாகவும், அந்த பங்குத் தொகையைத்தான் அதன் தயாரிப்பாளர் ரஜினியை சந்தித்து நேரில் வழங்கியதாகவும் கோலிவுட்டில் சொல்கிறார்கள். அந்தத் தொகை மட்டுமே 100 கோடி என்றும் கிசுகிசுக்கிறார்கள். ஆக, மொத்தம் 'ஜெயிலர்' படத்திற்காக மொத்தமாக … Read more

உலக அரசியலில் இந்திய வம்சாவளி தலைவர்கள் கோலோச்சுகின்றனர்! | Leaders of Indian origin are competing in world politics!

சிங்கப்பூர்-உலகின் பல்வேறு நாடுகளில் இந்திய வம்சாவளியினர் அரசியலில் கோலோச்சுவதும், அதிபர், பிரதமர், அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவிகளிலும் இருப்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தப் பட்டியலில் நேற்று முன்தினம் இணைந்துள்ளார் சிங்கப்பூர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னம். பல நாடுகளில் முக்கிய பதவிகளில் உள்ள இந்திய வம்சாவளி யினர் தொடர்பான பட்டியல் ஒன்று சமீபத்தில் தயாரிக்கப்பட்டது. இதன்படி, இந்திய வம்சாவளியினர் 200க்கும் மேற்பட்டோர், 15க்கும் மேற்பட்ட நாடுகளில் முக்கிய அரசியல் பதவிகளில் உள்ளனர். இதில், 60 … Read more

Leo – லியோ இசை வெளியீட்டு விழா.. ஒரு வழியாக முடிவுக்கு வந்த படக்குழு.. விஜய் எடுத்திருக்கும் முடிவு இதுவா?

சென்னை: Leo Audio Launch (லியோ இசை வெளியீட்டு விழா) லியோ இசை வெளியீட்டு விழா குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய்.அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதாலும், பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்வியாலும் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது அவசியப்படுகிறது. லோகேஷ்

விதிமீறல் கட்டிடங்களுக்கு மின்கட்டணம் 10 மடங்கு அதிகமாக வசூலிக்க வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு

மதுரை: வரைபட அனுமதியை மீறி கட்டிடம் கட்டுவோரிடம் மின் கட்டணம், சொத்து வரி, தண்ணீர் வரியை 5 முதல் 10 மடங்கு அதிகமாக வசூலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த சகோதரர்கள் சங்கர், சுப்பிரமணியன். இவர்கள் கோச்சடை பாஸ்போர்ட் அலுவலகம் எதிரில் 2015-ல் 10896.5 சதுர மீட்டர் இடம் வாங்கினர். அந்த இடத்தில் வணிக வளாகம் கட்ட 23.2.2018ல் வரைபட அனுமதி பெற்றனர். அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டது. இந்நிலையில் வரைபட … Read more

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஆய்வுக் குழுவில் இணைய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுப்பு

புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரே நாடு ஒரே தேர்தல் ஆய்வுக் குழுவில் இடம் பெற காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மறுத்துவிட்டார். ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, குலாம் நபி ஆசாத், 15-வது … Read more

சேலம் பெரியார் பல்கலைக் கழகம் – வகுப்பறை முதல் ஆய்வகம் வரை – வாடகைக்கு : அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

சேலம் பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கலையரங்கம், உணவுக்கூடம், கூட்ட அரங்குகள், கணினி ஆய்வகம், வகுப்பறைகள் ஆகியவை வாடகைக்கு விடப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. அவற்றுக்கு ஒரு நாளைக்கு வாடகையாக ரூ.1200 முதல் ரூ.40,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக்கழகம் அதன் கலையரங்கம் தொடங்கி வகுப்பறை வரை அனைத்தையும் வாடகைக்கு விடுவதாக அறிவிப்பது இதுவே முதல்முறையாகும். உயர்கல்வி வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் கல்வி … Read more

தேசிய விருதுக்கு பிறகு நடிகர் மாதவன் காட்டில் மழைதான் போல !! கிடைத்திருக்கும் புதிய மற்றும் பெரிய பதவி !!

சாக்லேட் பாய் மாதவன்தமிழ் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் மாதவன். இவர் 90ஸ் பெண்களின் சாக்லேட் பாய் என்றே சொல்லவேண்டும். அலைபாயுதே படத்தின் மூலம் பெரிய பெண் ரசிகை பட்டாளத்தை உருவாக்கினார். அலைபாயுதே படத்தை தொடர்ந்து, மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டாள், என்னவளே என பல படங்களில் நடித்திருக்கிறார் மாதவன். திடீரென குறைந்த மாதவனின் மார்க்கெட் இயக்குனர் சுதா கொங்குராவின் இறுதிச்சுற்று படத்தின்மூலம் மீண்டும் உயர்ந்தது. விக்ரம் வேதா, மாறா, ராக்கெட்ரி போன்ற படங்களில் நடித்துள்ளார்.ராக்கெட்ரிநடிகராக வளம் … Read more

குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தை : போலீசில் புகார் அளித்த மகன்

குடியாத்தம் தனது தாயிடம் குடிபோதையில் தக்ராறு செய்த தந்தையைக் குறித்து 13 வயது மகன் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளான்.  வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த கள்ளூர் முல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜாபர் கூலித்தொழிலாளி ஆவார். இவருடைய மனைவி பரானா. இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். தினமும் ஜாபர் குடித்துவிட்டு வீட்டில் மனைவியிடம் தகராறு செய்து வருவதாக கூறப்படுகிறது. ஜாபர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குடித்துவிட்டு வந்து மனைவி பரானாவிடம் போதையில் தகராறு செய்து உள்ளார்.  … Read more

முன்பதிவில் சாதனை படைக்கும் 'ஜவான்'

அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் 'ஜவான்' திரைப்படம் வரும் செப்டம்பர் 7ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு ஷாரூக்கான் நடித்து வெளிவந்த 'பதான்' படத்தின் முதல் நாள் முன்பதிவு ஒரு லட்சத்து பதினேழாயிரம் … Read more

கடலில் மூழ்கிய கப்பல்களின் வரலாறு| கடலில் மூழ்கிய கப்பல்களின் வரலாறு

அட்லாண்டிக் கடலில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி இருக்கும் டைட்டானிக் கப்பலை சமீபத்தில் பார்க்க சென்ற ‘டைடன்’ நீர்மூழ்கி வெடித்துச் சிதறி ஐந்து பேரும் பலியாகினர். உலக வரலாற்றில் டைட்டானிக் கப்பலை விட அதிக ஆழத்தில் சில கப்பல்கள் மூழ்கி உள்ளன. இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் – அமெரிக்காவின் நியூயார்க் புறப்பட்ட ‘டைட்டானிக்’ சொகுசு கப்பல் 1912 ஏப். 15ல் வட அட்லாண்டிக் கடலின் பனிப்பாறையில் மோதி உடைந்து கடலில் மூழ்கியது. இதில் 1500 பேர் பலியாகினர். இதன் … Read more