சிங்கப்பூரின் 9வது அதிபரானார் தமிழரான தர்மன் சண்முகரத்னம் – மும்முனை போட்டியில் வெற்றி

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூர் அரசின் முன்னாள் துணைப் பிரதமராக இருந்த தர்மன் சண்முகரத்தினம் அதிபர் தேர்தலில் வென்றதன் மூலம் அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார். அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று சிங்கப்பூரின் 9வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தன்னுடன் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களையும் வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளார். சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் 6 ஆண்டு பதவிக் காலம் இந்த மாதம் 13-ம் … Read more

கனமழை வெளுத்து வாங்கப் போகுது: 15 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று (செப்டம்பர் 01) 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் காரணமாக, இன்று (செப்டம்பர் 1) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் பெரம்பலூர் என 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளைய தினம் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்… சிறப்பு கூட்டத்தொடரில் என்ன பிளான்? மத்திய அரசு செம ஸ்பீடு வியூகம்!

மத்தியில் ஆளும் பாஜக அரசு ‘ஒரே நாடு ஒரே செயல்திட்டம்’ என்ற வகையில் பல்வேறு விஷயங்களை அமல்படுத்தி வருகிறது. இதில் தேர்தலையும் கொண்டு வருவது பற்றி பலமுறை ஆலோசனை செய்துள்ளது. அதாவது, நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்துவது. அப்படி பார்த்தால் 2024 மக்களவை தேர்தல் நடைபெறும் போது அனைத்து மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் இதில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகள் சிக்கலை சந்திக்க வேண்டி … Read more

சிங்கப்பூர் சிம்மாசனத்தில் ஏறிய தமிழர்.. அதிபர் தேர்தலில் தர்மன் சண்முகரத்னம் மாபெரும் வெற்றி!

சிங்கப்பூர்: சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் மாபெரும் வெற்றி பெற்று புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூர் அதிபராக தமிழர் ஒருவர் வெற்றி பெற்றதை அந்நாட்டில் வசிக்கும் தமிழர்கள் திருவிழா போல கொண்டாடி வருகின்றனர். சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்து வந்த ஹலிமா யாகூப்பின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ம் தேதி (இன்று) நடைபெறும் என சில மாதங்களுக்கு முன்பே … Read more

குல்லா இல்லாத சிவகார்த்திகேயன்.. முதன்முறையாக வெளியான 'எஸ்கே 21' லுக்: தீயாய் இருக்கே.!

அண்மையில் வெளியான ‘மாவீரன்’ படத்தால் பிரம்மாண்ட வெற்றியை சுவைத்த சிவகார்த்திகேயன், தற்போது ‘எஸ்கே 21’ படத்தில் நடித்து வருகிறார். உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் ஆரம்பித்தது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். டான்ஸ், மிமிக்ரி, தொகுப்பாளர் என சின்னத்திரையில் கலக்கி வந்த இவர், தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார். இவர் நடிப்பில் அண்மையில் ‘மாவீரன்’ படம் வெளியானது. … Read more

இந்தியா கூட்டணி கூடும் போதெல்லாம் பயத்தில் இருக்கிறது பாஜக – உதயநிதி

பாஜக அரசு ஆரம்பத்திலிருந்தே ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கல்வி என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இதை திமுக தொடர்ந்து எதிர்க்கும். இந்தியா கூட்டணி கூடும் போதெல்லாம் பயத்தில் இருக்கிறது பாஜக என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.  

பாஜக தேசியத் தலைவர்  – முன்னாள் குடியரசுத் தலைவர் சந்திப்பு

டில்லி இன்று பாஜக தேசியத் தலைவர் ஜே பி நட்டா மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவ ராம்நாத் கோவிந்த் ஆகியோர் சந்தித்துள்ளனர். மத்திய அரசு நாட்டில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த குழு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவுள்ளது. இன்று பாஜக … Read more

ரூ.2,000 நோட்டுகள் 93 சதவீதம் வாபஸ்: ரிசர்வ் வங்கி தகவல்| 93 percent withdrawal of Rs 2,000 notes: RBI information

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ரூ. 2000 நோட்டுகள் 93 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாகவும், செப்டம்பர் மாதம் 30-ம் தேதிக்கு பிறகு செல்லாது . 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அனைத்து வங்கி கிளைகளில், மாற்றிக்கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து 2000 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் டெபாசிட் செய்து வருகின்றனர். திரும்ப … Read more

சிவகார்த்திகேயனின் 21வது படம்: முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு

'மாவீரன்' படத்துக்குப் பிறகு ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு தற்காலிக டைட்டிலாக 'எஸ்கே21' என்று வைக்கப்பட்டுள்ளது. இதனை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருகிறார். சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 75 நாட்களாக ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வந்தது. தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் இயக்குநர் … Read more

பான் இந்திய படம் சைந்தவ்.. மரண மாஸ் லுக்.. சம்பவம் செய்ய காத்திருக்கும் ஆர்யா!

சென்னை: சைந்தவ் திரைப்படத்தில் ஆர்யா வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான காதர்பாட்ஷா திரைப்படம் சுமாராக ஓடியது. அவன் இவன், நான் கடவுள், மதராசபட்டிணம் போன்ற வெற்றிப்படங்களில் நடித்த ஆர்யா 2019ம் ஆண்டு சாயிஷா என்பவரை காதலித்து