'இந்தியா கூட்டணி' 140 கோடி மக்களின் கூட்டணி – அரவிந்த் கெஜ்ரிவால்

மும்பை, இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் இரண்டாவது நாளாக இன்று மும்பையில் நடைபெற்றது. 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் முக்கிய வியூகம் வகுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அவர் கூறியதாவது, இது வெறும் 28 கட்சிகளின் கூட்டணி அல்ல, 140 கோடி மக்களின் கூட்டணி. … Read more

'பாகிஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய பந்துவீச்சு தான்'- விராட் கோலி

கொழும்பு, இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடருக்கு ஆசிய அணிகள் சிறப்பாக தயாராகும் பொருட்டு இந்த முறை ஆசிய கோப்பை 50 ஓவர் வடிவில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் புதன்கிழமை தொடங்கியது. அதில் நேபாள அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றியோடு தொடரை தொடங்கியது இதில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் எதிர் பார்க்கும் இந்தியா -பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான … Read more

சிங்கப்பூரில் இன்று அதிபர் தேர்தல்: இந்திய வம்சாவளியை சேர்ந்த தர்மனுக்கு வெற்றி வாய்ப்பு..!

சிங்கப்பூர், சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துவிட்டார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கேபினட் மந்திரி பதவியில் இருந்த தர்மன் சண்முக ரத்னம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். இந்திய வம்சாவளியை சேர்ந்த … Read more

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுகின்றது

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் 01ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 செப்டம்பர் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுகின்றது மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில … Read more

முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரனின் எம்.பி பதவி செல்லாது! – கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

கர்நாடகாவில் ஹஸ்ஸன் (Hassan) மக்களவைத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் பிரதமர் ஹெச்.டி.தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் எம்.பி பதவி செல்லாது என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் வெற்றிபெற்ற ஒரே எம்.பி-யான பிரஜ்வல் ரேவண்ணா, தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், சொத்து விவரங்களைத் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கவில்லை என்றும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. பிரஜ்வல் ரேவண்ணா அதில், ஒரு மனுவை அதே … Read more

தமிழக கோயில்களின் வடக்கு கோபுர வாசல்களைத் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களின் வடக்கு கோபுர வாசல்களை மூடி வைத்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், உடனடியாக அனைத்து கோயில்களிலும் மூடப்பட்டிருக்கும் வடக்கு கோபுர வாசல்களைத் திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்டம் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயிலில் உள்ள மொட்டை கோபுரத்தை ஆகம விதிகளின்படி கட்ட நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய குழு – அசாம், உ.பி. உத்தராகண்ட், மகாராஷ்டிர முதல்வர்கள் வரவேற்பு

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்திருப்பது பிரதமர் நரேந்திர மோடியின் மிக முக்கிய முடிவு என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார். இதேபோல், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வரவேற்றுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்திருப்பது பிரதமர் மோடியின் மிக முக்கிய முடிவு. பிரதமர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்தக் குழுவின் … Read more

வியாபாரிகளே உஷார்.. தமிழில் பெயர் பலகை இல்லையெனில் ரூ.2000 அபராதம்.. அதிரடியாக அறிவித்த அரசு

மதுரை: வணிக நிறுவனங்கள், கடைகள் ஆகியவற்றில் தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அரசாணை ஓரிரு தினங்களில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கடைகள் ஆகியவற்றில் தூய தமிழில் தான் பெயர் பலகை இருக்க வேண்டும் என தமிழக அரசு 1980களிலும், 90களிலும் உத்தரவிட்டது. இதுதொடர்பான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, அன்றைய காலக்கட்டங்களில் தமிழகம் முழுவதும் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள் … Read more

கியர் போட்டாச்சு… இடி மின்னலுடன் பலத்த மழை பெய்யும்… குட் நியூஸ் சொன்ன இந்திய வானிலை மையம்!

தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை வழக்கத்தை விட குறைவாகவே பெய்துள்ளது. 122 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் ஆகஸ்ட் மாதம் மோசமான மழை பொழிவை பெற்றுள்ளதோடு கடுமையான வெப்ப நிலையை சந்தித்ததாகவும் இந்திய வானிலை மையம் தெரிவித்தது. இந்நிலையில் தற்போது ஒரு நல்ல செய்தியை கூறியிருக்கிறது இந்திய வானிலை மையம். அதாவது தெலுங்கானா மாநிலத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் நாளை முதல் இடி மின்னலுடன் பலத்த … Read more

ஜெயிலர் ரஜினிக்கு BMW X7 காரை பரிசளித்த கலாநிதி மாறன்: அதன் விலை எத்தனை கோடி தெரியுமா?

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டைகர் முத்துவேல் பாண்டியனாக சம்பவம் செய்த ஜெயிலர் படம் உலக அளவில் ரூ. 600 கோடி வசூல் செய்துள்ளது. தனி ஒருவன் 2 வில்லன் இவரா? இந்தியாவில் மட்டும் ரூ. 300 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. அமெரிக்கா, வளைகுடா நாடுகளிலும் ஜெயிலர் படம் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது. கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் … Read more