தமிழகம் முழுவதும் கோவில்களில் வடக்கு வாசல் மூடப்பட்டிருப்பது ஏன்?

கோவில்களின் வடக்கு கோபுர வாசல்களை மூடி வைத்திருப்பதேன் என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், உடனடியாக அவற்றை திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.  

சாட்ஜிபிடிக்கு போட்டியாக ஏஐ உருவாக்கும் ஜியோ – அம்பானியின் பலே பிளான்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) தலைவரான முகேஷ் அம்பானி, ஜியோவின் லட்சியம் குறித்து அண்மையில் பேசும்போது செயற்கை நுண்ணறிவு தளத்தில் களமிறங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். உலகளாவிய தொழில்நுட்ப போட்டி உலகில் AI கண்டுபிடிப்புகளில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு ஜியோ இதில் களமிறங்கியிருப்பதாக தெரிவித்திருக்கும் அம்பானி, அனைத்து இந்திய பயனர்களுக்கும் அணுகக்கூடிய AI-ஐ வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ChatGPT போன்ற AI அமைப்புகளை உருவாக்க முடிவெடுக்க உள்ளதாக சுட்டிக்காட்டினார். இது குறித்து அம்பானி பேசும்போது … Read more

93 சதவிகித ரூ. 2000 நோட்டுக்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டில்லி புழக்கத்தில் இருந்த ரூ.2000 நோட்டுக்களில் 93% திரும்ப பெறப்ப்ட்டுள்ளதாக ரிசர் வங்கி அறிவித்துள்ளது. கடந்த மே மாதம் ரிசர்வ் வங்கி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்கு பிறகு செல்லாது என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. மேலும் 2,000 ரூபாய் நோட்டு புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படுவதாகவும் 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர் அவற்றை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நோட்டுக்களை ரிசர்வ் வங்கியின் … Read more

மலையாள நடிகை அபர்ணா நாயர் தூக்கிட்டு தற்கொலை

பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயர் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சின்னத்திரை மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்தவர் அபர்ணா நாயர்(33). மேகத்தீரதம், கல்கி, முத்துகவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதுதவிர சின்னத்திரையிலும் நிறைய தொடர்களில் நடித்து வந்தார். இவருக்கு சஞ்சித் என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். திருவனந்தபுரம் அருகே வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அபர்ணாவின் தற்கொலைக்கான காரணம் … Read more

தலைவர் 171.. சம்பளத்தை 250 கோடியாக உயர்த்திய ரஜினி..திக்குமுக்காடி போன தயாரிப்பு நிறுவனம்!

சென்னை: ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியால் தலைவர் 171 படத்தில் தனது சம்பளத்தை 250 கோடியாக உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயிலர் பட வெற்றியை தொடர்ந்து தலைவர் 170 பட வேலைகள் வேகமெடுத்துள்ளது. த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஜெயிலரை போல் தனது

தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கவுள்ளோம்.. நிதிஷ் குமார் பேட்டி

மும்பை, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் கூறியதாவது; இன்று இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே இரண்டு கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் தீர்மானங்கள் என்ன எடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றி சொல்லப்பட்டுவிட்டது. இந்த தீர்மானங்களின் அடிப்படையில் நாங்கள் எங்களது பணிகளை தொடர்வோம். யார் உலகின் மைய சக்தியாக இருக்கிறார் என்று கூறப்படுகிறாரோ, அவர் தோற்கடிக்கப்படுவார். நாங்கள் சோர்வடைந்து … Read more

தூரந்த் கோப்பை கால்பந்து ; கோவா எப்சி அணியை வீழ்த்தி மோகன் பகான் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்…!!

கொல்கத்தா, 132-வது தூரந்த் கோப்பை கால்பந்து தொடர் மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி போட்டியில் மோகன் பகான் மற்றும் கோவா எப்சி அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்கு முன்னேறலாம் என்ற முனைப்பில் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக விளையாடினர். முதல் பாதியில் இரு அணிகளுமே 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலை வகித்தன. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் மோகன் பகான் மேலும் ஒரு கோல் … Read more

'நான் உயிரோடு இருக்கிறேனா? இறந்துவிட்டேனா? என ஆலோசனை நடத்துபவர்களுக்கு…' – 'வாக்னர்' தலைவர் பிரிகோஜின் வீடியோவால் பரபரப்பு

மாஸ்கோ, ரஷியாவில் வாக்னர் குழு என்ற தனியார் ராணுவ அமைப்பு செயல்பட்டு வருகிறது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து இவர்கள் முக்கிய பங்காற்றினர். இந்த வாக்னர் குழுவின் தலைவராக யெவ்ஜெனி பிரிகோஜின் இருந்தார். இவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். ஆனால் இவர் திடீரென அதிபர் புதினுக்கு எதிராக புரட்சியில் இறங்கினார். அப்போது ரஷியாவின் தெற்கு பகுதியில் உள்ள ரோஸ்டோவ்-ஆன்-டான் அருகே உள்ள ராணுவ தலைமையகத்தை வாக்னர் குழு கைப்பற்றியது. … Read more

New Tata Nexon – புதிய 2023 டாடா நெக்ஸான் எஸ்யூவி அறிமுகமானது

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய நெக்ஸான் 2023 ஆம் ஆண்டிற்கான மாடல் முற்றிலும் மேம்பட்ட டிசைன் வடிவமைப்பினை கொண்டு கூடுதலாக பல்வேறு வசதிகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி முன்பதிவு துவங்கப்பட உள்ள நிலையில், விலை செப்டம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினில் 4 விதமான கியர்பாக்ஸ் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இரண்டு விதமான கியர்பாக்ஸ் என இரண்டு என்ஜின் ஆப்ஷனில் … Read more

தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளில் மூலதனச் சந்தை பற்றிய சங்கங்களை நிறுவும் வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

எதிர்கால சந்ததியினரின் நவீன தொழில்நுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.அடுத்த ஆண்டு முதல் மத்திய வங்கியின் அறிக்கை பற்றி பாடசாலைகளில் ஆராயப்படும்- ஜனாதிபதி. எதிர்கால சந்ததியினர் நவீன தொழிநுட்பம் மற்றும் நிதி அறிவாற்றலினால் வலுவூட்டப்படுவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். புதிய பொருளாதார முறைகளுடன் 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை நோக்கிய பயணத்தில் இது அத்தியாவசியமானது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அடுத்த வருடம் முதல் பாடசாலைகளில் மத்திய வங்கி அறிக்கை தொடர்பில் … Read more