“ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக ஆதரவு!'' – எடப்பாடி பழனிசாமி கூறும் விளக்கம் என்ன?

அடுத்தாண்டு லோக் சபா தேர்தலுக்கு முன்பாக, இந்தாண்டு இறுதியில் தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் என ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஐந்து மாநிலத் தேர்தல் மற்றும் லோக் சபா தேர்தலுக்கு பா.ஜ.க கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் தயாராகிவரும் வேளையில், நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான, `ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற தங்களின் திட்டத்தை பா.ஜ.க தற்போது கையிலெடுத்திருக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் செப்டம்பர் … Read more

சென்னை கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி தொடக்கம்

சென்னை: சென்னை கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் இயந்திரமான ஃபிளமிங்கோ இன்று சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது, என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம்-II, வழித்தடம் 4-ல் ஃபிளமிங்கோ என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் கலங்கரை விளக்கத்தில் சுரங்கம் அமைக்கும் பணியை திட்ட இயக்குநர் அர்ச்சுனன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு … Read more

மணிப்பூரில் கோம் சமூகத்தவர் கிராமங்களின் பாதுகாப்பை உறுதி செய்க: அமித் ஷாவுக்கு மேரி கோம் கடிதம்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இரண்டு சமூக குழுக்களும் கோம் சமூகத்தவரின் கிராமங்களில் ஊடுருவுவதை பாதுகாப்புப் படைகள் தடுத்து, அந்தக் கிராமங்களின் பாதுகாப்பினை உறுதிபடுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நட்சத்திரக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கடிதம் எழுதியுள்ளார். மத்திய அமைச்சருக்கு மேரி கோம் எழுதியிருக்கும் அந்தக் கடிதத்தில், “போராட்டம் நடத்தும் இரண்டு சமூகக் குழுக்களுக்கு இடையில் நாங்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிறோம். இரண்டு பக்கங்களிலும் என் சமூகத்தினர் மீது ஊகங்களும், … Read more

பாஜக குரலில் பேசும் ஜிகே வாசன்: ஒவ்வொரு வார்த்தையும் அப்படியே இருக்கு! மறுபடியும் ஒரே.. ஒரே.. மந்திரம்!

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் இது தொடர்பாக விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்று பாஜக தொடர்ந்து ஒரே ஒரே என்று சர்வாதிகார நிலைக்கு கொண்டு சென்றுவிடும் என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. ஒரே நாடு, … Read more

நந்தி ஹில்ஸ் போறீங்களா? மொத்தமா மாறப் போகுது… பெங்களூரு மக்களுக்கு சூப்பர் நியூஸ்!

நந்தி ஹில்ஸ் (Nandi Hills) என்று சொன்னால் பெங்களூரு மக்களுக்கு நன்றாக தெரியும். தலைநகரில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முக்கியமான சுற்றுலா தலம். இதன் பெயருக்கு பின்னால் பல்வேறு கதைகள் சொல்லப்படுவது உண்டு. சோழர் காலத்தில் ஆனந்தகிரி என்று அழைக்கப்பட்டதாகவும், யோக நந்தீஸ்வரர் இங்கே தவம் செய்ததால் ‘நந்தி மலை’ என்று பெயர் வந்ததாகவும் கூறுவர். நந்தி ஹில்ஸ் சுற்றுலா தலம் இதன் உச்சியில் 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலும், நந்தி … Read more

சிங்கப்பூர் அதிபராகும் தமிழர்? அதிக வாக்குகளுடன் முந்தும் தர்மன் சண்முகரத்தினம்!

சிங்கப்பூர் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கிய நிலையில் இன்று இரவு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சிங்கப்பூர்சிங்கப்பூர் அதிபராக உள்ள ஹலிமா யாகூப்பின் பதவி காலம் வரும் 13 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அதிபர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மலாய் சமூக மக்கள் மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்பட்டனர்.​ ஆகஸ்ட்டில் விழுந்த சரியான அடி… … Read more

Jawan : ஓ இதனால தான் நயன்தாரா ஜவான் பட நிகழ்ச்சிக்கு வரலையா ??

பாலிவுட் என்ட்ரிஷாருக்கான், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய் சேதுபதி போன்றோர் நடித்திருக்கும் ஜவான் திரைப்படம் வரும் செப்டம்பர் 7 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கி இருக்கிறார். மேலும், இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் மூலமாக, இயக்குனர் அட்லீ, நடிகை நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் பாலிவுட்டில் அறிமுகமாகின்றனர். ஜவான்ஜவான் திரைப்படத்தில் ஹீரோ ஷாருக்கான் தந்தை, மகன் என டூயல் ரோலில் நடித்திருக்கிறார். தந்தை ஒரு ஹைஜாக்கர், மகன் … Read more

இண்டிகோ விமானத்தில் இஸ்ரோ தலைவர் சோம்நாத்… வைரலாகும் வீடியோ!

இண்டிகோ விமானத்தில் இருந்த எஸ்.சோம்நாத் மற்றும் அவரது குழுவினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் இஸ்ரோவிடம் இல்லை

நிலவை போல் மற்ற கிரகங்களையும் ஆராய்ச்சி செய்ய நேரடியாக அந்தந்த கிரகங்களுக்கு செல்லும் வகையில் ராக்கெட்மூலம் செல்லும் ரோவர்களை வடிவமைக்கபட்டு வருவதாக இஸ்ரோ விஞ்ஞானி மோகன் குமார் தெரிவித்துள்ளார்.  

ரஜினிக்கு Bmw x7; நெல்சனுக்கு Porsche; ஜெயிலர் வெற்றிக்கு கலாநிதி மாறனின் அசத்தல் பரிசுகளின் விலை!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் 600 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வியாழக்கிழமை வெளியான இத்திரைப்படம் 11,12, 13, 14 மற்றும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என சரியான விடுமுறை வீக்கெண்டில் திரைக்கு வந்தது இப்படத்திற்கு இன்னும் கூடுதல் சிறப்பாக அமைந்தது. இதனால் அந்த வீக்கெண்டில் ஒற்றை டைகராகக் களமிறங்கி பாக்ஸ் ஆப்ஸில் கலக்கியது ‘ஜெயிலர்’ திரைப்படம். மலையாள நடிகர் மோகன் லால், கன்னட … Read more