மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக ஆதரவு

சென்னை மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக ஆதரவு அள்க்கும் என அக்கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நாட்டில் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பாக மத்திய அரசு சிறப்புக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த சிறப்புக் குழு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல், மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியம் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை … Read more

மத்திய அமைச்சர் வீட்டில் துப்பாக்கிச்சூடு: இளைஞர் பலி| Shooting at Union Ministers House: Youth Killed

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லக்னோ: உ.பி.,யில் மத்திய அமைச்சர் வீட்டில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 30 வயது இளைஞர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கவுசால் கிஷோர், இவரது வீடு லக்னோ அருகே பிகாரியா என்ற கிராமத்தில் உள்ளது.இவரது வீட்டில் இன்று 30 வயது இளைஞர் குண்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்த இளைஞர் பெயர் வினாய் ஸ்ரீவஸ்தவா என்பதும், … Read more

'மார்க் ஆண்டனி' இசை வெளியீட்டு விழா ரத்து

விஷால் தற்போது நடித்து முடித்துள்ள படம் 'மார்க் ஆண்டனி'. இதனை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். விஷாலுடன் ரிது வர்மா, எஸ்.ஜே.சூர்யா, சுனில் ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். மினி ஸ்டூடியோ சார்பில் வினோத் குமார் தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 2018ம் ஆண்டு வெளியான 'இரும்புத்திரை' தான் விஷால் கடைசியாக நடித்து வெற்றியான படம். அதை தொடர்ந்து அவர் நடித்த சண்டக்கோழி 2, அயோக்யா, ஆக்ஷன், சக்ரா, எனிமி, … Read more

ரஜினிக்கு BMW.. நெல்சனுக்கு PORSCHE கார் பரிசு.. மகிழ்ச்சியில் கலாநிதி மாறன்.. வாரி வழங்கிய பரிசு!

சென்னை ஜெயிலர் படம் ரூ.600 கோடி வசூலை தொட்டதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இயக்குநருக்கு சொகுசு கார் ஒன்றை பரிசளித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால்,

பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்த மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்

புதுடெல்லி, மத்திய விளையாட்டுத் துறை மந்திரி அனுராக் தாக்கூர் சர்வதேச செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டாவது இடம் பிடித்து அசத்திய பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். பிரக்ஞானந்தாவுடன் அவரது பெற்றோர்களும் சென்றிருந்தனர். பிரக்ஞானந்தாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனுராக் தாக்கூர்,”நான் அவருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் இந்தியாவை பெருமையடைய செய்திருக்கிறார். 16 வயதிலேயே மற்றவர்களால் செய்ய முடியாததை அவர் செய்து காட்டியிருக்கிறார். பல்வேறு இளைஞர்கள் இவரை பார்த்து செஸ் விளையாட ஆர்வம் … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், மெட்விடேவ் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

நியூயார்க், ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், தென் ஆப்பிரிக்க வீரர் லாயிட் ஹாரிஸ் உடன் மோதினார். இந்த போட்டியில் அல்காரஸ் 6-3, 6-1, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஹாரிசை வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு … Read more

ஜெட் ஸ்கீயிங் செய்தபோது எல்லை தாண்டிய 2 பேர் சுட்டுக் கொலை: அல்ஜீரிய கடலோர காவல் படை நடவடிக்கை

மத்திய தரைக்கடல் நாடான மொராக்கோவின் சைடியாவில் உள்ள கடற்பகுதியில், ஜெட் ஸ்கீயிங் எனப்படும் நீர் சாகச விளையாட்டில் ஈடுபட்ட 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் உள்ள கடற்கரை ரிசாட்டில் இருந்து புறப்பட்டு ஜெட் ஸ்கீயிங் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் வழிதவறி அண்டைநாடான அல்ஜீரிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளனர். அப்போது அவர்களை நோக்கி அல்ஜீரிய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இதில் பிலால் கிஸ்ஸி மற்றும் அப்தெலாலி மெர்சவுர் ஆகியோர் உயிரிழந்தனர். ஸ்மெயில் … Read more

Aprilia RS 440 teaser – செப்டம்பர் 7.., ஏப்ரிலியா RS 440 ஸ்போர்ட்டிவ் பைக் அறிமுகம்

மிக நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்ற ஏப்ரிலியா RS 440 ஸ்போர்ட்டிவ் பைக் மாடலை செப்டம்பர் 7, 2023-ல் பிரசத்தி பெற்ற கேடிஎம் RC 390 மற்றும் கவாஸாகி நின்ஜா 400 பைக்குகளுக்கு போட்டியாக களமிறக்க உள்ளது. இந்தியா மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வந்த RS440 இந்தியாவில் தயாரிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வாப்ப்புள்ளது. Aprilia RS 440 ஏப்ரிலியா பைக் நிறுவனம் விற்பனை செய்து வருகின்ற RS660 மாடலின் என்ஜினை … Read more

புதிய கல்வி மறுசீரமைப்புகளில் சமயக் கல்விக்கு முக்கியத்துவம் – பாராளுமன்ற உறுப்பினர் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ

ஆன்மீக ரீதியிலான சிறுவர் தலைமுறையை உருவாக்கும் வகையில் சமயக் கல்வியை மேம்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அனைத்து மதங்களையும் அடிப்படையாகக் கொண்ட சமயக் கல்வியை, புதிய கல்வி மறுசீரமைப்பில் உள்ளடக்குவதற்கு முன்மொழிவுகள் கிடைத்துள்ளதாகவும் மத விவகாரங்கள், சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுத் தலைவர் உபுல் மஹேந்திர ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடக சந்திப்பில் மத விவகாரங்கள், சகவாழ்வு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுத் தலைவர் உபுல் மஹேந்திர … Read more

நெல்லை மாநகராட்சி மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் போர்க்கொடி! – எச்சரித்த தங்கம் தென்னரசு?

நெல்லை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 கவுன்சிலர்களில், 51 பேர் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். நான்கு அ.தி.மு.க கவுன்சிலர்கள் மட்டுமே இருக்கின்றனர். அதனால் அனைத்து மண்டலங்கள் மற்றும் நிலைக்குழுக்களின் தலைவர்களாக தி.மு.க கவுன்சிலர்களே தேர்வானார்கள். தி.மு.க இளைஞரணியைச் சேர்ந்த பி.எம்.சரவணன், மாநகராட்சி மேயர் பொறுப்பில் இருக்கிறார். துணை மேயராக கே.ஆர்.ராஜூ இருக்கிறார். மேயர் சரவணன் மாநகராட்சி மேயருக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே ஆரம்பம் முதலாகவே கருத்து வேறுபாடு நிலவுகிறது. தங்களைக் கேட்காமல் மேயர் சரவணன் … Read more