மீன்வளத் துறை என்பதை மீனவர் நலத்துறை என மாற்ற பரிசீலனை: மத்திய அமைச்சர் உறுதி

திருநெல்வேலி: மீனவர்களின் கோரிக்கையை ஏற்று மீன்வளத் துறை என்பதை மீனவர் நலத்துறை எனப் பெயர் மாற்றம் செய்ய நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் தொடங்கிய சாகர் பரிக்ரமா கடலோரப் பயணத்தில் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம் உவரி மீனவக் கிராமத்தில் மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா மற்றும் இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோர் … Read more

‘மக்களவைத் தேர்தலை இயன்றவரை இணைந்தே எதிர்கொள்வோம்’ – இண்டியா கூட்டணி தீர்மானம்

மும்பை: மக்களவைத் தேர்தலை இயன்றவரை இணைந்தே எதிர்கொள்வோம் என இண்டியா கூட்டணி சார்பில் மும்பை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற இரண்டு நாள் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் இண்டியா கூட்டணி சார்பில் மூன்று முக்கியத் தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்: முதல் தீர்மானம்: ‘எதிர்வரும் மக்களவைத் தேர்தலை இயன்றவரை இணைந்தே எதிர்கொள்வது என இண்டியா கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளாகிய நாங்கள் தீர்மானித்துள்ளோம். தொகுதி பங்கீட்டுக்கான ஏற்பாடுகளை விரைவாகத் தொடங்கவும், விட்டுக் கொடுத்துச் செல்வது என்ற அணுகுமுறையைக் … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல்: வரவேற்கும் எடப்பாடி பழனிசாமி – கூட்டணிக் கணக்கு காரணமா?

நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. பாஜக ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இதை நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்று வேகப்படுத்தி வருகிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும் பணி முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் இருக்கும் ஆட்சி முடிவுக்கு வரும் … Read more

அரசியல் லாபத்திற்காக கூட்டணி அமைக்கவில்லை.. இந்தியாவை காப்பாற்றவே கூட்டணி.. மு.க. ஸ்டாலின் பேச்சு

மும்பை: “அரசியல் லாபத்திற்காக நாங்கள் கூட்டணி அமைத்துக் கொண்டோம் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம்” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மத்தியில் இருந்து எப்படியாவது பாஜக ஆட்சியை அகற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் நாட்டில் உள்ள பிரதான எதிர்க்கட்சிகள் சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கின்றன. ‘இந்தியா’ என்று இந்தக் கூட்டணிக்கு பெயரிடப்பட்டுள்ளது. மொத்தம் 24 எதிர்க்கட்சிகள் இணைந்திருக்கும் இந்தக் கூட்டணியின் தலைவர்கள் மும்பையில் இன்று சந்தித்து … Read more

Shalu Shammu: படு ஆபாசமாக கேள்வி கேட்ட நபர்: அசராமல் ஷாலு ஷம்மு கொடுத்த பதிலடி.!

சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சண்கம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஷாலு ஷம்மு. இந்தப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் பல படங்களில் நடித்துள்ள ஷாலு ஷம்மு நெட்டிசனின் அநாகரிகமான கேள்விக்கு பதிலடி கொடுத்துள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடத்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. இந்தப்படத்தில் சூரி ஜோடியாக நடித்தவர் தான் ஷாலு ஷம்மு. இந்தப்படத்தை தொடர்ந்து … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா… சாதகங்களும் பாதகங்களும்!

One Nation One Election: ஒரு நாடு – ஒரே தேர்தல் என்ற மசோதாவை அரசாங்கம் கொண்டு வரலாம்மக்களவைத் தேர்தலை மத்திய அரசு முன்கூட்டியே நடத்தும் உத்தேசம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் அனுமானிக்கின்றன.

கல்லூரி மாணவியை கொல்ல முயன்ற வாலிபர்! திருமணத்திற்கு மறுத்ததால் வெறி செயல்!

திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்த வாலிபர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு தீவிர சிகிச்சை.   

கிக் விமர்சனம்: `ஹலோ… கிளைமாக்ஸ் எப்ப சார் வரும்!' 2 மணி நேரத்தில் 2.30 மணி நேரம் வசனம் எப்படி?

டிடி ரிட்டன்ஸ் படத்தின் கலகலக்கலான காமெடி ஹிட்டுக்குப் பிறகு வெளியாகி இருக்கும் சந்தானத்தின் படம் கிக். கிக் விமர்சனம் MJ ( தம்பி இராமையா) யின் விளம்பர நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் சந்தோஷ் (சந்தானம்). மறுபுறம் அதே போல மற்றொரு விளம்பர நிறுவனத்தில் வேலை செய்கிறார் நாயகி டான்யா ஹோப். இவர்களிடையே பிரபல கார் கம்பெனியின் விளம்பரத்தை எடுக்க போட்டி நிலவுகிறது. அந்நேரத்தில் கார் கம்பெனியின் விளம்பர மேனேஜரான செந்திலின் முன், கவர்ச்சி நடிகையை நடனம் … Read more

இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 24 மாவட்டங்களில் மழை

சென்னை இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 24 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என முன்னதாக தெரிவித்து இருந்தது. தற்போது தமிழகத்தின் 24 மாவட்டங்களில் … Read more

கடன் வாங்கித் தர்றோம்னு கூட்டிட்டுப் போய் கட்சியில் சேர்க்கிறாங்க.. அதிமுக மீது திமுக பரபர புகார்!

செங்கல்பட்டு: கடன் பெற்றுத் தருவதாக அழைத்துச் சென்று அதிமுகவில் இணைக்க முயற்சி செய்வதாக செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் திமுகவினர், அதிமுகவினர் மீது புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் கட்சிகள் உறுப்பினர் சேர்க்கை பணிகளை தீவிரப்படுத்தின. திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தொடங்கி, சிறிய கட்சிகள் வரை, Source Link