டைம் டிராவல் கதையில் விஜய்யின் 68வது படம்: வெங்கட் பிரபு சூசக தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். இந்தப் படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து அவர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கிறார். விஜய்யின் 68வது படமான இதை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் அவர் தந்தை, மகன் என 2 வேடங்களில் நடிக்கிறார். ஜெய், பிரபுதேவா, அபர்ணா தாஸ் பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. தற்போது படத்தின் பணிகளுக்காக விஜய், வெங்கட் … Read more

அந்த இடத்தை பெரிதாக்க ஊசி போட்டேனா.. டென்ஷனான சந்தானம் பட நடிகை.. என்ன சொன்னாரு தெரியுமா?

சென்னை: மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் டபுள் ஆக்‌ஷன் ரோலில் நடித்த தடம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை தன்யா ஹோப். ஹரிஷ் கல்யாண் உடன் இவர் இணைந்து நடித்த தாராள பிரபு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பெங்களூருவை சேர்ந்த தன்யா ஹோப் தெலுங்கில் 2016ல் அறிமுகமான நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னட

பாஜக ஆட்சியின் முடிவுக்கு கவுண்டவுன் தொடங்கிவிட்டது – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மும்பை, இந்தியா கூட்டணியின் 3-வது கூட்டம் இரண்டாவது நாளாக இன்று மும்பையில் நடைபெற்று வருகிறது. 28 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் முக்கிய வியூகம் வகுக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதால், இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது இந்தியா கூட்டணியில் உள்ள திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- “பாஜக ஆட்சி முடிவுக்கு வருவதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. மத்திய பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட இந்தியா கூட்டணி … Read more

இந்தியாவில் கிடைக்காத வாய்ப்பு….இங்கிலாந்தின் கவுண்டி தொடரில் விளையாட தேர்வான சாய் சுதர்சன்…!

லண்டன், தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் கடந்த சில வருடங்களாக டிஎன்பிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வந்ததால் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாட தேர்வானார். கடந்த வருட ஐபிஎல் தொடரில் வெறும் 8 போட்டிகளில் 362 ரன்கள் குவித்தார். அதிலும் குறிப்பாக சென்னை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் 96 ரன்கள் விளாசினார். இவ்வாறு தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டதால் இலங்கையில் நடைபெற்ற 2023 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை தொடருக்கான … Read more

இங்கிலாந்து பிரதமரின் மந்திரி சபையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணுக்கு பதவி

லண்டன், இங்கிலாந்தின் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்த பென் வாலேஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத்திற்கான (Energy Security and Net Zero) செயலாளராக இருந்த கிராண்ட் சாப்ஸ் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து பிரதமர் ரிஷி சுனக்கின் மந்திரி சபையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான கிளேர் கோடின்ஹோ(38), தற்போது இங்கிலாந்தின் ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிகர பூஜ்ஜியத்திற்கான செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரஷியா-உக்ரைன் … Read more

Hyundai i20 facelift – 2023 ஹூண்டாய் ஐ20 காரின் டீசர் வெளியானது

ஹூண்டாய் இந்தியா நிறுவனம், தனது சமூக ஊடக பக்கங்களில் ஐ20 காரின் வருகை உறுதி செய்து டீசர் வெளியிட்டுள்ள நிலையில், அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த மே மாதம் ஐரோப்பா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மேம்பட்ட ஹூண்டாய் ஐ20 கார் அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த மாடலின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்களை பெற்றதாக வரவுள்ளது. 2023 Hyundai i20 facelift புதிய ஐ20 காரில் குறிப்பாக டிசைன் மாற்றங்களில், எல்இடி ஹெட்லைட் … Read more

உடன்படிக்கைகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பான விடயங்களை தொடர்ச்சியாகப் பின்பற்றுவதற்கான டிஜிட்டல் தளம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினால் அறிமுகம்

தற்போது நடைபெற்று வரும் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவற்றை அமைச்சுகளுக்கு இடையேயான பங்குதாரர்களுடன் ஒருங்கிணைத்து, தொடர்ச்சியாகப் பின்பற்றுவதற்கானதொரு டிஜிட்டல் தளத்தை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய ஆகியோர் இந்த புதுமையான டிஜிட்டல் பின்தொடர்தல் பொறிமுறையை 2023 ஆகஸ்ட் 28ஆந் திகதி அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். இலங்கைக்கும் வெளிநாட்டு அரசுகளுக்கும் இடையில் … Read more

கமல் படம்; விஜய்யின் 2 படங்கள், சூர்யாவின் படம்; ரீ-ரிலீஸுக்குத் தயாராகும் கோலிவுட்!

சமீபத்தில் கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ ரீ-ரிலீஸ் ஆகி, பெரும் வரவேற்பை பெற்றது. சென்னையில் சில தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக நிரம்பி வழிந்ததில் படத்தின் தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன், மகிழ்ந்து நெகிழ்ந்தார். ‘வேட்டையாடு விளையாடு’வின் வெற்றி பல தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. ‘ஆளவந்தான்’ அதனையடுத்து கமலின் ‘ஆளவந்தான்’ படத்தை ரீ-ரிலீஸ் செய்யப் போவதாக தாணு அறிவித்தார். இப்போது விஜய்யின் கரியரில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம். விஜய் – த்ரிஷாவின் அந்த ஹிட் காம்போதான் இப்போது ‘லியோ’வில் இணைந்திருக்கிறது … Read more

திருச்சி, நெல்லை, சேலத்தில் மெட்ரோ வகை ரயில்களை இயக்க சாத்தியக்கூறு – அரசிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: திருச்சி, திருநெல்வேலி, சேலத்தில் மெட்ரோ வகை ரயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தமிழக அரசின் சிறப்பு முயற்சிகள் துறையிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, திருச்சி, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தவும் கோரிக்கை … Read more

ஒரே நாடு ஒரே தேர்தல் | சாத்தியப்படுத்துவதில் சவால்கள் என்னென்ன? – பி.கே.மல்ஹோத்ரா கருத்து

புதுடெல்லி: “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டுமானால், அரசியல் ரீதியாக கருத்தொற்றுமையை ஏற்படுத்துவதோடு, அரசியல் சாசன திருத்தமும் மேற்கொள்ளப்பட வேண்டும்” என சட்டத்துறை முன்னாள் செயலாளர் பி.கே.மல்ஹோத்ரா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியது: “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தற்போது முதல்முறையாக கூறப்படுவது அல்ல. இதற்கு முன்பும் இது குறித்த விவாதம் நடந்திருக்கிறது. முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் அவ்வப்போது இது … Read more