“காங்கிரஸ் கட்சியைப் போல வேறு யாரும் ஏழைகளுக்கு அநீதி இழைத்தது இல்லை” – பிரதமர் மோடி

பிலாஸ்பூர் (சத்தீஸ்கர்): “காங்கிரஸ் கட்சியைப் போல வேறு யாரும் ஏழைகளுக்கு அநீதி இழைத்தது இல்லை” என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களில் ஒன்றான சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது: “தற்போதுள்ள காங்கிரஸ் அரசை மாற்ற வேண்டும் என சத்தீஸ்கர் முடிவு செய்துவிட்டது. அதற்கான உற்சாகம் உங்களிடம் (வாக்காளர்களிடம்) தெரிகிறது. காங்கிரஸ் கட்சியின் அராஜகத்தை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற முடிவுக்கு சத்தீஸ்கர் மக்கள் வந்துவிட்டார்கள். … Read more

போட்டியே நடக்காது, ஆனா கப்பு ஜெய்க்கலாம்; உலக்கோப்பைக்கு வார்னிங் கொடுக்கும் மழை

IND vs ENG Warm Up Match: உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பயிற்சி ஆட்டங்களும் நேற்று முதல் தொடங்கின. நேற்றைய முதல் நாளில் இலங்கை அணியை வங்கதேசமும், பாகிஸ்தான் அணியை நியூசிலாந்தும் வீழ்த்தின. திருவனந்தபுரத்தில் நடைபெற இருந்த தென்னாப்பிரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மழையால் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டது.  அதைத் தொடர்ந்து, இன்றும் இரண்டு பயிற்சி ஆட்டங்கள் திட்டமிடப்பட்டன. இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி கௌகாத்தியிலும், … Read more

பழைய ஸ்மார்ட்போன் இருந்தா தூக்கி வீசிராதீங்க… நல்ல வருவாய் வரும் ஒரு வழி இருக்கு!

Old Smartphone: இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. ஒரு வீட்டில் நான்கு பேர் இருக்கிறார்கள் என்றால், ஒருவருக்கு தலா ஒரு மொபைல். மேலும், ஒரீரு வருடங்களில் அப்கிரேட் செய்வதாக கூறி புதிய மொபைல்களை வாங்க, பழைய மொபைல்கள் தாத்தா, பாட்டி போன்ற மூத்தோர் கைகளுக்கோ அல்லது வேறு பயன்பாட்டுக்கோ சென்றுவிடும்.  இருப்பினும், சிலர் அதனை பயன்படுத்தாமல் போதிய கவனம் செலுத்தாமலும் விட்டுவிடுவார்கள். மேலும், சிலர் எக்ஸ்சேஜ் ஆப்பரில் விற்பதும் உண்டு, மொபைல் கடைகளில் சென்று  விற்பதும் … Read more

பாகிஸ்தானில் டிவி நிகழ்வில் அரசியல் விமர்சகர்கள் கைகலப்பு

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் தொலைக்காட்சி விவாத நிகழ்வில் அரசியல் விமர்சகர்கள் திடீரென கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் உள்ள பிரபல தொலைக்காட்சி சேனல் சார்பிலொரு விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வழக்கறிஞர் ஷேர் அப்துல் கான் மற்றும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் அப்சான் உல்லா கான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். நேரலையில் ஒளிபரப்பான இந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் யூதர்களின் முதல்வர் என அப்சான் உல்லாகான் விமர்சித்ததால் … Read more

அடுத்த கைது? சந்திரபாபு நாயுடுவை தொடர்ந்து மகன் நாரா லோகேசுக்கு சம்மன்.. பரபர ஆந்திரா! என்ன காரணம்

அமராவதி: ஆந்திர முன்னாள், முதல்வர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு கழக ஊழலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் தற்போது அவரது மகன் நாரா லோகேசுக்கு சிக்கல் எழுந்துள்ளது. அமராவதி உள்வட்ட சாலை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சிஐடி போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி Source Link

9.2 லட்சம் கி.மீ. தூரத்தை கடந்தது ஆதித்யா எல் -1| ISRO: 9.2 lakh km. Aditya L-1 went the distance

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பெங்களூரு: ஆதி்த்யா எல்1 விண்கலம் பூமியிலிருந்து 9.2 லட்சம் கி.மீ. தூரத்தை கடந்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சூரியனை பற்றி விரிவாக ஆய்வு செய்ய, ‘ஆதித்யா எல்1’ விண்கலத்தை, பி.எஸ்.எல்.வி., – சி 57 ராக்கெட் உதவியுடன், இஸ்ரோ கடந்த செப்.,2ல் புவி வட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இந்த விண்கலம் நான்கு மாதங்கள் பயணித்து, பூமியில் இருந்து, 15 லட்சம் கிலோ மீட்டர் துாரம் உள்ள, ‘லாக்ரேஞ்ச் பாயின்ட் … Read more

ரச்சிதாவுடன் விவாகரத்தா? பிக்பாஸ் எண்ட்ரியா? நடிகர் தினேஷ் விளக்கம்

பிரபல சீரியல் நடிகர்களான ரச்சிதா மகாலெட்சுமியும் தினேஷும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில பிரச்னைகளால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதிலும், பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா இருந்த போது தினேஷ் எவ்வளவோ தனது சப்போர்ட்டை ரச்சிதாவுக்காக கொடுத்தார். ஆனாலும், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ரச்சிதா தினேஷை கண்டு கொள்ளவேயில்லை. இதற்கிடையில் தினேஷ் மீது ரச்சிதா போலீஸ் புகார் அளிக்க, அதன்பின் அது விவாகரத்து வழக்காக நீதிமன்றத்துக்கு … Read more

L2 Empuraan: மோகன்லால், பிருத்விராஜ் கூட்டணியில் L2 Empuraan லோடிங்… மல்லுவுட்டில் களமிறங்கிய லைகா

சென்னை: மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளியான லூசிபர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. பிருத்விராஜ் இயக்கத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக L2 Empuraan இந்தாண்டு உருவாகவுள்ளது. L2 Empuraan படத்தின் அபிஸியல் அப்டேட்டை படக்குழு தற்போது வெளியிட்டு அதிரடி காட்டியுள்ளது.

Chris Pratt: ஒரு நாளில் 8 லிட்டர் தண்ணீர் குடிக்கும் கிறிஸ் பிராட் – எச்சரிக்கும் மருத்துவர்கள்!

தங்களது உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்வது பிரபலங்களிடையே வழக்கம். அதற்காக வொர்க் அவுட் செய்வது, டயட்டில் இருப்பது எனப் பல முயற்சிகளைத் தொடர்ச்சியாகச் செய்வதுண்டு. இன்னும் தாங்கள் நடிக்கவிருக்கும் கதாபாத்திரத்திற்கேற்ப தங்களது உடல் எடையைக் கூட்டுவதிலும், குறைப்பதிலும் தொடர் கவனம் செலுத்துவார்கள். கார்டியன்ஸ் ஆஃப் த காலக்ஸி Doctor Vikatan: உடற்பயிற்சியின் போது வலி- சாதாரணமானதா, கவனம் தேவையா, எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது? ஆனால், இதற்காக அவர்கள் மேற்கொள்ளும் உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் வொர்க் அவுட் அளவுக்கு … Read more

''தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொடர விரும்புகிறோம்'' – இராம ஸ்ரீனிவாசன் சிறப்புப் பேட்டி

“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக தொடர வேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம்… கூட்டணி பிளவுக்கான காரணம் குறித்து பேசவேண்டாம் என்று கட்சித் தலைமை எங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது… சூடான விமர்சனங்களை தவிர்க்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு அறிவுறுத்தி இருப்பது மனதுக்கு ஆறுதல் அளிக்கிறது… பிரச்சினையை சரி செய்ய தேசிய தலைமை பேசிக்கொண்டிருக்கிறது…” என்கிறார் பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் இராம ஸ்ரீநிவாசன். இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு அவர் அளித்த நேர்காணல் இது. … Read more