காவிரி விவகாரம் | “தமிழகத்தை எதிரி போல் பார்க்கிறது கர்நாடக காங்கிரஸ்” – அண்ணாமலை விமர்சனம்

நாமக்கல்: “கர்நாடகாவில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தை எதிரி நாடு போல பார்க்கிறது. இதை அமைச்சர் துரைமுருகன் உணர்ந்துகொள்ள வேண்டும்” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பரமத்தி வேலூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ நடைப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே விவசாய பண்ணை வீடுகளில் தனியாக தங்கி இருக்கும் வயதான தம்பதியரை கொன்றுவிட்டு நகை மற்றும் பணம் … Read more

“எனது பாட்டிதான் எனது பலம்” – இந்திரா காந்தியை நினைவுகூர்ந்த ராகுல் காந்தி

புதுடெல்லி: தனது பாட்டிதான் தனது பலம் என்று மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நினைவுகூர்ந்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ராகுல் காந்தி விடுத்துள்ள எக்ஸ் பதிவில், “எனது பலம், எனது பாட்டி. அவர் நாட்டுக்காக அனைத்தையும் தியாகம் செய்தார். நாட்டை எப்போதும் நான் பாதுகாப்பேன். உங்கள் நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கின்றன; என் இதயத்தில்” என்று தெரிவித்துள்ளார். … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 8 மாவடங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது. ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்து இருந்தது. தற்போது தமிழகத்தின் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை … Read more

Contempt of Court Notice on Corporation Commissioner, Beng. | பெங்., மாநகராட்சி கமிஷனர் மீது கோர்ட் அவமதிப்பு நோட்டீஸ்

பெங்களூரு : ஜெயநகர் வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் செயல்படும் கடைகளை அகற்றாத பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத்திற்கு, நீதிமன்ற அவமதிப்பு ‘நோட்டீஸ்’ வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. பெங்களூரு, ஜெயநகரில் மாநகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு, முதலாம் பிளாக்கின் தரை தளத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், கடைகள் செயல்பட்டு வந்தன. இதுதொடர்பான வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது, ‘2, 3, 4 பிளாக்குகள் அமைத்த பின், முதல் மாடியில் வாகனங்கள் … Read more

ஹிப்ஹாப் ஆதி பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் விக்ரம்

நடிகர் விக்ரம் தற்போது 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்தாண்டு ஜனவரியில் படம் ரிலீஸாக உள்ளது. இதையடுத்து இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர். விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்கு பின் விக்ரமின் அடுத்தபடம் பற்றிய தகவல் வெளிவர துவங்கி உள்ளது. அதன்படி, ஹிப்ஹாப் ஆதியை வைத்து 'அன்பறிவு' என்கிற படத்தைப் இயக்கிய அஸ்வின் ராம் இயக்கத்தில் விக்ரம் புதிய படத்தில் நடிக்க உள்ளதாக … Read more

BB tamil 7: பிரதீப் -கூல் சுரேஷ் இடையில் வலுக்கும் மோதல்.. நடுவுல இவர் வேறயா!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தனது 7வது சீசனின் 30வது நாளை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் 5 பேர் வெளியேறியுள்ளனர். மேலும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 பேர் நிகழ்ச்சியில் நுழைந்துள்ளனர். இதனிடையே தற்போது வைல்ட் கார்ட் மூலம் புதிய போட்டியாளர்கள் நுழைந்துள்ள நிலையில் நிகழ்ச்சி மேலும் களைகட்டி

தொழில் நிறுவனங்களுக்கு தொகுப்பு சலுகைகள் வழங்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு. அது குறித்து அவர் தெரிவித்தது. இன்று முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்ட இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெரிய அளவில் முன்னேற்றம் … Read more

வெறுப்புப் பேச்சு: மத்திய இணை அமைச்சர் மீது கேரள போலீஸ் வழக்குப் பதிவு

எர்ணாகுளம்: வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது கேரள காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கடந்த அக்டோபர் 29-ம் தேதி தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஊழல் குற்றச்சாட்டால் மதிப்பை இழந்துவரும் முதல்வர் பினராயி விஜயனின் இழிவான சமாதான அரசியலுக்கு ஓர் உதாரணமே களமசேரியில் நாம் கண்ட வெடிகுண்டு தாக்குதல். கேரளாவில் ஹமாஸின் ஜிஹாதிகளுக்கான … Read more

கவுதமி அளித்த நில மோசடி புகார் குறித்து காவல்துறை விசாரணை

காரைக்குடி பிரபல நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காதல் இளவரசன் கமல்ஹாசன் உள்படப் பல நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய கவுதமி சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள அக்கறை பகுதியில் வசித்து வருகிறார். கடந்த மாதம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்து இவர் ஒரு புகார் மனுவை அளித்தார் அந்த புகார் மனுவில், ”நான் எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவச் சிகிச்சைக்காக எனக்குச் சொந்தமான இடத்தை … Read more

Maratha Quota Struggle Intensifies Internet Service Disconnection; Tension lasts | மராத்தா ஒதுக்கீடு போராட்டம் தீவிரம் இணைய சேவை துண்டிப்பு; பதற்றம் நீடிப்பு

சத்ரபதி சம்பாஜிநகர், மஹாராஷ்டிரவில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வன்முறையை கட்டுப் படுத்த பீட் மாவட்டத்தில் இணைய சேவை துண்டிக்கப்பட்டு, தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தை சேர்ந்த மராத்தா சமூகத்தினரை சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பின் தங்கிய வகுப்பினராக அறிவித்து அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடு தர கடந்த 2018-ல் … Read more