How To Make Insta Reel Viral: இப்போதெல்லாம் இரண்டு விதமான பொழுதுபோக்குகள் தான் அதிக ஃபேமஸ் எனலாம். ஒன்று, இன்ஸ்டாகிராம் – யூ-ட்யூபில் ரீல்ஸ் பார்ப்பது மற்றொன்று, இன்ஸ்டாகிராம் – யூ-ட்யூபில் பதிவிட ரீல்ஸ் எடுப்பது. இளசுகள் முதல் வயதான இளசுகள் வரை கையில் ஸ்மார்ட்போனே கதியென்று இருக்கும் அனைவரும் இதைதான் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்தியாவில் டப்ஸ்மேஷ் (Dubsmash), டிக்டாக் (Tiktok) போன்றவறை மூலம் ஏற்பட்ட தாக்கம் தான் இந்த ரீல்ஸ் பழக்கத்திற்கு விதிட்டது. குறிப்பாக, இந்தியாவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட பின் இன்ஸ்டாகிராம் கொண்டு வந்த ரீல்ஸ் என்பது பரவலான கனவத்தை பெற்றது. கல்லூரி மூலம் அடுக்குமாடி குடியிருப்பு வரை அனைத்து இடங்களிலும் ரீல்ஸ் எடுக்கப்படுகின்றனது, குறிப்பாக இதில் பெண்களின் பங்கும் அதிகம் உள்ளது.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்றால் என்ன?
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் (Instagram Reels) ஒரு குறுகிய வீடியோ வடிவம். பயனர்களிடையே ரீல்களை பிரபலமாக்க, இன்ஸ்டாகிராம் பல பிரபலமான Content Creators-ன் உதவியை எடுத்தது. இன்றைய காலகட்டத்தில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை உருவாக்குவதன் மூலம் ஒரு சாதாரண மனிதர் கூட நிறைய பணம் சம்பாதிக்க முடியும். இதற்கு அந்த ரீல் வீடியோ வைரலானால் போதும், உங்களால் அதன்மூலம் பணம் சம்பாதிக்க இயலும். இன்ஸ்டாகிராமில் பிரபலமடைய நீங்கள் நிறைய ரீல்களை உருவாக்கினாலும், உங்கள் ரீல் வைரலாகவில்லை என்றால், அதற்கு இந்த டிப்ஸ் உதவிகரமாக இருக்க வாய்ப்புள்ளது.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கு நிறுவனம் பல சிறந்த அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த அம்சங்களில் ஒன்றின் பெயர் ரீமிக்ஸ் (Instagram Remix Reels). இந்த அம்சத்தின் உதவியுடன், உங்கள் ரீல் வீடியோவை ரீல்ஸ் செய்யும் மற்ற பிரபலங்களுடன், ரீல் வீடியோக்களுடன் சேர்த்து நீங்களும் ரீல் செய்யலாம். இதன் நன்மை என்னவென்றால், நீங்கள் யாருடன் ரீமிக்ஸ் ரீல் வீடியோவை (Instagram Remix Reels) உருவாக்குகிறீர்களோ, அவரைப் பின்தொடர்பவர்களும் பார்வையாளர்களும் உங்கள் வீடியோவைக் கவனிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம், அதிகமான மக்கள் உங்கள் வீடியோவைப் பார்க்க முடியும் மற்றும் உங்கள் வீடியோ வைரலாகவும் வாய்ப்பு உள்ளது.
ரீமிக்ஸ் வீடியோக்களில் ரியாக்ஷன் வீடியோ மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. இதில், மக்கள் தங்கள் வீடியோவை பிரபலமான அல்லது வைரலான வீடியோவுடன் ரீமிக்ஸ் செய்வதன் மூலம் எதிர்வினையாற்றுகிறார்கள். இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் எதிர்வினை வீடியோக்கள் மிக விரைவாக வைரலாகும் வாய்ப்புள்ளது. .
ரீல்ஸ் ரீமிக்ஸ் வீடியோவை உருவாக்குவது எப்படி?
– முதலில் வைரலாகி வரும் வீடியோவை தேர்வு செய்ய வேண்டும்.
– இதற்குப் பிறகு வீடியோவின் மூலையில் மூன்று புள்ளிகள் உள்ள ஐகானைக் காண்பீர்கள்.
– மூன்று புள்ளிகள் ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம், ‘Remix This Reel’ என்ற ஆப்ஷனை பார்ப்பீர்கள்.
– இப்போது ஒரு பக்க வீடியோ மற்றும் ஒரு பக்க கேமரா உங்கள் முன் திறக்கும்.
– மறுபுறம், உங்கள் வீடியோவை எடுக்கலாம்.
– இப்போது Preview என்பதில் கிளிக் செய்து வீடியோ சரியாக எடுக்கப்பட்டதா இல்லையா என்பதை பார்க்கவும்.
– வீடியோ சரியாக இருந்தால், அடுத்த ஆப்ஷனை தட்டுவதன் மூலம் உங்கள் கணக்கில் ரீமிக்ஸ் வீடியோவை வெளியிடவும்.