இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2022ஆம் வருடத்திற்கான 26ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம், 8ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கனகசிங்கம் வல்லிபுரமின் ஒழுங்கமைப்பில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா ஞபாகார்த்த மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வு பெற்ற பேராசிரியர் மா. செல்வராஜா தலைமையில் பட்டதாரிகளின் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டு, உறுதிசெய்யப்படும் பொதுப் பட்டமளிப்பு விழா நடாத்தப்படவள்ளது.
இந்நிகழ்வில் இலங்கை, மாலைதீவு மற்றும் தென்ஆசியாவிற்கு உரித்தான உலக வங்கியின் முன்னனி பொருயிலாளரும், மனித அபிவிருத்திக்கான தலைவருமான பேராசிரியர் ஹர்ஷ அதுருபான, இலங்கைக்கான குவைத் நாட்டின் தூதுவர் கலாப் எம். எம். பூ. தாயிர் மற்றும் பொது நலவாய கல்விக்கான பிரதம நிறைவேற்றுத் தலைவரான பேராசிரியர் ஆஷா எஸ் கன்வார் ஆகியோர் பிரதம விருந்தினர்களாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.
இப்பொதுப் பட்டமளிப்பு விழாவின் போது ஒரு கலாநிதிப் பட்டம், 5 கல்வியியல், விவசாய விஞ்ஞானத்தில் 14, ஒரு கல்வியியல், 12கலை, 8 வியாபார நிருவாகம், 13 அபிவிருத்தி பொருளியல் ஆகிய முதுமாணிப் பட்டங்களும், முகாமைத்துவ பட்டப்பின்படிப்பு டிப்ளோமா பட்டம் ஒன்று மற்றும் 213 வைத்தியமாணி, சத்திரசிகிச்சைமாணி, தாதியியல், விஞ்ஞானமாணி, சித்தமருத்துவ சத்திரசிகிச்சை இளமாணி, சிறப்பு விவசாய விஞ்ஞானமாணி ஆகிய இளமாணிப் பட்டங்கள் 1ஆம் நாளில் (07) முதலாவது அமர்வில் வழங்கி கௌரவிக்கப்பட்டு உறுதி செய்யப்படவுள்ளது.
அத்துடன் முதலாம் நாளில் 2ஆவது மற்றும் 3ஆவது அமர்வுகளில் வர்த்தகத்துறை சார்ந்த 274 பட்டங்களும் நுண்கலை சார்ந்த 318 பட்டங்களும், இரண்டாம் நாளில் கல்வியியல் மற்றும் விசேட கலைத் துறைகளில் 501 பட்டங்களும், விஞ்ஞானம் மற்றும் கணனி சார் கற்கைளில் 88, மொழி, தொடர்பாடல் மற்றும் உயிரியல் முறை, முயற்சியாண்மை ஆகிய துறைகளில் 255, வணிகத் துறையில் வெளிவாரியாக 56 ஆகிய எண்ணிக்கைளிலான பட்டங்களும் வழங்கி உறுதிப்படுத்தப்பட்டு கௌரவிக்கப்படவுள்ளன.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 2022ஆம் ஆண்டிற்கான 26ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் மொத்தமாக 1760 பட்டங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.