சென்னை,
திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி சனிக்கிழமைகளில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கூட்டம் நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, திருப்பதியில் தினமும் வழங்கப்படும் நேரம் நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படும் சர்வ தரிசன டோக்கன் (எஸ்.எஸ்.டி) டோக்கன்களை வழங்குவதை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. எனவே, திருப்பதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 7, 8, 14, 15 ஆகிய தேதிகளில் இந்த டோக்கன்கள் வழங்கப்படாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Related Tags :