புதுடில்லி: செப்., மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,62,712 கோடி வசூல் ஆகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: செப்., மாத ஜிஎஸ்டி வசூல் 1,62,712 கோடி ரூபாய் வசூல் ஆகி உள்ளது.
இதில்
சிஜிஎஸ்டி மூலம் ரூ.29,818 கோடியும்
எஸ்ஜிஎஸ்டி மூலம் ரூ.37,657 கோடியும்
ஐஜிஎஸ்டி மூலம் ரூ.83,623 கோடியும்(பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.41,145
கோடியும் சேர்த்து)
செஸ் வரி மூலம் ரூ.11,613 கோடியும்( பொருட்கள் இறக்குமதி மூலம் கிடைத்த ரூ.881 கோடியும் சேர்த்து) அடங்கும்.
2023 செப்., மாத ஜிஎஸ்டி வசூல் ஆனது, கடந்த 2022 செப், மாதம் வசூல் ஆன தொகையை விட 10 சதவீதம் அதிகம் ஆகும்.
4வதுமுறை
2023- 24 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை தாண்டுவது இது நான்காவது முறையாகும்.
செப்., மாதத்துடன் முடிவடைந்த இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிஎஸ்டி மூலம் ரூ.9,92,508 கோடி வசூல் ஆகி உள்ளது. இது கடந்த 2022 -23 நிதியாண்டின் முதல் காலாண்டில் வசூல் ஆன ரூ.8,93,334 கோடியை விட 11 சதவீதம் அதிகம் ஆகும்.
இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ.1.65 லட்சம் கோடி வசூல் ஆகி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement