டில்லி நாடெங்கும் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த பிரசாரம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் தூய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தூய்மை இந்தியா குறித்த பிரச்சாரம் தொலைபேசி உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மத்திய ஜவுளி அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அமைச்சக உதவி இயக்குநர் பூர்ணிமா அந்த அறிக்கையில், ”கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி […]