மீண்டும் போலீஸ் ஆக மாறும் கார்த்தி!

நடிகர் கார்த்தி 'ஜப்பான்' படத்தில் நடித்து முடித்ததை தொடர்ந்து தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் தனது 26வது படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இதுவரை இந்த படத்தின் படப்பிடிப்பு 50 சதவீதம் முடிவடைந்த நிலையில் இப்போது கிடைத்த தகவலின் படி, இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பு சிறுத்தை, சர்தார் ஆகிய படங்களில் போலீஸ் ஆக கார்த்தி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.