டில்லி ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுக்களை மாற்றக் காலக்கெடுவை நீட்டித்துள்ளது. பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் புதிதாக ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்றும், புழக்கத்தில் உள்ள நோட்டுகளை செப்டம்பர் 30-தேதிக்குள் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. எனவே பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தங்களிடம் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொண்டனர். […]