ஆசியப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஸு நகரில் கோலாகலமாக நடந்துவருகிறது. எட்டாவது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் அபாரமாக விளையாடி பதக்கங்களை குவித்தது இந்தியா.
இன்று மட்டும் மொத்தம் 15 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்தியா. ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் ஒரே நாளில் இந்தியா வெல்லும் அதிகப்படியான பதக்கங்கள் இவைதான். இதற்கு முன்பு 2010 குவாங்ஸு ஆசியப் போட்டிகளின் 11 பதக்கங்கள் வென்றிருந்தது இந்தியா.
இன்று இந்தியா வென்ற பதக்கங்களின் பட்டியல் இதோ,
தங்கம்:
ஜொரோவர் சிங், கியான் டேரியஸ் செனாய் மற்றும் பிரித்விராஜ் தொண்டைமான் (ஆடவர் டிராப் ஷூட்டிங் )
அவினாஷ் சாப்ளே (3000 மீட்டர் ஸ்டீப்பிள்சேஸ்)
தஜிந்தர் பால் சிங் தூர் (ஆடவர் குண்டு எறிதல்)
வெள்ளி:
அதிதி அசோக் (கோல்ஃப்)
ஹர்மிலன் பைன்ஸ் (பெண்கள் 1500 மீட்டர்)
அஜய் குமார் சரோஜ் (ஆண்கள் 1500 மீட்டர்)
ஜோதி யாராஜி (100 மீட்டர் தடைஓட்டம்)
ஆண்கள் பேட்மிண்டன் அணி
முரளி ஸ்ரீசங்கர் (நீளம் தாண்டுதல்)
வெண்கலம்:
கியனன் செனாய் (ஆடவர் டிராப் ஷூட்டிங்)
நிக்கத் ஸரீன் (50 கிலோ பிரிவு பெண்கள் பாக்ஸிங்)
நந்தினி அகஸாரா (பெண்கள் ஹெப்டதலான்)
ஜின்சன் ஜான்சன் (ஆண்கள் 1500 மீட்டர்)
சீமா புனியா (பெண்கள் வட்டு எறிதல்)
குறிப்பாக இன்று தடகளத்தில் இரண்டு தங்கப்பதக்கங்களுடன் 9 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.
பதக்கப்பட்டியலில் 53 பதக்கங்களுடன் சீனா, ஜப்பான், தென்கொரியாவுக்குப் பிறகு நான்காவது இடத்தில் உள்ளது இந்தியா!