பிக் பாஸ் சீசன் செவென் தொடங்கிய நிலையில் அதில் இருக்கும் பட்டியலில் பாதி பெயர்கள், “அட இது என்ன புதுசா இருக்காங்களேன்னு” நினைக்க வைத்தாலும், சில பெயர்கள் அப்போ என்டர்டைன்மென்ட்க்கு இனி பஞ்சமே இல்லை நமக்கு! என்று உறுதி அளிக்கிறது.
இந்த லிஸ்டில் முதலில் வகிக்கும் பெயர் கூல் சுரேஷ்!
நடிகர் சிம்புவின் வெறித்தனமான ரசிகர் மற்றும் பல சேட்டைகளின் சொந்தக்காரரான கூல் சுரேஷ் தான் தற்போதைய சோசியல் மீடியாவின் சென்சேஷன். சமீபத்தில் கூட சரக்கு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் தொகுப்பாளினி ஒருவருக்கு, மாலையிட்டு சர்ச்சையில் சிக்கியவர். தனது கருத்துக்கள் மற்றும் செயல்களால் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி கொண்டிருக்கும் சுரேஷ், பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.
2001 ஆம் ஆண்டு சாக்லேட் திரைப்படம் மூலம் அறிமுகமானார். ‘காக்க காக்க’, ‘தேவதையைக் கண்டேன்’ போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார். நடிகர்கள் சிங்கம் புலி மற்றும் சந்தானம் ஆகியோருடன் இணைந்து ஏராளமான நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்திருப்பவர்