ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் விலை உயர்ந்த பிரீமியம் 2023 கோல்டு விங் டூர் பைக்கினை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
ஹோண்டாவின் பிக்விங் டீலர்கள் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ள இந்த பைக் முழுமையாக வடிவமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்பட்ட உள்ளது.
New Honda Goldwing Tour
ஹோண்டா கோல்ட்விங் டூர் பைக்கில் 1833சிசி, 6 சிலிண்டர் ஃபிளாட் என்ஜின் 24-வால்வு கொண்ட என்ஜின் ஆகும். அதிகபட்சமாக 125 bhp மற்றும் 170 Nm டார்க்கை வழங்குகிறது. இந்த பைக்கில் ஏழு வேக இரட்டை கிளட்ச் டிரான்ஸ்மிஷன் (DCT) இணைக்கப்பட்டுள்ளது.
கோல்டு விங் டூர் மோட்டார் சைக்கிள்களில் க்ரீப் ஃபார்வர்ட் மற்றும் பேக் செயல்பாட்டையும் த்ரோட்டில் பை-வயர் சிஸ்டம் போன்ற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டூர், ஸ்போர்ட், எகான் & ரெயின் ஆகிய நான்கு விதமான ரைடிங் மோடுகளுடன் வருகிறது.
பல்வேறு அதிநவீன எலக்ட்ரானிக்ஸ் அம்சங்களை பெற்ற கோல்டுவிங் டூர் பைக்கில் முழுமையான எல்இடி லைட்டிங் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதிகள் வழங்குகிற ஏழு இன்ச் கலர் டிஎஃப்டி டிஸ்ப்ளே, புளூடூத் இணைப்பு, டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஏர்பேக், இரண்டு USB வகை-C போர்ட் உள்ளது.
புதிய ஹோண்டா கோல்டு விங் டூர் விலை ரூ 39.20 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.