கொச்சி: நடிகர் மம்முட்டி லீட் கேரக்டரில் நடித்து இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ள படம் கண்ணூர் ஸ்குவாட். படம் தற்போது சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றுள்ளது. இதனால் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தில் காவல்துறை அதிகாரியாக மம்முட்டி நடித்துள்ளார். வழக்கம்போல அவரது நடிப்பு ரசிகர்களிடையே அதிகமான வரவேற்பை பெற்றுள்ளது. கண்ணூர் ஸ்குவாட்
