சித்தா (தமிழ்)
‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’ படங்களின் இயக்குநர் S.U.அருண் குமாரின் அடுத்தப் படைப்பு ‘சித்தா’. சித்தார்த், நிமிஷா சஜயன், சஹஸ்ர ஸ்ரீ உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட தன் அண்ணன் மகளுக்கும் சித்தார்த்திற்கும் இடையிலான உணர்வுபூர்வமான கதையும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராடும் சித்தார்த்தின் போராட்டமும்தான் இதன் கதைக்களம்.
இறைவன் (தமிழ்)
`வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ படங்களை இயக்கிய ஐ. அஹமது இயக்கத்தில் ஜெயம்ரவி, நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இறைவன்’. சைக்கலாஜிக்கல், க்ரைம் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான இது செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சைக்கோ கொலைகாரனைக் கண்டுபிடிக்கப் போராடும் காவல் அதிகாரியான ஜெயம் ரவியின் விறுவிறுபான கதைதான் இதன்கதைக்களம்.
சந்திரமுகி -2
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் `சந்திரமுகி -2′. ரஜினி நடித்த சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியாகும் இப்படம் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பல வருடங்களாகப் பூட்டியிருந்த அரண்மனையில் பணக்கார ரங்கநாயகி (ராதிகா) குடும்பத்தினர் நுழைகின்றனர். ஆட்கள் நுழைந்த பிறகு, அரண்மனையில் இருந்த சந்திரமுகி ஆவியும், வேட்டையன் ஆவியும் வெளியே வருகின்றன. அதன்பிறகு என்ன நடந்தது என்பதுதான் இதன் கதைக்களம்.
Kannur Squad (மலையாளம்)
ராபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் மம்முட்டி, கிஷோர் குமார், விஜயராகவன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மலையாளப் படம் ‘Kannur Squad’. ஆக்ஷன் – க்ரைம் திரில்லர் திரைப்படமான இது செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
காவல் அதிகாரியாக இருக்கும் மம்மூட்டி மற்றும் அவரது டீம் குற்றவாளி ரவுடி கும்பல்களை எப்படி வேட்டையாடிப் பிடிக்கிறார்கள், அதில் என்னவெல்லாம் நடக்கிறது, மம்முட்டி தனது டீமை எப்படி பயிற்சி அளித்து வழிநடத்துகிறார் என்பதுதான் இதன் கதைக்களம்.
Skanda (தெலுங்கு)
பயோபட்டி ஸ்ரீனு இயக்கத்தில் ராம் பொத்தினேனி, ஸ்ரீ லீலா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் தெலுங்கு திரைப்படம் ‘Skanda’. ஆக்ஷன் அதிரடி திரைப்படமான இது செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கதாநாயகன் ராம் பொத்தினேனி இரண்டு மாநில முதலமைச்சர்களின் மகள்களையும் கடத்திக்கொண்டு செல்கிறார். இதற்கான காரணம் என்ன, யார் இவர், இரண்டு மாநில முதலமைச்சர்களுக்கும் ஹீரோவுக்கும் என்ன சம்பந்தம் போன்ற பல கேள்விகளுக்கானப் பதிலான ஆக்ஷன், அதிரடி நிறைந்த ஒரு ரிவெஞ்ச் கதைதான் இது.
Baanadariyalli (கன்னடம்)
ப்ரீதம் குப்பி இயக்கத்தில் ருக்மணி வசந்த், கணேஷ், ரீஷ்மா நானையா நடிப்பில் உருவாகியுள்ள கன்னட திரைப்படம் ‘Baanadariyalli’. காதல் திரைப்படமான இது செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
காதலித்துத் திருமணம் கொண்டவர்கள் கொஞ்ச காலத்தில் வெறுமையை உணர்கிறார்கள். இதை மாற்ற இயற்கையின் மீது காதல் கொண்ட இருவரும் தங்களின் கனவு சுற்றுப் பயணமான ஆப்பிரிக்காவிற்குச் செல்கின்றன. அங்கு என்ன நடந்தது, அவர்களின் வாழ்வு மீண்டும் அழகாக மாறியதா? என்பதுதான் இதன் கதைக்களம்.
Fukrey 3 (இந்தி)
மிருக்தீப் சிங் லம்பா இயக்கத்தில் புல்கித் சாம்ராட், வருண் ஷர்மா, மன்ஜோத் சிங், ரிச்சா சதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் ‘Fukr3y’. காமெடி கலாட்டாவான இத்திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஈஸியான வழியில் பணக்காரர்களாக வேண்டும் என்று திட்டமிடும் நண்பர்கள், பிஸ்னஸ் செய்ய முயன்று பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் திட்டம் நிறைவேறியதா? என்பதுதான் இதன் கதைக்களம்.
The Vaccine War (இந்தி)
‘தி காஷ்மீர் பைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் நானா படேகர், நிவேதிதா, அனுபம் கெர், கிரிஜா ஓக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Vaccine War’. கோவிட் தொற்று மற்றும் கோவிட் கால மருத்துவ ஆராய்ச்சிகள், தடுப்பூசிகள், கோவிட்டை இந்தியா எதிர்கொண்டது பற்றியதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Peddha Kapu 1 (தெலுங்கு)
ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கத்தில் விராட் கர்ணா, பிரகதி ஸ்ரீவஸ்தவா, ராவ் ரமேஷ், நாக பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் ‘Peddha Kapu 1’. ஆக்ஷன், அரசியல் திரில்லர் திரைப்படமான இது செப்டம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
கிராமத்தில் நடக்கும் அரசியல் குற்றங்களை எதிர்த்துக் கேள்விக் கேட்கும் சாதாரண இளைஞரின் கதைதான் இதன் கதைக்களம்.
Saw X (ஆங்கிலம்)
கெவின் கிரேட்டர்ட் இயக்கத்தில் வெளியாகி ஹாரர் திரில்லர் திரைப்படங்களான ‘Saw’ படத்தின் பத்தாவது பாகம்தான் இத்திரைரப்படம். இத்திரைப்படம் செப்டம்பர் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான படம் இது.
சைக்கோ வில்லானான டோபின் பெல், தனக்கு மருத்துவம் பார்த்த டாக்டர்களைச் சிறைப்படுத்தி அவர்களை கொடுரமான முறையில் டாஸ்க் வைத்து ஒவ்வொருத்தராகக் கொல்கிறார். உயிரோடு இருந்தவர்கள் அந்த கொடூரமான கொலைகாரனிடமிருந்து தப்பிதார்களா? என்பதுதான் இதன் கதைக்களம்.
The Creator (ஆங்கிலம்)
கரேத் எட்வர்ட்ஸ் இயக்கத்தில் ஜான் டேவிட் வாஷிங்டன், மேடலின் யூனா வோயில்ஸ், ஜெம்மா சான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில திரைப்படம் ‘The Creator’. ஆக்ஷன் அட்வன்சர் திரைப்படமான இது செப்டம்பர் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
மனிதர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கும் இடையே நடக்கும் போரைத் தடுத்து நிறுத்த இராணுவ வீரனான கதாநாயகன் போராடுவதும், சிறுமியாக இருக்கும் ரோபோ இதற்கு எப்படி உறுதுணையாக இருந்ததும் என்ற எதிர்காலத்தைப் பற்றிய சயின்ஸ் பிக்ஸன் திரைப்படம் தான் ‘The Creator’.
இந்த வார ஓடிடி ரிலிஸ்கள்
Tumse Na Ho Payega (இந்தி) – Disney+ Hotstar
அபிஷேக் சின்ஹா இயக்கத்தில் இஷ்வாக் சிங், மஹிமா மக்வானா, கௌரவ் பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம் ‘Tumse Na Ho Payega’. நட்பு, காதல் கலந்த இளைஞர்களின் கனவைப் பற்றிய திரைப்படமான இது செப்டம்பர் 29ம் தேதி ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
வேலையை இழக்கும் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து புதிதாக ஒரு பிசினஸைத் தொடங்குகிறார்கள். அதில் வந்த தடைகளையெல்லாம் தாண்டி அவர்கள் வெற்றிபெற்றார்களா? என்பதுதான் இதன் கதைக்களம்.
The Wonderful Story of Henry Sugar (ஆங்கிலம்) – Netflix
வெஸ் ஆண்டர்சன் இயக்கத்தில் ரால்ப் ஃபியன்ஸ், பெனடிக்ட் கம்பெர்பாட்ச், தேவ் படேல் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘The Wonderful Story of Henry Sugar’. புத்தகத்தின் மூலம் எதிர்காலத்தைக் கணிக்கும் கற்பனைத் திறனுள்ள கதாநாயகனின் காமெடி கலந்த அட்வன்சர்கள்தான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Reptile (ஆங்கிலம்) – Netflix
கிராண்ட் சிங்கர் இயக்கத்தில் பெனிசியோ டெல் டோரோ, ஜஸ்டின் டிம்பர்லேக், எரிக் போகோசியன் உள்ளிட்டோரால் உருவாகியுள்ள திரைப்படம் ‘Reptile’. டெடக்டிவ் ஏஜெண்டின் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படமான இது ‘Netflix’ ஓடிடி தளத்தில் செப்டம்பர் 29ம் தேதி வெளியாகியுள்ளது.
Papam Pasivadu (தெலுங்கு) – Aha
லலித் குமார் இயக்கத்தில் காயத்ரி சாகந்தி, ஸ்ரீராம சந்திரா, அசோக் குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு வெப்சீரிஸ் ‘Papam Pasivadu’. 25 வயதான கிராந்தியின் வாழ்க்கையையும், அவன் காதலுக்கான தேடலையும் மையமாகக் கொண்ட இந்த வெப்சீரிஸ் செப்டம்பர் 28ம் தேதி ‘Aha’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
The Swan (ஆங்கிலம்) – Netflix
வெஸ் ஆண்டர்சன் இயக்கத்தில் ‘The Swan’ வெப் சீரிஸ் செப்டம்பர் 28ம் தேதி ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Baba Paraak (தமிழ்) – YouTube
சிவா ஷாரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் அலப்பறையான வெப்சீரிஸ் இது. இந்த வெப்சீரிஸ் ‘யூடிப்பில்’ செப்டம்பர் 29ம் தேதி முதல் வெளியாகிறது.
Kumari Srimathi (தெலுங்கு) – Amazon Prime Video
கோம்தேஷ் உபாத்யே இயக்கத்தில் நித்யா மேனன், கௌதமி, திருவீர், நிருபம், டல்லூரி ராமேஸ்வரி, பிரனீதா பட்நாயக் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு வெப்சீரிஸ் ‘Kumari Srimathi’. காதல், கல்யாணம், வேலை உள்ளிட்டவற்றை மையமாகக் கொண்ட இளம்பெண்ணின் வாழ்க்கைதான் இதன் கதைக்களம். இந்த வெப்சீரிஸ் செப்டம்பர் 28ம் தேதி ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Charlie Chopra The Mystery Of Solang Valley (இந்தி) – SonyLIV
விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் வாமிகா கபி, லாரா தத்தா, நசீருதீன் ஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி வெப்சீரிஸ் ‘Charlie Chopra The Mystery Of Solang Valley’. பணக்காரர் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அந்தக் கொலையைச் செய்தது யார்? அதன் பின்னணி? என்பதே இதன் கதைக்களம். இந்த க்ரைம் திரில்லர் வெப்சீரிஸ் செப்டம்பர் 27ம் தேதி ‘SonyLIV’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Hostel Daze S4 (இந்தி) – Amazon Prime Video
அபினவ் ஆனந்த் இயக்கத்தில் ஆதர்ஷ் கவுரவ், நிகில் விஜய், உத்சவ் சர்க்கார், லவ் விஸ்புடே, சுபம் கவுர், அஹ்சாஸ் சன்னா, ஆயுஷி குப்தா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள வெப்சீரிஸ்.
Choona (இந்தி) – Netflix
புஷ்பேந்திர நாத் மிஸ்ரா இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், நமித் தாஸ், ஞானேந்திர திரிபாதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தி வெப்சீரிஸ் ‘Choona’. காமெடி, க்ரைம், அரசியல் பாணியிலான வெப்சீரிஸான இது செப்டம்பர் 29ம் தேதி ‘Netflix’ ஓடிடி தள்த்தில் வெளியாகியுள்ளது.
Gen V (ஆங்கிலம்) – Amazon Prime Video
இவான் கோல்ட்பர்க், எரிக் கிரிப்கே, கிரேக் ரோசன்பெர்க் ஆகியோரது இயக்கத்தில் ஜாஸ் சின்க்ளேர், சான்ஸ் பெர்டோமோ, லிஸ்ஸே பிராட்வே உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஆங்கில வெப்சீரிஸ் ‘Gen V’. ஆக்ஷன், அட்வன்சர் கலந்த சூப்பர் ஹீரோக்களின் கதையான இது செப்டம்பர் 29ம் தேதி ‘Amazon Prime Video’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
தியேட்டர் டு ஓடிடி
அடியே – SonyLIV
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார், வெங்கட் பிரபு, கௌரி ஜி கிஷன், மதும்கேஷ், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அடியே’. காதல், காமெடி, சையின்ஸ் பிக்ஷன் திரைப்படமான இது திரையரங்குகளில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது ‘SonyLIV’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
வாழ்வில் தனக்கென யாருமில்லை என்று தற்கொலை செய்து கொள்ளப் போகும் ஜி.வி. பிரகாஷ், டிவி-யில் தன் சிறுவயது காதலியைப் பார்த்து மனம் மாறி அவரைத் தேடிச் செல்கிறார். அப்போது அவருக்கு ஏற்படும் ஒரு சின்ன விபத்தால் அவர் ஆசைப்பட்ட வாழ்க்கைக்கே செல்லும் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதை அவர் தக்க வைத்துக்கொண்டாரா, அதில் என்னென்ன பிரச்னைகளை அவர் எதிர்கொண்டார் என்பதுதான் இதன் கதைக்களம்.
கிக் (தமிழ்) – Disney+ Hotstar
பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் அந்தோணி, பிரம்மானந்தம், ராகினி திவேதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் தற்போது ‘Disney+ Hotstar’ ஓடிடி தள்த்தில் வெளியாகியுள்ளது.
King Of Kotha (மலையாளம்/தமிழ்/தெலுங்கு/இந்தி) – Disney+ Hotstar
அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான், ஐஸ்வர்யா லட்சுமி, டான்சிங் ரோஸ் ஷபீர், பிரசன்னா, நைலா உஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் தற்போது ‘Disney+ Hotstar’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
பிரசன்னா, கொத்தா எனும் பகுதிக்குக் காவல் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். அங்கு கேங்ஸ்டராக இருக்கும் கண்ணன் பாய் என்பவரால் பிரசன்னா அவமானத்திற்குள்ளாகிறார். கண்ணன் பாயைத் தீர்த்துக்கட்ட கொத்தாவின் முன்னாள் கேங்ஸ்டராக இருந்த ராஜு பாயை மீண்டும் அழைத்து வருகிறார். ராஜு பாய் கொத்தாவிற்கு வந்து என்ன செய்தார், அவர் யார் என்பதுதான் இதன் கதைக்களம்.
RDX: Robert Dony Xavier (மலையாளம்) – Netflix
நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில்ஆண்டனி வர்கீஸ், ஷேன் நிகம், நீரஜ் மாதவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. கெத்தாக சுற்றும் கல்லூரி படிக்கும் மூன்று நண்பர்களின் அலப்பறையாகச் சுற்றித்திரிகிறார்கள். காதல், நண்பர்கள் என ஜாலியாகச் சுற்றித் திரியும் கதாநயகன், ஒரு ரவுடி கும்பலின் பிரச்னைகளில் தலையிட்டு மாட்டிக் கொள்கிறார். அதன் பிறகு அவரது காதல் என்ன ஆனது, அவரைச் சூழ்ந்திருக்கும் பிரச்னைகளை அவரும் அவரது நண்பர்களும் சமாளித்தார்களா என்பதுதான் இதன் கதைக்களம்.
Gandeevadhari Arjuna (தெலுங்கு) – Netflix
பிரவீன் சத்தாரு இயக்கத்தில் வருண் தேஜ், சாக்ஷி வைத்யா, நாசர், விமலா ராமன், வினய் ராய் உள்ளிட்டோர் நடிப்பில் இத்திரைப்படம் தற்போது ‘Netflix’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஒரு பெரும் தீவிரவாத கும்பலையும், அதன் தலைவனின் திட்டத்தையும் நாசர் மற்றும் அவரது தலைமையிலான காவல் அதிகாரிகள் எப்படி முறியடித்து அவர்களைப் பிடிக்கிறார்கள் என்பதுதான் இதன் கதைக்களம்.
Agent (தெலுங்கு) – SonyLIV
சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் வெளியாகும் இப்படத்தில் அகில் அக்கினேனி, மம்மூட்டி, சாக்ஷி வைத்யா உள்ளிட்ட நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாகிருந்த ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இது தற்போது ‘SonyLIV’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Angshuman MBA (பெங்காலி) – Zee5
அபிஜித் குஹா இயக்கத்தில் பரண் பானர்ஜி, சோஹம் சக்ரவர்த்தி, கௌஷானி முகர்ஜி உள்ளிட்டோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் தற்போது ‘Zee5’ ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
MBA பட்டதாரியான ஹீரோவும், அவரது நண்பரும் சேர்ந்து காதிலில் தோல்வியுற்றவரகளுகாக ஒரு கன்சல்டன்ஸியை வைத்துள்ளனர். காதலை வெறுக்கும் ஹீரோவே காதலில் விழுந்து அதில் ஏற்படும் பிரச்னைகளை சமாளித்து காதலில் வென்றாரா? என்பதுதான் இதன் கதைக்களம்.
Sapta Sagaradaache Ello – Side A
ரக்ஷித் ஷெட்டி, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் Sapta Sagaradaache Ello – Side A. திரையரங்குகளில் வெளியாகி கவனம் பெற்ற திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெயாகியிருக்கிறது.