“பேச்சு சுதந்திரத்தை நசுக்க முயற்சி”: கனடா பிரதமருக்கு எதிராக திரும்பிய எலான் மஸ்க்| Justin Trudeau trying to crush free speech. Shameful : Elon Musk on new Canada order

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: கனடாவில் உள்ள ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் பேச்சு சுதந்திரத்தை நசுக்க முயற்சி செய்கிறது என ‘எக்ஸ்’ சமூக வலைதள நிறுவன தலைவர் எலான் மஸ்க் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்தியா – கனடா இடையிலான மோதலுக்கு இடையில் கனடாவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை எக்ஸ் நிறுவன தலைவர் எலான் மஸ்க் வைத்துள்ளார். இது தொடர்பாக, எலான் மஸ்க் கூறியிருப்பதாவது: கனடாவில் கடுமையாக கருத்து சுதந்திரத்திற்கு எதிரான சட்டங்கள் உள்ளன. உலகிலேயே கருத்து சுதந்திரத்தை முடக்கும் அடக்கும் அரசுகளில் ஒன்றாக ஜஸ்டின் ட்ரூடோ அரசு உள்ளது.

சமீபத்தில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனங்களுக்கு எதிராக கூட அவர்கள் சட்டம் கொண்டு வந்துள்ளனர். உலகிலேயே மிக மோசமான கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விதிகளை கொண்டு வந்துள்ளனர். முக்கியமாக ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் இருக்கும் மக்களின் கருத்து சுதந்திரத்தை நொறுக்கிக்கொண்டு இருக்கிறார். இவ்வாறு மஸ்க் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.