கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம், தலையோலப்பறம்பு அருகே புத்தனுரைக்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணேந்து (27). இவர் சி.பி.எம் கட்சியின் இளைஞர் அமைப்பான டி.ஒய்.எஃப்.ஐ-யின் தலையோலப்பாறம்பு இணைச் செயலாளராக இருக்கிறார். இவரின் கணவர் அனந்து உண்ணி (29), சி.பி.எம் தலையோலப்பறம்பு லோக்கல் கமிட்டி உறுப்பினராக இருக்கிறார். கிருஷ்ணேந்து தலையோலப்பறம்பிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அந்த நிறுவனத்தில் தங்க நகைக்கடன் வழங்குவது போன்ற செயல்பாடுகளும் நடந்துவருகின்றன. அந்த நிதி நிறுவனத்தில் நகைகளைத் திருப்பிய 19 பேரிடம் பணம் வாங்கிய கிருஷ்ணேந்துவும், அவருடன் வேலை செய்யும் தேவி பிரஜித்தும், நகையை வழங்கிவிட்டு அந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்கவில்லை எனவும், அதன் மூலம் ரூ.42.72 லட்சம் கையாடல் செய்ததாகவும் தனியார் நிதி நிறுவன உரிமையாளரான ராகேஷ் தலயோலப்பறம்பு காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தப் புகாரில், “கிருஷ்ணேந்து, அவரின் கணவர் அனந்து உண்ணி ஆகியோர் வங்கிக் கணக்கில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் மூன்று கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது.
இவர்களுக்கு வேறு சில வங்கிகளிலும் அக்கவுன்ட்டுகள் இருக்கின்றன. அவற்றில் எல்லாம் சேர்த்து சுமார் 8 கோடி ரூபாய் அளவுக்குப் பணப் பரிவர்த்தனை நடந்திருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், 2011-ம் ஆண்டு முதல் தலயோலப்பறம்பில் அந்த நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும். நிறுவனம் அங்கு தொடங்கிய நாளிலிருந்து கிருஷ்ணேந்து அங்கு ஊழியராக இருப்பதும் தெரியவந்தது. கிருஷ்ணேந்துவுக்கு மாதம் 16,000 ரூபாய் அடிப்படை சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இதர அலவன்ஸ்கள் எல்லாம் சேர்த்து, மாதம் 25,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.
கிருஷ்ணேந்துவின் கணவர் அனந்து உண்ணி தலயோலப்பறம்பு பஞ்சாயத்தில் தினக்கூலிச் சம்பளத்தில், ஆம்புலன்ஸ் டிரைவராகப் பணிபுரிந்து வந்திருக்கிறார். இவர்களுக்கு வேறு வருமானம் எதுவும் இல்லாத நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் இவர்களது வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது
. கிருஷ்ணேந்து, அவரின் கணவர் அனந்து உண்ணி, தேவி பிரஜித் (35) ஆகியோர் தலைமறைவாக இருப்பதால், அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், எழை பெண்களுக்குத் திருமணம் செய்துவைப்பதற்காக எனக்கூறி, வெட்டுக்காடு ஜங்ஷனிலுள்ள ஒரு நகைக்கடையில் முன்பணம் மட்டும் கொடுத்து, சுமார் 117 பவுன் நகைகளை வாங்கியிருக்கின்றனர் கிருஷ்ணேந்து, அனந்து உண்ணி தம்பதி. ஆனால், அதற்கான மீதித்தொகையான 48 லட்சம் ரூபாயைக் கொடுக்காமல் ஏமாற்றியதாக நகைக்கடை உரிமையாளர் புகாரளித்திருக்கிறார். இவர்கள்மீது மேலும் சில மோசடிப் புகார்கள் வரவிருப்பதாக, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.