Google Pixel 8: இந்த மொபைலுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு… முன்பதிவு தேதி அறிவிப்பு

Google Pixel 8 Series Pre-Sale: இந்தியாவில் Google Pixel 8 Series விரைவில் அறிமுகமாக உள்ளது. பலரும் Pixel 8 மொபைலை இந்தியாவில் பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சூழலில், தற்போது அவர்களுக்கு சர்ப்ரைஸ் தகவல் ஒன்று வந்துள்ளது. 

Pixel 8 Series – எப்போது முன்பதிவு?

Pixel 8 Series தொடர் இந்தியாவில் அறிமுகமான அடுத்த நாளே, அதன் முன்பதிவு தொடங்க உள்ளதாக தெரிகிறது. அதன் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. Pixel 8 Series இந்தியாவில் நாளை மறுதினம் (அக். 4) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மேலும், அதனை அக். 5ஆம் தேதி முதல் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த விற்பனை பிளிப்கார்ட்டில் நடைபெறும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். zeenews.india.com/tamil/photo-gallery/big-deal-for-apple-iphones-in-flipkart-buy-iphone-12-for-just-rupees-17399-463726

வரும் அக். 8 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் அதன் பிக் பில்லியன் டேஸ் விற்பனைக்கு தயாராகி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். பிளிப்கார்ட் நிறுவனம் தினமும் ஸ்மார்ட்போன் தள்ளுபடிகள் மற்றும் விற்பனைகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில், பிளிப்கார்ட்டின் இணையதளம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Google Pixel 8 Series குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அதன் இணையத்தில்,”Pixel 8 Series மொபைல்களின் முன்பதிவு செய்யும் வசதி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும்” என குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய Google Pixel 8 மொபைல்களில் AI மற்றும் இன்னும் மேம்பட்ட பிக்சல் கேமரா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த Pixel 8 மொபைலில் பயனர்கள் Magic Eraser என்ற ஆப்ஷனை பயன்படுத்தி புகைப்படத்தின் பின்னணியில் உள்ள தேவையற்றவையை அகற்றி, புகைப்படத்தை வேற லெவலில் எடிட் செய்துகொள்ளலாம். இது மட்டுமின்றி, Google Photos செயலியில் உள்ள Photo Unblur ஆப்ஷனை பயன்படுத்தி, அவர்களின் புகைப்படங்களில் உள்ள மங்கலான பகுதி மற்றும் மற்ற தேவையற்றவையை அகற்றிக்கொள்ளலாம். 

Pixel 8 Series – கசிந்த தகவல்கள் 

முன்னதாக, Pixel 8 மொபைல் இன்னும் அறிமுகமாவதற்கு முன்பே அதுகுறித்த தகவல்கள் அனைத்தும் இணையத்தில் லீக்காகி உள்ளன. Pixel 8 மற்றும் Pixel 8 Pro என இரண்டு மொபைல்களும் வெவ்வேறு வண்ணங்களில் உள்ளதாக கூறப்படுகின்றன. Google Pixel 8 நான்கு வெவ்வேறு வண்ணங்களில் வரக்கூடும், அதே நேரத்தில் Pixel 8 Pro மூன்று வெவ்வேறு வண்ண வகைகளைக் கொண்டிருக்கும்.

வழக்கமான Pixel மொபைல்களை விட இதில் மாற்றங்கள் உள்ளன. ஆனால் நுட்பமானவை. இரண்டு போன்களும் மெலிதான பெசல்கள் மற்றும் பஞ்ச்-ஹோல் நாட்ச் வடிவமைப்பைக் கொண்டுள்ளன. வரவிருக்கும் மொபைலின் விவரக்குறிப்புகள் சமீப நாள்களாக நெட்டிசன்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது. கசிந்த தகவல்களின்படி, Google Pixel 8 ஆனது 6.17 இன்ச் முழு HD AMOLED டிஸ்ப்ளேவுடன் 120HZ புதுப்பிப்பு வீதம் மற்றும் 2400×1080 பிக்சல் தெளிவுத்திறனுடன் வரும். 

மறுபுறம், அதிக பிரீமியம் பிக்சல் 8 ப்ரோ 3120×1440 பிக்சல் தீர்மானம் கொண்ட 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளேவைக் காணலாம். Google Pixel 8 போலவே, Google Pixel 8 Pro மொபைலும் 120HZ வரை Refresh Rate-ஐ கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.