உலகில் பல்வேறு வகை விலங்குகள் உள்ளன. இவை நமக்கு பல வழிகளிலும் உதவுகின்றன. விலங்குகளை பாதுகாப்பது, அவை வேட்டையாடுவதை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்.,4ல் உலக விலங்குகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. விலங்குகள் நல ஆர்வலரான இத்தாலியின் ‘பிரான்சிஸ் ஆப் அசிசியின் நினைவு நாளை குறிப்பிடும் வகையில் இத்தினம். 1931ல் இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் தொடங்கப்பட்டது.விலங்குகள் வீடு, காட்டு விலங்குகள் என பிரிக்கப்படுகின்றன. பெரும்பாலானவை பாலுாட்டி வகையை சேர்ந்தவை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement