கெய்ரோ: எகிப்து நாட்டில், போலீஸ் தலைமை அலுவலகத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், 38 பேர் காயம் அடைந்தனர். அலுவலகம் சேதம் அடைந்தது.
ஆப்ரிக்க நாடான எகிப்தின் சூயஸ் மாகாணத்தில் உள்ள இஸ்மாய்லியா பகுதியில், போலீஸ் தலைமை அலுவலகம் உள்ளது. பல மாடிகளை உடைய இந்த கட்டடத்தில் நேற்று அதிகாலை திடீரென தீப்பற்றியது. இது மளமள என கட்டடம் முழுவதும் பரவியது.
இதில் சிக்கி, 38 பேர் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் போலீஸ் தலைமையகம் கடுமையாக சேதம் அடைந்தது. பல முக்கிய ஆவணங்கள் தீயில் கருகின. தீ விபத்து தொடர்பான வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படாததால் எகிப்தில், அடிக்கடி தீ விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்டில் கெய்ரோவில் உள்ள சர்ச்சில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 41 பேர் உயிரிழந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement