விருதுநகர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் சீமானுக்குச் சரமாரியாக கேள்விகளை எழுப்பி உள்ளார். இன்று விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள இ.டி.ரெட்டியபட்டியில் ஒரு நிகழ்வில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இன்று கலந்து கொண்டார். அவர் செய்தியாளர்களிடம், ”ஒப்பந்த பணியாளர்களை அரசு அலுவலகங்களில் நியமிக்காமல் நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். சில மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி குறித்து சில கட்சிகள் ஓலமிடுவதைப் போல சீமான் ஓலமிடுகிறார். அவருக்கு தேசிய கட்சிகளை முன்னுக்குப் பின் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/seeman-and-manickam-tagore-e1696334837631.jpg)