வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பெங்களூரு: கனமழை காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், காவிரியில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. காவிரியில் நீர் திறக்கும் அளவு 3,179 கன அடியில் இருந்து 2,592 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா – தமிழகம் இடையே பல ஆண்டுகளாக காவிரி நீர் பிரச்னை நிலவி வருகிறது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பிரிந்துரையின் பேரில், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி சில நாட்களாக 5 ஆயிரத்துக்கும் குறைவான அளவு நீர் திறந்து விடப்பட்டது. கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கே நீர் இல்லை என கர்நாடக அரசு தொடர்ந்து கூறி வந்தது. இந்த நிலையில் கனமழை காரணமாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போது கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணைக்கு 11 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வருகிறது. கபினி, கே.ஆர்.எஸ் ஆகிய இரண்டு அணைகளுக்கும் சேர்த்து 17,200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், காவிரியில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறக்கும் அளவு 3,179 கன அடியில் இருந்து 2,592 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement