![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/NTLRG_20231003155443032910.jpg)
ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ்
பயணம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட பவித்ரா ஜனனி தனது நண்பர்களுடன் அடிக்கடி எங்காவது சுற்றுலா சென்று வருகிறார். இந்நிலையில், தற்போது அவருடன் சேர்ந்து தர்ஷிகா, ஆர்த்தி சுபாஷ் ஆகிய சின்னத்திரை பிரபலங்களும் கொடைக்கானல், பூம்பாறை என ஜாலியாக ட்ரிப் அடித்துள்ளனர். இயற்கை எழில் கொஞ்சும் அருவி மலைகளிலும், கொடைக்கானலில் ஏரியை சுற்றி சைக்கிள் ஓட்டியும் ஜாலியாக எஞ்சாய் செய்துள்ளனர். அந்த புகைப்படங்களானது தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. பொதுவாக பிரபலங்கள் பலரும் மாலத்தீவு, ஸ்ரீலங்கா என காஸ்ட்லியாக டூர் சென்று கொண்டிருக்க இந்த த்ரீ ரோஸஸ் டீம் எப்போதும் உள்ளூரிலேயே எளிமையாக தங்களது சுற்றுலாவை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.