புதுடில்லி: நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக வட மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. டில்லியில் இரண்டு முறை நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
நமது அண்டை நாடான நேபாளத்தில் இன்று( அக்.,03) பிற்பகல் 2.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நில அதிர்வானது நேபாள எல்லையில் உள்ள உ.பி., உத்தரகண்ட் மாநிலத்தின் சில பகுதிகளிலும் டில்லியின் சுற்று வட்டார பகுதிகளிலும் உணரப்பட்டது. டில்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அடுத்தடுத்து 2 முறை நில அதிர்வு உணரப்பட்டது.
இது வலிமையானதாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் வீடுகளில் இருந்த மின் விளக்குகள், மின் விசிறிகள் உள்ளிட்டவை குலுங்கின. இதனால் பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை இல்லை. நில அதிர்வு காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement