டெல்லிக்கு விரைந்த அண்ணாமலை; அதிருப்தி தெரிவித்ததா பாஜக High-Command?!

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையைக் காரணம்காட்டி, பா.ஜ.க உடனான கூட்டணியிலிருந்து வெளியேறியிருக்கிறது அ.தி.மு.க. இந்த விவகாரத்தில் எந்தவிதக் கருத்தையும் தெரிவிக்காமல், மெளனம் காக்கிறது பா.ஜ.க. இந்த நிலையில், கூட்டணி விவகாரங்கள் குறித்து தேசியத் தலைமையுடன் ஆலோசிக்கவும், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முடிவெடுக்கவும், தேசியத் தலைமையின் அழைப்பின்பேரில், அண்ணாமலை டெல்லிக்குச் சென்றிருக்கிறார். அண்ணாமலையின் இந்த டெல்லி விஜயம், அ.தி.மு.க-பா.ஜ.க முகாம்களில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அண்ணாமலை சென்னைக்கு என்ன முடிவுடன் திரும்பப் போகிறார் என்ற கேள்வி, அரசியல் களத்தில் அனலைக் கூட்டியிருக்கிறது.

அண்ணாமலை – எடப்பாடி பழனிசாமி – பாஜக – அதிமுக

அ.தி.மு.க-வுடனான கூட்டணி முறிந்துபோகும் என பா.ஜ.க தேசியத் தலைமை சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. கூட்டணியே இல்லை என அ.தி.மு.க அதிரடித்ததில், விக்கித்துப் போயினர். அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆலோசிக்க அக்டோபர் 2-ம் தேதி மாநிலத் தலைவர் அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்தது பா.ஜ.க-வின் தேசியத் தலைமை. 3-ம் தேதி (இன்று) அண்ணாமலை தலைமையில் சென்னையிலுள்ள கமலாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னைக்குத் திரும்பாதது, பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது.

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

தகவலின்படி, அண்ணாமலை டெல்லியில் தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் பி.எல்.சந்தோஷ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்திருக்கிறார்.

அண்ணாமலை – நிர்மலா சீதாராமன்

அண்ணாமலையின் டெல்லி பயணம் குறித்து நம்மிடம் பேசிய விவரமறிந்த சிலர், “பிரதமர் மோடி, அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் என பா.ஜ.க தலைமைக்கு, அ.தி.மு.க-வோடு இணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், தற்போது இவ்வாறு நிகழ்ந்துவிட்டதால், தேசியத் தலைமை கடும் அப்செட்டில் இருக்கிறது.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

குறிப்பாக அ.தி.மு.க-வை சீண்டவோ, விமர்சிக்கவோ வேண்டாமென ஏற்கெனவே அண்ணாமலைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ச்சியாக அ.தி.மு.க-வை விமர்சித்து, இறுதியில் அண்ணாவையே தொட்டுவிட்டார் அண்ணாமலை. இவையெல்லாமே பா.ஜ.க தேசியத் தலைமையை அதிருப்தியடைய செய்துவிட்டது. ஆனால் மாநிலத் தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க `கூட்டணி வேண்டாம்’ என அறிவித்ததை, அசால்ட்டாகவே கையாளுகிறார். அவர்கள் இல்லையென்றால் என்ன நாம் கூட்டணியை உருவாக்கி, தேர்தலைச் சந்திப்போம் என்ற முடிவில் இருக்கிறார்” என்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள், “அண்ணாமலை மீது கடும் டென்ஷனில் இருக்கிறது பா.ஜ.க தேசியத் தலைமை. டெல்லிக்கு வந்த அண்ணாமலையிடம் ‘இப்படி செய்துவிட்டீர்களே!’ என சீனியர்கள் பாயந்துவிட்டார்கள்.

கூட்டணி முறிவுக்கே காரணமான அவர்மீது இப்போது நடவடிக்கை எடுத்தால், ஒரு மாநிலக் கட்சியின் அழுத்தத்துக்குத் தேசியக் கட்சி பணிந்துவிட்டதாக அர்த்தமாகிவிடும். அதனால்தான் பா.ஜ.க-வின் தேசியத் தலைமை அமைதி காக்கிறது.

அமித் ஷா, மோடி

மேலும் பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர்களின் ஒப்புதலின்றி எந்த புதிய கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என அண்ணாமலைக்கு டோஸ்விட்டிருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலை அ.தி.மு.க இல்லாமல் சந்திக்க பா.ஜ.க ஆயத்தமாக வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருப்பதால், அது தொடர்பான ஆலோசனையில் களமிறங்கியிருக்கிறது பா.ஜ.க தலைமை. அதேசமயம் முறிந்த கூட்டணியை மீண்டும் ஒட்டவைப்பதற்கான முயற்சிகளையும் பா.ஜ.க தேசியத் தலைமை கைவிடவில்லை. வரும் நாள்களில் அண்ணாமலை மேலிடப் பொறுப்பாளர்கள் மற்றும் தேசியத் தலைமையின் கண்காணிப்பிலேயே இருப்பார் என்றும் சொல்லலாம்” என்றனர்.

முன்புபோல் அண்ணாமலையால் செயல்பட முடியுமா… எந்த கூட்டணியில் அங்கம் வகிக்கப்போகிறது பா.ஜ.க என்பதெல்லாம் தெரிந்துகொள்ள பொறுத்திருப்போம்.

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.