மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள மருத்துவமனைகளில் போதிய டாக்டர்கள் மற்றும் மருந்துகள் இல்லாமல் இருந்து வருகின்றன. இதனால் நேற்று நாண்டெட் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 24 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்த எண்ணிக்கை இன்று 31-ஆக அதிகரித்திருக்கிறது. இந்த உயிரிழப்புகள் குறித்து விசாரிக்க முதல்வர் கமிட்டி அமைத்து உத்தரவிட்டிருக்கிறார். இந்த நிலையில், புதிய திருப்பமாக மேலும் ஒரு மருத்துவமனையில் 18 நோயாளிகள் ஒரே நாளில் உயிரிழந்திருக்கின்றனர். ஒளரங்காபாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் புதிதாக பிறந்த இரண்டு குழந்தைகள் உட்பட 18 நோயாளிகள் ஒரே நாளில் உயிரிழந்திருக்கின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் மருத்துவமனை டீன் சஞ்சய் ரத்தோட், “மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும், இறக்கும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. தினமும் 200 நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களில் அவசர சிகிச்சைக்காக வருபவர்களும் அடங்கும். 12 நோயாளிகள் 24 மணி நேரத்தில் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் இரண்டு குழந்தைகள் பிரசவத்தின்போது இறந்தன. இது தவிர 4 பேர் இறந்தநிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர்” என்றார். ஆனால் நோயாளிகளின் உயிரிழப்புக்கு டாக்டர்கள் பற்றாக்குறை மற்றும் கவனக்குறைவே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.
இது தொடர்பாக ஆதித்ய தாக்கரே தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “நாண்டெட் மருத்துவமனை துயரத்துக்குப் பிறகு சாம்பாஜிநகர் (ஒளரங்காபாத்) அரசு மருத்துவமனையிலும் 2 குழந்தைகள் உட்பட 18 நோயாளிகள் உயிரிழந்திருக்கின்றனர். பா.ஜ.க அரசில் சுகாதாரத்துறை வீழ்ச்சியடைந்துவிட்டது. அவர்கள் ஆட்சி நடத்தவேண்டிய அவசியம் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் அசோக் சவான், “நாண்டெட் மருத்துவமனை சாவு எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துவிட்டது. புதிதாக உயிரிழந்தவர்களில் 4 பேர் குழந்தைகள் ஆவர். இந்த சாவுக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்” என்று ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.