சாம்ராஜ்நகர் : ”வரும் 2024 மார்ச் 17ம் தேதியுடன், நான் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகளாகிறது. எனவே, அன்று என் அரசியல் ஓய்வு பற்றி அறிவிப்பேன்,” என சாம்ராஜ் நகர் பா.ஜ., – எம்.பி., சீனிவாச பிரசாத் தெரிவித்தார்.
கர்நாடகா பா.ஜ.,வின் முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் அமைச்சர்கள் ஈஸ்வரப்பா, ஆனந்த் சிங் ஆகியோர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டனர். இந்நிலையில், சாம்ராஜ் நகர் பா.ஜ., – எம்.பி., சீனிவாச பிரசாத் நேற்று அளித்த பேட்டி:
அடுத்தாண்டு மார்ச் 17ம் தேதியுடன், நான் அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகளாகிறது. அன்று என் அரசியல் ஓய்வு பற்றி அறிவிப்பேன். எந்த கட்சிக்காகவும் பிரசாரம் செய்யமாட்டேன். என் குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிட போவதில்லை. இத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்தது போதும். இனி அரசியல் பற்றி பேசப்போவதில்லை.
‘இண்டியா’ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் காங்கிரசுக்கு எதிராக போட்டியிட்டுள்ளன. தற்போது, ‘இண்டியா’ என்ற பெயரில் இணைந்துள்ளனர். எனவே, பா.ஜ., – ம.ஜ.த., கூட்டணி அமைத்ததில் என்ன தவறு.
கலவரம் இப்போது மட்டும் நடப்பதில்லை. மாநிலத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், கலவரம் நடந்து கொண்டே தான் இருக்கிறது. அதுபோன்று ஷிவமொகாவில் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement