மின்சாரப் போக்குவரத்து வாகனங்களை மக்களிடையே பிரபல்யப்படுத்தும் நோக்கில், உள்நாட்டு உற்பத்தியாளர்களின் பசுமை வாகன உற்பத்திக் கண்காட்சி

மின்சாரப் போக்குவரத்து வாகனங்களை மக்களிடையே பரவலாக்கும் நோக்கில், உள்நாட்டு உற்பத்தியாளர்களின் பசுமை வாகன உற்பத்திக் கண்காட்சி போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தனவின் கோட்பாட்டிற்கு இணங்க நடைமுறைப்படுத்தப்படவுள்ள, மக்களிடையே மின்சார வாகனங்களை பிரபல்யப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

போக்குவரத்து அமைச்சின் கீழ் கிராமமொன்று தெரிவு செய்யப்பட்டு பசுமை கிராமமாக அபிவிருத்தி செய்யும் கோட்பாட்டின் கீழ் ஹோமாகம, பிடிபன பிரதேசத்தை அதற்குப் பொருத்தமானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போதும் NSBM பசுமைப் பல்கலைக்கழகம் இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. CINTECH உட்பட மேலும் பல நிறுவனங்கள் அமைந்துள்ளன. அதற்கிணங்க போக்குவரத்து வசதிகளை வழங்கும் சகல மோட்டார் வாகன முறைகளை மின்சாரத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். இலங்கையில் சில நிறுவனங்களுக்கு ஊடாக உற்பத்தி செய்யப்படும் மின்சார துவிச்சக்கர வண்டி உட்பட பல மோட்டார் போக்குவரத்து வாகனங்கள் பாரியளவில் காணப்படுகின்றன.

இப்பிரதேச நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்காக இவ்வாகனங்களை அறிமுகப்படுத்தும் நிலமை காணப்படுகின்றது.

நாடு பூராகவும் 20இருக்கும் அதிகமான நிறுவனங்கள் மின்சார வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு இது தொடர்பாக நடைமுறைப் புரிந்துணர்வு இல்லை. கிலோமீற்றருக்கு செலுத்தக் கூடிய மின்சார வாகனங்கள் தற்போது இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. நாட்டிற்கு எடுத்துக் காட்டாக போக்குவரத்து அமைச்சர் பசுமை மயப்படுத்தல் கோட்பாட்டின் கீழ் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இவ்வாகனங்களின் பயன்பாட்டை அறிமுகப்படுத்த இயலுமானதாகக் காணப்படுகிறது.

இது தொடர்பாக மக்களுக்கு மிகவும் பரவலான புரிந்துணர்வை வழங்கும் நோக்கில் எதிர்வரும் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் பிடபன பிரதேசத்தில் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் பங்குபற்றலில் பசுமை போக்குவரத்து வாகனம் தொடர்பான கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இக்கண்காட்சியில் நிதி அமைச்சு, சுங்கத் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கைத்தொழில் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, கைத்தொழில் அபிவிருத்திச் சபை உட்பட சகல அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களில் தீர்மானம் மேற்கொள்ளும் உயர் அதிகாரிகளுக்கு இது தொடர்பாக பிரயோக அனுபவமொன்றை வழங்குவதற்காக அழைப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக பசுமை பல்கலைக்கழககம், நனோ தொழில்நுட்ப நிறுவனம், மோட்டார் போக்குவரத்து வாகன ஆணையாளர் திணைக்களம், மஹிந்த ராஜபக்ச வித்தியாலயம் உட்பட பிரதேச நிறுவனங்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியின் மின்சார சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் மற்றும் ஏனை வாகன உற்பத்தியாளர்களை அரச நிறுவனங்களில் தலைவர்களின் அவதானத்திற்கு முன்வைத்து விசேட அமர்வொன்றை நடாத்தி அதிகரிக்கும் எரிபொருள் பிரச்சினைக்காகக் ஒரே தீர்வாகக் காணப்படும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் பிரதான நோக்கமாகும்.

இவ்வாறான உற்பத்திகளை அதிகரிப்பதற்காக அரசாங்கம் என்ற வகையில் வழங்க முடியுமான சகல ஒத்துழைப்புக்களையும் இதன்போது வழங்க வேண்டும். அதிகமான வெளிநாடுகளில் இவ்வாறான முறைகள் பின்பற்றப்படுகின்றன. இலங்கையில் இம்மின்சார வாகனங்களின் உற்பத்திக்காக எந்தவொரு உதிரிப்பாகங்களும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்குக் அவசியமின்மை விசேட அம்சமாகும்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் ஏற்பாட்டில் ஏனைய நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்புடன் இடம்பெறும் இக்கண்காட்சியில் “பசுமைக் கோட்பாடு மிகவும் அதிகமாக மக்களைக் கவர முடியும்” என்றும் தான் நம்புவதாக அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன உட்பட அமைச்சின் மேலதிக செயலாளர்கள், அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நிறுவனங்களின் தலைவர்கள் எனப் பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.